தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 april 2015

தலைக்கவசத் தடைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கூட்டமைப்பை பதிவு செய்வது சாத்தியமில்லை: செல்வம்
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 11:44.59 AM GMT ]
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தனியொரு கட்சியாக பதிவு செய்வது தற்போதைய சூழலில் சாத்தியமில்லை என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளுக்குமிடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றது.
இது தொடர்பாக லங்காஸ்ரீ வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


மகிந்த - மைத்திரி இணையும் அறிகுறி!
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 11:49.40 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் எதிர்வரும் நாட்களில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணைக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இவ்வாறான சந்திப்பானது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியாக அமையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மிக விரைவல் இந்தப் பேச்சு நடைபெறும் எனவும் பெரும்பாலும் கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெறலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்க உலக நாடுகளுக்கிடையில் போட்டி: ரவி கருணாநாயக்க
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 11:55.59 AM GMT ]
இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல்வேறு நாடுகள் இலங்கையின் அபிவிருத்தியை மேம்படுத்த தேவையான நிதியுதவிகளை வழங்குவதற்கு போட்டி போட்டு வருவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்ற கல்லூரியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ரவி கருணாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கம் எடுத்துள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு வழங்க தயாராகியுள்ளன.
இலங்கைக்கு குறைந்த வட்டியில் கடன் மற்றும் வட்டியற்ற கடன் உதவிகளை வழங்க இந்நாடுகள் முன்வந்துள்ளன.
அதாவது நூற்றுக்கு 0.5 வீதம் மற்றும் 1 வீத வட்டி வீதங்களில் கடன் உதவிகளை வழங்குவதற்கு சில நாடுகள் முன்வந்துள்ளன.
இதன்படி உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, தென்கொரியா, சவூதி அரேபியா, கட்டார் உள்ளிட்ட நாடுகள் கடனுதவி வழங்க முன்வந்துள்ளன என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு எதிராக முறைப்பாடு
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 12:11.43 PM GMT ]
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இந்த முறைப்பாட்டை குறித்த ஆணைக்குழுவின் தவிசாளர் டி.ஜே.டி.எஸ்.பலபட்டபெந்தியிடம் கையளித்துள்ளார்.
குறித்த பணிப்பாளர் மீது கடந்த 2002ம் ஆண்டு இரு அரச திணைக்களங்களில் சம்பளம் பெற்று கொண்டுள்ளார் என குற்றம் சுமத்தபட்டுள்ளது.
அத்துடன் அவர் சட்டமா அதிபர் திணைக்களத்திலும், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிலும் ஏககாலத்தில் கடமையாற்றினார் என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தலைக்கவசத் தடைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 12:29.42 PM GMT ]
முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு இன்றைய தினம் மாத்தறை பௌத்த இளைஞர் கழகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போர் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிய நாளை முதல் தடை விதிக்கப்படும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில் கொழும்பு காலி முகத்திடலில் போராட்டமொன்றும் நடத்தப்பட்டது.
இந்நிலையிலேயே குறித்த தடைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர், பொலிஸ் ஊடக பேச்சாளர் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த வருடம் இந்த தலைக்கவசங்களை அணிய கூடாது என தடை பிறப்பிக்கப்பட்டதினால் சாதாரண தலைக்கவசங்களின் விலை உயர ஆரம்பித்தமையையடுத்து அத்தடை மீளப்பெற்று கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyETVSUkp0F.html

Geen opmerkingen:

Een reactie posten