[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 02:26.44 PM GMT ]
சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தி்ல் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் அமர்த்துவது குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வீரவர்தன,
முன்னாள் பிரதமர்கள் அனைவரும் பார்வை குறைபாடுகள் மற்றும் கேட்கும் திறன் குறைந்தவர்களாக காணப்படுகின்றனர்.
இப்படி இருக்கும் போது சிறந்த தேக ஆரோக்கியத்துடன் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அப்படியான பதவியில் நியமிக்கப்படுவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை நிறைவேற்று அதிகாரத்தையும் தேர்தல் முறையிலும் ஒரே நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டதாகவும் பேராசையில் அந்த பதவிகளை பெற்றுக்கொள்ளவில்லை என இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பிரதியமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
முன்னர் வந்த செய்தி - மகிந்தவுக்கு பிரதமராகும் தகுதியில்லை: எரிக் பிரசன்ன
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkqyI.html
இலங்கையின் நிலவரம் திருப்தியளிக்கிறது!- ஐரோப்பிய ஒன்றியம்
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 03:44.26 PM GMT ]
இந்தநிலையில் போர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூறக்கூடிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று இலங்கைக்கு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி உகு ஒஸ்டுடு தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு சேவைக்கான ஆசிய பசுபிக் பிரிவின் பதில் முகாமைப் பணிப்பாளரான ஒஸ்டுடு இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்தார்.
மனித உரிமைகள் விடயத்தி;ல் இலங்கையின் புதிய அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கியமையை போன்று தற்போது செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கில் இருந்து படையினர் அகற்றப்படமாட்டார்கள்: புதிய இராணுவ தளபதி
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 02:14.09 PM GMT ]
வடக்கில் உள்ள இராணுவ முகாம்களும் படையினரும் அகற்றப்படமாட்டாதென புதிய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிறிஸாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
வடக்கில் மீண்டும் கிளர்ச்சி ஏற்படாமல் இருக்க படையினரின் பிரசன்னம் அங்கு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மை பொறுத்தவரை, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தாம் கடமைப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் அங்கு விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் மீண்டும் எழுவதற்கு சாத்தியம் இல்லை.
எனினும் வடக்கு கிழக்கை பொறுத்தவரை படையினர் முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkqyH.html
Geen opmerkingen:
Een reactie posten