தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 april 2015

பல்கலைக்கழக மாணவர்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் குறித்து ஜேவிபி கண்டனம்



பிரான்ஸ் தமிழீழ மக்களால் வெள்ளைத் தமிழச்சி என அழைக்கப்பட்டவர் மரணம்
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 12:46.37 PM GMT ]
பிரான்ஸ் தமிழீழ மக்களால் வெள்ளை தமிழச்சி என்றழைக்கப்பட்ட பவுல் லுயிய் வியோலெத் (Paula Lugi Violette) மரணமடைந்துள்ளார்.
வெள்ளை இனத்தைச் சேர்ந்த பவுல் லுயிய் வியோலெத் அவர்கள் ஈழத்தமிழ் மக்களுக்காகவும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட படுகொலைக் கெதிராகவும் தனது தள்ளாத வயதிலும் குரல் கொடுத்து வந்துள்ளார்.
இதன்காரணமாக பிரான்சு வாழ் ஈழத்தமிழ் மக்களால் வெள்ளை தமிழிச்சி என்று அழைக்கப்பட்டார்.
நீண்ட காலமாய் தமிழர்களின் உரிமைப் போராட்டங்களில் கலந்து கொண்டு, ஈழத்தமிழர்களுக்காய் குரல்கொடுத்து வந்துள்ளார்.
பிரான்ஸ் தொட்டு ஜெனீவா முன்றல் வரை விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டவர் என பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.

எம்.பி பதவியை வழங்குமாறு கோரி சரத் பொன்சேகா சார்பில் மீண்டும் மனுதாக்கல்
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 12:57.31 PM GMT ]
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என கோரி உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க 98 ஆயிரம் வாக்குளை வழங்கிய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் அவருக்கு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு அறிவிப்பாணை அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் செயலாளரான ஓய்வுபெற்ற இராணுவ கப்டன் கலாநிதி சேனக்க டி சில்வா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
சிரேஷ்ட சட்டத்தரணிகள் எஸ்.பி. ஸ்ரீகாந்தன் மற்றும் நந்த டி சில்வா ஆகியோர் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் குறித்து ஜேவிபி கண்டனம்
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 01:01.32 PM GMT ]
பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தமைக்கு மக்கள் விடுதலை முன்னணி கண்டனம் வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்ததாக மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.
கடந்த அரசாங்கமும் மாணவர்கள் மீது இவ்வாறு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டதாக அம்முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனவரி மாதம் 8ஆம் திகதி இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இவ்வாறான விடயங்களில் இருந்து மாற்றத்தை எதிர்பார்த்தே வாக்களித்தார்கள்.
எனினும் தற்போதைய அரசாங்கமும் அதே தவறை செய்திருப்பது கவலைகுரிய விடயமாகும் என மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyETVSUkp0I.html

Geen opmerkingen:

Een reactie posten