தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 12 april 2015

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த சிங்கள மொழியிலும் கையெழுத்துப் போராட்டம்!

19வது திருத்தத்தால் பிரதமரின் அதிகாரம் வலுப்பெறாது: பிரதி வெளிவிவகார அமைச்சர்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2015, 12:13.28 PM GMT ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களில் திருத்தங்களை மேற்கொள்வது மற்றும் தேர்தல் முறை சீர்த்திருத்திற்கும் இடையில் முக்கியமான தொடர்புகள் இருக்கும் என்பதை நம்பமுடியாது என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். 
தேர்தல் முறை சீர்த்திருத்தத்தை துரிதமாக முன்வைக்க முடியுமாயின் அதனையும் நிறைவேற்ற முடியும். எவ்வாறாயினும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர், குறித்த திருத்தச் சட்டத்தில் பந்திகள் நீக்கப்பட்டன.
இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தால், பிரதமரின் அதிகாரம் வலுவடையும் நிலைமை காணப்படவில்லை எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyESWSUkw3A.html


அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த சிங்கள மொழியிலும் கையெழுத்துப் போராட்டம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2015, 01:52.28 PM GMT ]
இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தக் கோரும் கையெழுத்துப் போராட்டம் சிங்கள மொழியிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கை தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச் சபையின் விசாரணைக்குழு அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ற் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கபடும் நிலையில், 
இலங்கையை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து பரிந்துரைக்குமாறு கோரி ஐ.நாவை நோக்கிய பத்து இலட்சம் கையெழுத்தினை பெறும் போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
புலம்பெயர் நாடுகளில் மக்கள் கூடுகின்ற பொது இடங்களில் கையெழுத்தினை மக்களிடத்தில் நேரடியாக பெறும் செயற்பாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் என பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேரடியாகவும் இணைய மூலமாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் இக்கையெழுத்துப் போராட்டமானது பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் ஒன்றாக சிங்கள மொழியிலும் http://tgte-icc.org/singal.html முன்னெடுக்கப்பட்டுள்ளமையானது, தென்னிலங்கையில் கடும் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்குப் முற்றிலும் எந்தப் பொறுப்பேற்பும் இல்லை என்பதால், இலங்கையைில் தற்போதைய சூழ்நிலை ஐ.நா.சாசனம் அத்தியாயம் 7 பிரிவு 39 இன் கீழ் 'அமைதிக்கான அச்சுறுத்தல்' தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையை உள்ளடக்கியதாக இருக்கிறது' என்று இந்த கையொப்ப மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyESWSUkw3D.html

Geen opmerkingen:

Een reactie posten