19ம் திருத்தச் சட்டம்! 10ம் திகதி வாக்கெடுப்பு
ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். 19ம் திருத்தச் சட்டம் குறித்து பாராளுமன்றில் விவாதம் நடத்தி, சடத்தை நிறைவேற்றுவது குறித்த பாராளுமன்ற வாக்கெடுப்பு இம்மாதம் 10ம் திகதி நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த திருத்தச் சட்டத்தில் மேலும் சில திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நீண்ட கால போராட்டத்தின் பின்னரே 19ம் திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸவை தோற்கடிக்க மாறுபட்ட கொள்கைகளை கொண்டவர்கள் இணைந்து செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்களில் கட்சிக்கு உடன்பாடு கிடையாது என்ற போதிலும் பெரும்பாலும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் 19ம் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/103749.html
மைத்திரி சம்பந்தர் சந்திப்பு.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்படிப்பது தொடர்பில், நீண்ட காலமாக நிலவி வரும் சர்ச்சைகள் குறித்து விவாதிப்பதற்கு இலங்கை ஜனாதிபதி தலைமையிலான உயர்மட்டக் கூட்டம் வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தரின் வேண்டுகோளை அடுத்தே இந்தக் கூட்டம் நடைபெற்றது என அதன் தலைவர் கூறுகிறார்.
இந்தக் கூட்டத்தில் இலங்கை மீனவர்களின் நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும், வட மாகாண சபையும் தமிழக அரசும் இந்த விஷயம் குறித்து பேசி முடிவெடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது எனவும் சம்பந்தர் தெரிவித்தார்.
இந்திய மத்திய அரசுடன் இலங்கை ஜனாதிபதி மீனவர்கள் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்துவார் என்றும், தேவையேற்பட்டால் தமிழகம் செல்லவும் அவர் தயாராக உள்ளார் எனவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூட்டமைப்பின் தலைவர் கூறுகிறார்.
இழுவைப் படகுகளை பயன்படுத்தி கடல் வளங்களை சுரண்டுவது தொடர்பிலான சட்டங்களிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதை முழுமையாக அமல்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதித்து சில முடிவுகள் எட்டப்பட்டன எனவும் சம்பந்தர் தெரிவித்தார்.
இலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினையில் அரசுடன் மீனவர்கள் பிரதிநிதிகள் நடத்தும் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொள்வது இதுவே முதல்முறை.
BBC
http://www.jvpnews.com/srilanka/103759.html
மனைவியும் நாயும் மட்டுமே எனக்கு மிஞ்சியது மகிந்த.
தமது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி முறைப்பாடு செய்கின்ற போதிலும் அவருக்கு 250 பேர் பாதுகாப்பு கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2010ம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமது பாதுகாப்பை நீக்கியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடையில் தமக்கு மனைவி, பிள்ளைகள் மற்றும் வீட்டிலிருந்த நாய் மட்டுமே எஞ்சியதாகத் தெரிவித்துள்ளார்.
எமக்கு செய்தவை தற்போது மஹிந்த ராஜபக்ஸவிற்கு நிறைவிற்கு வருகின்றது போலும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை சரியான பாதைக்கு நகர்த்திவிட்டு, ஓய்வு பெற்றுக்கொள்ளவே தாம் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
ஏனையவர்களைப் போன்று அரசியலிலிருந்து துரத்தப்பட்டதன் பின்னரும் ஆவிகளைப் போன்று மீண்டும் மீண்டும் வரும் பழக்கம் தமக்குக் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
மாற்றம் மக்களுக்கு தேவைப்பட்டது அதனை நாம் செய்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி தேசிய அரசாங்கம் பற்றி இப்போது பிரதமர் பேசுகின்றார் என்ற போதிலும் தாமே முதலில் இவை குறித்து பேசியதாகத் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/103762.html
போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்! UNயிடம் TNAவலியுறுத்து.
இவ்வாறு பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை கொண்டுள்ள முன்னேற்றங்களை ஆராயும்பொருட்டு இலங்கை வந்துள்ள ஐ.நாவின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப்பிடம் நேரில் வலியுறுத்தினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
நேற்று வியாழக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். காலை 7.30 மணியிலிருந்து 8.30 மணிவரை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்புக்குறித்து கருத்து தெரிவித்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் மேலும் தெரிவித்தவை வருமாறு, இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆட்சிபீடத்தில் ஏறிய புதிய அரசு, தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம் என்று வாக்குறுதியளித்துள்ளது.
ஆனால், இந்த வாக்குறுதிகளை செயலில் காட்டுவதில் தாமதம் காட்டுகின்றது இந்த அரசு. எனவே, வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றம், இராணுவக் குறைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல்போனோர் விவகாரம் உட்பட மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கும், இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் இனப்பிரச்சினைக்கும் உடன் தீர்வை வழங்க இந்த அரசு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இதற்கு ஐ.நாவின் அழுத்தம் தொடர்ந்து இருக்கவேண்டும்” – என்று கூட்டாக வலியுறுத்திக் கேட்டுக்கொண்டோம்.
“சர்வதேச அரங்கில் தமிழர் பிரச்சினை ஒலிக்க இலங்கை மீதான ஐ.நா. தீர்மானங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, இலங்கையில் தமிழர் எதிர் நோக்கிய அவலங்களுக்கு ஐ.நா. நீதியைப் பெற்றுக்கொடுப்பதுடன் நிரந்தர அரசியல் தீர்வையும் பெற்றுக்கொடுக்கவேண்டும்” – என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.- என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
http://www.jvpnews.com/srilanka/103766.html
Geen opmerkingen:
Een reactie posten