[ ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2015, 04:05.05 PM GMT ]
அதேநேரம் ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழகத்தின் விறகு சேகரிப்போர் விடயம் காரணமாக தமிழகத்திலும் இந்த விடயம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 24ஆம் திகதி சென்னையில் இடம்பெற்ற பேச்சின்போது தமிழக மீனவர்கள் முன்வைத்த யோசனையை கொழும்புக்கு எடுத்துச்சென்ற இலங்கை மீனவர்கள் தமக்குள் பேசிய பின்னர் பதில் வழங்குவதாக தெரிவித்திருந்தனர்.
எனினும் அதற்கான எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை அது 100 நாள் வேலைத்திட்டத்தின் முனைப்பாக இருக்கிறது என்று இலங்கை மீனவர்களின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் தலைவர்கள் வடக்கு கிழக்கின் தமிழ் மீனவர்கள் விடயத்தில் உரிய அக்கறை செலுத்துவதில்லை.
இந்தநிலையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போதுதான் அவர்கள் இதனைப்பற்றி பேசுவார்கள் என்று மீனவ தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.’
http://www.tamilwin.com/show-RUmtyESWSUkw3I.html
சூழ்ச்சிகளை மேற்கொள்பவர்கள் அல்ல நாங்கள்: கோத்தபாய- ஆயுதக் கப்பல் அறிக்கை நாளை வெளியாகும்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2015, 04:11.11 PM GMT ]
நடந்த முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது இராணுவ சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது எனத் தெரிவித்துள்ள அவர் தாம் மக்களின் தீர்ப்பிற்கு மரியாதை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சூழ்ச்சி முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ள அவர், மோசடிகள் செய்ததாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களிலும் எவ்வித உண்மையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை சீசெல்ஸில் வங்கிக் கணக்குகள் என்று தனக்கு எதுவும் இல்லை என்று சுட்டிக்காட்டிய கோத்தபாய, தனக்கு இலங்கையிலேயே வங்கிக் கணக்குகள் காணப்படுவதாகவும், அமெரிக்காவில் ஒரு கணக்கு இருந்ததாகவும் பின்னர் அதனை மூடி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடைபெற்ற தினமன்று இரவு அலரி மாளிகையில் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாகவும்,இராணுவப்புரட்சி பற்றி தாம் எதனையும் பேசவில்லை என்றும் தேர்தலின் பின்னர் நாட்டின் ஸ்திரத்தன்மை பற்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துமே இதன் போது பேசப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சரத்பொன்சேகா பற்றி குறிப்பிட்டுள்ள கோத்தபாய,
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கைது செய்ய தாம் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், சரத் பொன்சேகாவை வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்காது இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைப்பதற்கு ஏதேனும் வழிமுறை உண்டா என ஆராயுமாறு தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கேட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புலிகளுக்கு எதிராக போராட்டத்தை நடத்திய அனைத்து படையினரும் போற்றப்பட வேண்டியவர்கள். அந்த வகையில் சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஸல் பட்டத்தைப் போன்று எமது இராணுவ வீரர்களும் கௌரமளிக்கப்பட வேண்டியவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோத்தாவின் ஆயுதக் கப்பல் அறிக்கை நாளை வெளியாகும்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவின் தலைமையின் கீழ் நடத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதக்கப்பல் தொடர்பிலான அறிக்கை நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் இந்த அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.
இந்த ஆயுதக்கப்பல், கடந்த ஜனவரி மாதத்தி;ல் காலிதுறைமுகத்தில் வைத்து கைப்பற்றப்பட்டது. இதன்போது அதில் இருந்து பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
பின்னர் அவைää எவென்ட்காட் தனியார் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுதங்களே என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிறுவனம் சர்வதேச கடற்பரப்பில் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கிவந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த கப்பல் தொடர்பில் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின்படி கோத்தபாய ராஜபக்ச உட்பட்ட பலரின் கடவுச்சீட்டுக்கள் முடக்கப்பட்டுள்ளன.
எந்த ஆட்சி வந்தாலும் கிராமத்துக்கு ஒரு வேலைத் திட்டம் நடைபெறும்:யோகேஸ்வரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2015, 04:35.55 PM GMT ]
எந்த ஆட்சி வந்தாலும் கிராமத்துக்கு ஒரு வேலைத் திட்டம் நடைபெறும் என்பதை யாரும் மறக்க முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் நிதியில் கிராமத்துக்கொரு வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு வாகரை பிரதேச செயலாளர் செல்வி.ஆர்.இராகுலநாயகி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் மாங்கேணியில் வீதி அமைப்பு, காயான்கேணியில் வீதி அமைப்பு, இறாலோடையில் வீதி அமைப்பு, பனிச்சங்கேணியில் மதகு அமைப்பு (கல்வெட்டு) ஆகிய திட்டங்களுக்கான ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களை போல் அரசசார்புடைய அரசியல்வாதிகளுக்கு ஒரு இலட்சம், ஐம்பதாயிரம் ரூபாய் என்று பணம் வழங்கியது போல் இவ்வருடம் எவருக்கும் இலஞ்சம் வழங்கக் கூடாது என்றும், அரசியல் வாதிகளின் ஆதரவாளர்களுக்கு குத்தகைக்கு கொடுக்கும் நிலை தற்போது இல்லை என்றும்,
பொதுமக்கள் தங்களது பகுதி வேலைத் திட்டங்களை அரசாங்கத்தின் பத்து இலட்சம் ரூபாவுடன் மேலதிமாக இரண்டரை இலட்சம் மக்கள் பங்களிப்பையும் வைத்து சிறப்பாகவும், உறுதியாகவும், வேலைத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
எந்த ஆட்சி வந்தாலும் கிராமத்துக்கு ஒரு வேலைத் திட்டம் நடைபெறும் என்பதை யாரும் மறக்க முடியாது. இதற்கான இவ்வேலைத் திட்டம் உங்களது பகுதி சார்ந்த அரசியல் வாதிகளால் தான் எங்களுக்கு கிடைத்தது என கருத வேண்டாம் எனவும், இது இலங்கை முழுவதும் கிராமத்துக்கு ஒரு வேலைத் திட்டம் என்ற வகையில் மக்கள் பங்களிப்புடன் நடைபெறுவது எனவும் எடுத்துக் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyESWSUkw4B.html
Geen opmerkingen:
Een reactie posten