தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 april 2015

தலைவர் ஒருவரை ஏற்கும் பண்பு தமிழரிடம் இருக்க வேண்டும்!

நீதிமன்ற பரிந்துரைகளை மீறி மகிந்தவுக்கு சலுகை: ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 04:41.27 AM GMT ]
ஓய்வுபெற்ற முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு பொருத்தமான பணிகளை தவிர வேறு பணிகளில் ஈடுபட்டால், அவரே அதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் வைத்தியசாலையின் புதிய மருத்துவப் பிரிவொன்றை திறந்து வைத்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஓய்வுபெற்ற ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள பரிந்துரைகளையும் மீறி முன்னாள் ஜனாதிபதிக்கு வாகனங்களும் ஏனைய வசதிகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.
எனினும் அவருக்கு 8 க்கும் மேற்பட்ட வாகனங்களும், பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq1J.html

19வது திருத்தத்திற்கு சுதந்திர கட்சி ஆதரவில்லையேல் பாராளுமன்றம் கலைக்கப்படும்: மனோ
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 04:26.34 AM GMT ]
19வது அரசியலமைப்புக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவளிக்காவிட்டால் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய நிறைவேற்று சபை கூட்டம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
இதன் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 19வது அரசியலமைப்பை எதிர்ப்பதற்கான வாய்ப்பு காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
19வது அரசியலமைப்பு திருத்த சட்டம் பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் போது ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்காவிட்டால் அக்கட்சி அரசியலமைப்பிற்கு எதிராக வாக்களிக்கும் சூழ்நிலை காணப்படுவதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
குறித்த கட்சி உறுப்பினர்கள் சிலர் மகிந்த ராஜபக்சவுடன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு மறைமுக மற்றும் நேரடியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரும் நோக்கில் 19வது அரசியலமைப்பிற்கு எதிராக செயற்பட கூடிய சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருடன் இணைந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq1I.html


தலைவர் ஒருவரை ஏற்கும் பண்பு தமிழரிடம் இருக்க வேண்டும்!
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 06:11.20 AM GMT ]
தமிழ் அரசியல் தலைமையில் பலவீனம் பற்றி சர்வதேச சமூகம் நன்கு உணர்ந்துள்ளது. இராஜதந்திரம் மருந்துக்கும் இல்லை என்ற உண்மையை இந்தியப் பிரதமரும் அறிந்ததன் காரணமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அவர் சில புத்திமதிகளைக் கூறிச் சென்றார்.
இவ்வாறு இராஜதந்திரம் இன்மைக்கு தமிழ் அரசியல் என்பது பதவிக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் செய்யப்படுவதாகி விட்டதே காரணமாகும்.
அரசியல் என்பது விழித்திருந்து மக்களுக்காகப் பணி புரிகின்ற ஒரு பெரும் தியாகம். அந்தத் தியாகத்தை பகுதி நேரமாக்கினால் அல்லது நேரம் கிடைக்கும் போது பார்ப்பது என்ற நிலைமைக்குக் கொண்டு வந்தால் எல்லாமுமே பழுதாகி விடும். எனினும் அத்தகையதொரு பழுது நிலை நம் தமிழ் அரசியலில் ஏற்பட்டு விட்டது என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.
உன்னையே நீ அறிவாய் என்ற தத்துவம் மிகவும் முக்கியமானது. முதலில் எங்களிடம் இருக்கக் கூடிய பலவீனம் பற்றி நாம் ஆய்வு செய்யவேண்டும்.
அத்தகையதொரு ஆய்வு நடக்குமாயின் தமிழ் அரசியல்வாதிகளிடம் தற்போது இருக்கக் கூடிய பெரிய பலவீனம் ஒரு தலைமையை-ஒரு தலைவனை ஏற்றுக் கொள்ளுகின்ற மனநிலை இல்லாமையாகும்.
அதாவது, அரசியலில் ஈடுபடுகின்ற எல்லோரும் தங்களைத் தலைவர்களாக்க முயற்சித்தால் அல்லது அந்த நினைப்போடு செயற்பட்டால் அரசியல் என்பது இராஜதந்திரம் அற்றதாகவே இருக்கும்.
இதுவே எங்களிடம் இப்போது இருக்கின்ற நிலைமை. ஆகவே எங்களின் பலவீனத்தை அறிந்து அதைச் சரிப்படுத்தும் போதுதான் எங்களால் எங்களுக்கான உரிமைக்காகப் போராடமுடியும்.
பலவீனமான, ஒற்றுமையில்லாத, ஒரு தலைமைக்குக் கட்டுப்பட்டு செயலாற்ற முடியாத அரசியல் தரப்பால் எந்த சாதனையையும் படைக்க முடியாது என்பது நிறுதிட்டமான உண்மை.
ஆகவே, முதலில் தமிழ் அரசியல் என்பது ஒரு தலைவனுக்கு கீழ் இயங்குகின்ற கடுமையான கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும்.
ஆளுக்கு ஆள் அறிக்கை விடுவது, ஆளுக்கு ஆள் தன்னிச்சையாக செயற்படுவது என்பன அரசியல் கட்டமைப்பை உடைத்து விடுவதுடன் அது எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளின் இராஜதந்திர வியூகங்கள் வெற்றி பெறுவதற்கும் உதவி விடும் என்பதால், தமிழ் அரசியல்வாதிகள் ஒரு தலைமைக்குக் கீழ் இயங்குவதுடன் இறுக்கமான நிபந்தனைகள், விதி முறைகள் என்பவற்றை அனுசரித்து எச்சந்தர்ப்பத்திலும் தான் சார்ந்த அரசியல் அமைப்பு சோடை போகாமல் இருக்கவேண்டும் என்பதில் ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதியும் திடசங்கற்பம் கொள்ள வேண்டும். அப்போதுதான் அரசியல் தலைமை என்பதை பாதுகாக்க முடியும்.
அதேநேரம் தமிழ் அரசியல் தலைமையை ஏற்பவர் தான் நினைத்தபடி செயற்படாமல் அல்லது ஒரு சிலரின் ஆலோசனைப்படி இயங்காமல் தனது அமைப்புக்கு உட்பட்ட ஏனைய அரசியல்வாதிகளுட னும் கலந்துரையாடி முடிவுகளை எடுப்பது, அறிக்கைகளை விடுவது என்ற சிறந்த தலைமைத்துவப் பண்பைப் பேணவேண்டும்.
இதுவே ஒரு தலைவனுக்கு இருக்கக் கூடிய சிறப்பாகும். இத்தகைய தலைமை இருக்கும் போது அந்தத் தலைமைக்குக் கட்டுப்படவேண்டும் என்ற மனநிலையை குறித்த அரசியல்வாதிகளும் கொண்டிருப்பர்.
இப்படியானதொரு சூழ்நிலையிலேயே தமிழ் அரசியல் தலைமை கனகாத்திரமாக இயங்க முடியும்.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq2D.html

Geen opmerkingen:

Een reactie posten