[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 07:10.20 AM GMT ]
கல்முனையில் வயலுக்கு சென்ற தனது கணவரைக் காணவில்லை என மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கல்முனையில் உள்ள 1 சி பிரிவை சேர்ந்த 60 வயதுடைய தாமோதரம் பிள்ளையான் தம்பி என்பவரே நேற்று மாலையிலிருந்து காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல்போன விவசாயி வழமையாக வயலுக்கு சென்று மாலையில் வீடு திரும்பிவிடுவார். ஆனால் நேற்றய தினம் வயலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது மனைவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவரது சைக்கிள் மாத்திரமே கண்டெடுக்கப்பட்டதாகவும் அவரது மனைவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். காணாமல் போனவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியல் பழி வாங்கல்களை அரசாங்கம் நிறுத்தவில்லை: திஸ்ஸ கரலியத்த இராஜினாமா
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 07:44.42 AM GMT ]
புத்தசாசன மற்றும் பொது நிர்வாக அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் திஸ்ஸ கரலியத்த குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்தின் அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் திஸ்ஸ கரலியத்தவுக்கு பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது.
அரசியல் பழிவாங்கல்களை நிறுத்தாமை உள்ளிட்ட சில விடயங்கள் காரணமாக, தாம் பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் பொறுப்பேற்று இராஜினாமா செய்த மூன்றாவது அமைச்சர் இவராவார். இதற்கு முன்னர் உயர்கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க மற்றும் துறைமுக மற்றும் விமான சேகைள் அமைச்சர் பைஸர் முஸ்தபா ஆகியோர் இராஜினாமா செய்திருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkp5C.html
மகிந்தவுக்கு பிரதமராகும் தகுதியில்லை: எரிக் பிரசன்ன
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 08:05.25 AM GMT ]
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் இருந்த முன்னாள் பிரதமர்கள் சிலர் கண் தெரியாதவர்களாகவும்,காது கேளாதவர்களாகவும் இருந்தனர்.
அந்த வகையில் மகிந்த ராஜபக்ச ஒரு சுகதேகியாக இருக்கையில், இவருக்கு பிரதமர் பதவி வழங்குவதற்கு அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkp5D.html
வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 08:47.27 AM GMT ]
தங்களுக்குரிய 5 மாத நிலுவை சம்பளப் பணம் வழங்கப்படாமையினால் கடந்த 17 நாட்களாக காகித ஆலை ஊழியர்களினால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
நேற்று மாலை கைத்தொழில் துறை அமைச்சின் செயலாளர், காகித ஆலை தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஆலையின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இப்போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டதாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.
இப்பேச்சுவார்த்தையின் போது 2015ஆம் ஆண்டிற்காக வழங்கப்பட்டுள்ள 3 மாத சம்பள நிலுவையினை பெற்றுக் கொள்ளும் படியும், 2014 ஆம் ஆண்டிற்கான மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான நிலுவையையும் எதிர்வரும் ஏப்ரல் மாத சம்பளப் பணத்துடன் சேர்த்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சின் செயலாளர் உறுதியளித்தார்
அதன் அடிப்படையில் தொழிற்சங்க தலைவர்கள் மேற்கொண்ட தீர்மானத்தின் அடிப்படையில் இவ் தொடர் போராட்டம் கைவிடப்பட்டதாக காகித ஆலையின் தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தங்களது 3 மாதங்களுக்கான சம்பள நிலுவைப் பணத்தினை ஆர்வமாக இன்று காலை பெற்றுக் கொண்டனர்.
இதேவேளை கடந்த 3 நாட்களாக தொழிலாளர்கள் சிலர் காகித ஆலையின் கூரையின் மேல் ஏறி நின்றும்,டயர்களை எரித்தும் ஆலையின் முகாமைத்துவ நிர்வாகப் பணிகள் முற்றாக இயங்காத படி நிர்வாகப் பிரிவுளின் கதவுகளை பூட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தினை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இனவாதத்தை தூண்டுகிறார் தினேஷ் குணவர்தன
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 09:08.10 AM GMT ]
கொழும்பில் இன்று வெளியான பத்திரிகை ஒன்றில் அவரது இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
17வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்குள் புத்தசாசனத்தை அழிக்கும் சதித்திட்டங்கள் இருப்பதாக தினேஷ் குணவர்தன அந்த பத்திரிகையிடம் கூறியுள்ளார்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் புத்தசாசனத்தை அழிக்கும் சதித்திட்டம் என்ற தலைப்பில் அவரது இந்த செய்தி வெளியாகியிருந்தது.
முற்றும் முழுதான பொய்யான கருத்துக்களை முன்வைத்துள்ள தினேஷ் குணவர்தன மத அடிப்படைவாதத்தை தூண்ட முயற்சித்துள்ளார்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் என்னவொன்று எவருக்கு தெரியாது எனவும் மக்களுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக அரசியலமைப்பில் மாற்றம் செய்யும் நாடு உலகில் எங்குமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினேஷ் குணவர்தன இவ்வாறு கூறியிருந்தாலும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் பத்திரிகைகளில் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளதுடன் இணையத்தளங்களில் கடந்த 17 ஆம் திகதி அந்த திருத்தச் சட்டத்தின் வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், வேண்டும் என்றே பொய்யான தகவல்களை முன்வைத்துள்ள குணவர்தன, திடீரென கொண்டு வரப்பட்ட 18வது திருத்தச் சட்டத்திற்கு இணக்கத்தை வெளியிட்டதுடன் மகிந்த ராஜபக்சவை அரசியலமைப்பு ரீதியான சர்வாதிகாரியாக மாற்றவும் உதவியவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புபட்ட செய்தி - 19ம் திருத்தம் பௌத்தத்தை அழிக்கும் முயற்சியாகவே கருதவேண்டும்!- தினேஸ் - 19ன் விசாரணைகள் இன்றும் தொடர்கின்றன
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkp6B.html
ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமது பிரச்சினைகளை கூறிய வட்டுவாகல் மீனவர்கள்
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 09:37.01 AM GMT ]
பிரதேச மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளும், மீனவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். வட்டுவாகல் களப்பு மிகவும் அசுத்தமாக இருப்பதாகவும் இதனால், மீன்பிடியில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் முறையிட்டுள்ளனர்.
அத்துடன் களப்பு கடல் அரிப்புக்கு உள்ளாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனை தவிர மீனவ கிராமத்திற்கு செல்லும் வீதி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் கடலுக்கு செல்லும் வழியின் குறுக்கே இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.
இராணுவ முகாம் இருப்பது பிரச்சினையல்ல என்ற போதிலும் தமது இலகுவான பயணத்திற்கு வீதி திறக்கப்பட வேண்டும் எனவும் மீனவர்கள் கோரியுள்ளனர்.
இந்த சந்திப்பின் பின்னர், சுனில் அந்துன்நெத்தி உள்ளிட்டோர் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மீனவர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இது சம்பந்தமாக தேடிப்பார்த்து நடவடிக்கை எடுப்பதாக அரசாங்க அதிபர் , நாடாளுமன்ற உறுப்பினரிடம் கூறியுள்ளார்.
இதேவேளை அண்மையில் ஜே. வி. பி உறுப்பினர்கள் நந்திக்கடல் களப்பை சுத்தம் செய்தமை குறிப்பிடத்தது.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkp6E.html
Geen opmerkingen:
Een reactie posten