[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 04:09.01 PM GMT ]
இதனால் அவர் பல நாட்களாக உறங்காத நிலையில் செயற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக நாடாளுமன்ற பாரம்பரியத்தை எடுத்தியம்பும் எம்.என்.கௌல் மற்றும் எஸ்.எல்.சாக்டர் ஆகியோர் எழுதிய நூல்களை சபாநாயகர் வாசித்து வருகிறார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் அரசாங்கத்தில் இணைந்துள்ள நிலையில் நிமால் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சி; தலைவராக இருக்கமுடியாது.
எனவே மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தனவை எதிர்க்கட்சி தலைவராக்க வேண்டும் என்று கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் தினேஸ் குணவர்த்தனவுக்கு ஆதரவு வழங்கும் இடதுசாரி கட்சிகள் மற்றும் விமல் வீரவன்சவின் கட்சி என்பவற்றை எதிர்க்கட்சிகளாக கருதமுடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜேவிபியும் வாதிடுகின்றன.
இதற்கிடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்;புக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார்.
இதேவேளை யார் எதிர்க்கட்சி தலைவர் என்ற தீர்மானத்தை சபாநாயகர் எதிர்வரும் 7ஆம்திகதியன்று அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சுதந்திர கட்சியை வலுப்படுத்தவே அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்: பவித்திரா வன்னியாராச்சி
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 04:12.40 PM GMT ]
தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக இன்று பொறுப்பேற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சுற்றாடல் இராங்க அமைச்சராக இன்று தனது கடமைகளை பவித்திரா வன்னியாராச்சி பொறுப்பேற்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் பெறும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே இராஜாங்க அமைச்சராக பதவியை பொறுப்பேற்றேன். இந்த அமைச்சு ஊடாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வலுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் பவித்திரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkqzD.html
இதயத்தின் இரு அறைகளாக தமிழ் முஸ்லிம் மக்கள் இருக்கவேண்டும்!-கிழக்கு அமைச்சர் துரைராஜசிங்கம்
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 04:18.24 PM GMT ]
கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றுள்ள கல்முனை உவெஸ்லியன் பழைய மாணவரான வைத்திய கலாநிதி எம்.ஏ.எம். பாஸி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று திருகோணமலை சர்வோதயம் மண்டபத்தில் அமைப்பின் தலைவரும் சர்வோதயத்தின் மாகாணங்களுக்கான இணைப்பாளருமாகிய ஜீவராஜ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், உபதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை, இராஜேஸ்வரன் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டதுடன் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் 78-82 பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் துரைராசசிங்கம் தொடர்ந்து பேசியதாவது,
எமது பாடசாலைகள் என்பது எமது தாய்மடிக்கு ஒப்பானவை. அந்த நினைவுகள் நாம் கல்லறையில் சங்கமிக்கும் வரை எம் நினைவில் வந்துகொண்டே இருக்கும். அவற்றை நினைவூட்டும் நிகழ்வுகளும் மிகவும் அருமையானவை. நட்பு என்பது வெறுமனே பழகுவதால் மட்டும் வருவதல்ல. அது உணர்வுகளின் ஒன்றிப்பால் வருவது. நண்பர்கள் என்றாலே ஒரு உரிமை பிறக்கும். தாய் தந்தைக்குப் பிறகு நட்பு என்ற உரிமையே இருக்கின்றது.
அந்தவகையில் நாம் கிழக்கு மாகாணத்தில் இன மதபேதமின்றி நட்புடன் தமிழ் பேசும் மக்களாக வாழ்ந்தவர்கள் இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கப் பெற்ற நாள் தொடக்கம் எமது சிறுபான்மை இனங்களின் சுதந்திரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக் கொண்டிருந்த போது சிறுபான்மை இனங்கள் ஒன்று சேர்ந்தாலே இந்த நாட்டில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று சிறுபான்மை இனங்களின் ஒன்றுமையை எண்ணியவர் தந்தை செல்வா.
பட்டிப்பளை எனும் எமது தமிழ் பிரதேசத்தினை கல்லோயாத் திட்டத்தின் கீழ் பெரும்பான்மை இன மக்கள் குடியேற்றப்பட்ட போது அங்கு தூங்கிக் கொண்டிருந்த எம்மவர்களை தட்டியெழுப்பியவர் வடக்கில் இருந்து வந்த தந்தை. அன்று அவர் பிரதேசவாதம் பார்க்கவில்லை. அவர் தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் ஒற்றுமையுடன் எழுங்கள் என்று கூறினார்.
அதுபோல் நாம் ஒன்றித்து பாராளுமன்றத்தில் தமிழ் பேசும் மக்களின் குரலாக ஒருமித்துச் சென்றோம். பல போராட்டங்களில் நாம் ஒருமித்து அடம்பன் கொடிபோல் திரண்டு நின்றோம். இதனால் அஞ்சியது சிங்கள அரசு. அதன் பின்பே தமிழ் மொழிக்கு சிறப்பு கிடைத்தது.
இதுபோன்று பல விடயங்கள் தமிழ் முஸ்லீம் மக்களின் ஒற்றுமையினால் கிடைத்தது. ஆனால் காலம் எம்மை பிரித்து தூக்கி வீசி அங்கும் இங்குமாக இருந்தோம். அந்நிலை மாறும் காலம் தற்போது மிளிர்ந்துள்ளது.
இதயத்தின் இரு அறைகளாக தமிழ் முஸ்லீம் மக்கள் இருக்க வேண்டும் என்ற செய்தி எமது சமூகங்களுக்குச் செல்லவேண்டும். தமிழ் முஸ்லீம் சகோதரர்கள் தங்கள் பேதங்களை மறந்து கைகோர்த்து செல்கின்ற கனவை நாம் அனைவரும் காணவேண்டும் அதற்காக முயற்சிக்கவேண்டும்.
நாம் அனைவரும் ஒவ்வொரு வகையில் தாய் தந்தையரின் கஷ்டங்களாலேயே வளர்க்கப்பட்டோம். எவ்வாறு இருப்பினும் கல்வி எம்மை உயரத்தில் தூக்கி வைத்தது. அந்த உயர்வினைப் பயன்படுத்தி நாம் எமது சமூகத்திற்கு சேவை புரிய வேண்டும்.
சேவை என்ற ஒன்றுதான் மனிதருக்குத் தேவை. நாம் மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடியதும் அதுதான். தன்னுடைய மனதால் எவன் பெரியவனாக இருக்கின்றானோ அவன் தான் உண்மையான பணக்காரன் ஆகின்றான். நாம் பெற்றிருக்கின்ற படிப்பும் பதவியும் எமது மக்களுக்கு செய்கின்ற சேவையாகத்தான் இருக்கும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தற்போது கிடைத்திருக்கின்ற அமைச்சுகள் தலையில் சூடிக்கொள்ளும் மகுடங்கள் அல்ல. அவை எமது மக்களுக்கு சேவை செய்வதற்கான கருவிகளே.
இந்த நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் சுமைகளில் இருந்து மீண்டு வரக்கூடிய செயற்பாடுகளையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் மேற்கொள்ளும். இந்த நிலையில் இருந்து எப்போதும் பின்வாங்காது என்று தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkqzE.html
Geen opmerkingen:
Een reactie posten