தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 12 april 2015

பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றிய மாநாட்டில் சிங்கள அமைச்சர் ?

இன்றைய தேதிக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால், உடனே சிங்கள அரசுடன் தொடர்புபடுத்துப் பேசி அவரை ஒரு துரோகியாக காட்டுவது வழக்கமான ஒரு விடையம் ஆகிவிட்டது. லண்டனில் பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் இணைந்து ஒரு மாநாட்டை நடத்த இருக்கிறார்கள். அதில் இலங்கை அமைச்சரான சுவாமிநாதன் கலந்துகொள்ள இருந்தார். இலங்கையில் அவர் , இந்து விவகார அமைச்சராக இருப்பதால் அவரை அழைக்கலாம் என்று பிரித்தானிய சைவ திக்கோயில் ஒன்றியத்தின் நிர்வாகிகள் கருதியுள்ளார்கள். இதற்கான விளம்பரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் நிர்வாகத்தினர் மீது அதிருப்த்திகொண்ட குழு ஒன்று, “சிங்கள அமைச்சர்” இந்த விழாவில் கலந்துகொள்வதாக பிரச்சாரங்களை முடுக்கிவிட ஆரம்பித்துவிட்டது. அமைச்சர் சுவாமி நாதன் எப்போது சிங்களவரானார் என்று தெரியவில்லை. தமது காழ்ப்புணர்வுகளை வெளிக்காட்ட , சிலர் எதனையும் பயன்படுத்திக்கொள்வார்கள். அதுபோக லண்டனில் இருந்து வெளியாகும் "ஒரு பேப்பர்" என்னும் பத்திரிகை 250 பவுன்டுகளை சுளையாக வாங்கிக்கொண்டு இந்த விளாவுக்கான விளம்பரத்தைப் போட்டுள்ளார்கள். பின்னர் சிங்கள அமைச்சர் வருகிறார் என்ற , அந்த செய்தியையும் தமது பத்திரிகையில் போட்டு சேம் சைட் சில்பாங்கி கோல் அடித்துள்ளார்கள்.
ஒரு பேப்பர் இவ்வாறு தமிழர்களின் காலை வாருவது இதுதான் முதல் தடவை அல்லவே , என்கிறார்கள் நிர்வாகத்தில் உள்ள பிரமுகர்கள். தமக்கு பிடிக்காத நபர்கள் மீது சேறு பூச சிலர் இலங்கை அரசையும் , சிங்களத்தையும் பாவிக்க தவறுவதே இல்லை. இவர்கள் எமது போராட்டத்தையும் சேர்த்து தான் கொச்சைப்படுத்துகிறார்கள் என்பது இவர்களுக்கு புரிகிறதா இல்லையா என்பது தான் தெரியவில்லை. தற்போது அதிர்வு இணையத்திற்கு கிடைக்கப்பெற்ற செய்திகளின் அடிப்படையில் , பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றிய மாநாட்டில் இலங்கை அமைச்சர் சுவாமி நாதன் கலந்துகொள்ள மாட்டார் என்று அறியப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/2861.html



Geen opmerkingen:

Een reactie posten