தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 april 2015

விருப்பு வாக்கு முறையிலேயே அடுத்த தேர்தல்!– பிரதமர் ரணில் தெரிவிப்பு

மகிந்த சார்பு குழுவினர் பந்துல குணவர்தன வீட்டில் இரகசிய பேச்சு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 12:41.57 PM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அணியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் வீட்டில் சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இரத்தினபுரியில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் பந்துலவின் வீட்டுக்கு சென்றிருந்தனர். நாமல் ராஜபக்ச, உதித்த லொக்குபண்டார உட்பட பலர் அங்கிருந்தனர்.
இங்கு கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன, சகல குற்றங்களையும் கடந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்களே செய்துள்ளனர்.
அப்படி குற்றம் சுமத்தினால், அது ராஜித மற்றும் சம்பிக்க போன்றவர்களுக்கும் பொருந்தும் என பந்து குணவர்தன கூறினார்.
அதேவேளை அங்கு பேசிய மற்றுமொரு உறுப்பினர், எமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டால் என்ன செய்வது என்று வினவினார்.
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் தயார் நிலைகள் கட்சியில் காணப்படவில்லை என மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
நாம் எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும். அதுவும் உண்மையான எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும் என மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் யோசனை முன்வைத்தார்.
நாடாளுமன்றத்தில் 5 நிமிடம் பேசும் எதிர்க்கட்சியாக இருக்கக் கூடாது. மக்கள் பக்கம் இருக்கும் எதிர்க்கட்சி அணியாக நாம் மாறவேண்டும்.
அரசாங்கத்திற்கு எதிராக நாங்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்த வேண்டும். ஒரு வருடத்தின் பின்னர் நாம் இந்த போராட்ட திட்டத்தை ஆரம்பிப்போம் என பந்துல குணவர்தன யோசனை முன்வைத்ததுடன் அதனை சகலரும் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மகிந்த அரசு போதுமான அளவிற்கு மக்களின் சொத்துக்களை சூறையாடியுள்ளது: ஹரின்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 12:44.28 PM GMT ]
மகிந்த அரசாங்கத்தினர் ஆட்சியில் இருக்கும்போதே தமக்கு தேவையான அளவிற்கு மக்களின் சொத்துக்களில் இருந்து சூறையாடியுள்ளனர் என்று  ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்தி என்ற போர்வையில் கடந்த அரசாங்க அதிகாரிகள் பணத்தை வீண்விரயம் செய்திருப்பதற்கும் சூழல் பாதுகாப்பு குறித்து அக்கறை செலுத்தத் தவறியிருப்பதற்கும் எதிராக வழக்கு தொடரப்போவதாக குறிப்பிட்டுள்ள அவர்,
ஆட்சியில் இருக்கும் போதே தமக்கு தேவையான அளவிற்கு மக்களின் சொத்துக்களில் இருந்து சூறையாடியுள்ளனர் மகிந்த அரசாங்கத்தினர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில் பணத்தை வீண் விரயம் செய்தமை மற்றும் சூழலை மாசுபடுத்தியமை தொடர்பாகவும் கடந்த அரசாங்க அதிகாரிகள் மீது வழக்கு தொடரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

டைனோசர் அழிந்ததைப் போல் ரணிலும் அரசியலில் அழிந்து போவார்! சம்பிக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 01:47.03 PM GMT ]
19வதுஅரசியலமைப்பு திருத்த சட்டத்தில் பிரதமருக்கு அதிகமான அதிகாரங்களை பெற்றுக்கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க சூழ்ச்சி செய்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். 
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று ஒளிபரப்பாகிய அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
தொடர்ந்து அவ்விவாத நிகழ்ச்சியில் பேசிய அவர்,
ரணிலின் இவ்வாறான முயற்சியை தோற்கடிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.ஜனாதிபதியினை ஒரு பொம்மையாக்கும் திருத்த சட்டத்தை கொண்டுவர ரணில் தயாராகி வருகிறார்.
இந்த திருத்த சட்டத்திற்கு எதிராக நான் அமைச்சரவையில் கருத்து வெளியிட்ட பின்னர்,பிரதமர் உயர் நீதிமன்றத்திடம் வேறு ஒரு திருத்த சட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.இந்த திருத்த சட்டம் சட்டவிரோதமானது.
அரசியல் அமைப்பு திருத்த சட்டம் ஒன்று ஏழு நாட்களுக்கு முன் வர்த்தமானியில் வெளிடப்பட்டு அதனை மக்களுக்கு அறியத்தரவேண்டும்.
அரசியல் அமைப்பு பற்றி நன்கு அறிந்த திறமைவாய்ந்த சட்டத்தரணியான ரணில்விக்கிரமசிங்க இலங்கையின் முக்கியமான சட்டத்தை மீறியிருக்கிறார்.
இதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். ஜனாதிபதியின் தன்னிச்சையான அதிகாரங்கள் மாத்திரமே நீக்கப்படவேண்டும்.
ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் சமர்ப்பித்த திருத்த சட்டத்திற்கு அமைய பிரதமருக்கு மறைமுகமான அதிகாரங்கள் கிடைக்கின்றன.
ஒரு நாட்டில் இரண்டு தலைவர்கள் இருக்க முடியாது. ரணில் கூட்டு அரசியல் இணக்கப்பாட்டை கவனத்தில் கொள்ளாத நடவடிக்கைகளை கையாளுகின்றார்.
இவ்வாறு ரணில் நடந்து கொண்டால் டைனோசர் எவ்வாறு அழிந்ததோ அவ்வாறே ரணிலும் அரசியலில் இருந்து அழிந்து போவார் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ரணில் மறுப்பு
அதேவேளை சம்பிக்க ரணவக்கவின் மேற்போன்ற குற்றச்சாட்டுக்களை மறுக்கும் ரணில் விக்ரமசிங்க, தான் தன்னிச்சையாக திருத்தங்களை செய்யவில்லை என கூறியுள்ளார்.
அமைச்சரவையின் அனுமதியுடனேயே 19வது திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
சம்பிக்க ரணவக்க இதனை அறிவார்.சம்பிக்க எழுப்பிய கேள்விகள் தொடர்பாக ஜனாதிபதியின் அரசியலமைப்பு விவகார ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்திரணி ஜயம்பதி விக்ரம ரட்ணவும்,சட்டமா அதிபரும் சட்டவாக்க அதிகாரிகளும் சம்பிக்கவுடன் கலந்துரையாடினர்.
அந்த திருத்தத்தினையே உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பிக்க ரணவக்கவிற்கு பதிலளிக்கும் விதமாக இவ்வாறு கூறியுள்ளார்.

விருப்பு வாக்கு முறையிலேயே அடுத்த தேர்தல்!– பிரதமர் ரணில் தெரிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 02:36.24 PM GMT ]
அடுத்து நடைபெறும் பொதுத் தேர்தல் விருப்பு வாக்கு முறைக்கு அமையவே நடைபெறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 
தேசிய நிறைவேற்றுச் சபையில் இது குறித்து கலந்துரையாடி இறுதி தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அம்பாறையில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்குள் மக்கள் சுதந்திரமாக வாழும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது மக்களுக்கு சுதந்திரம் இருக்கின்றது. நீண்டகாலத்திற்கு பின்னர் மக்களுக்கு என்னை திட்டமுடிந்தது.
எவரும் வெள்ளை வான்களில் கடத்தப்படுவதில்லை. என்னை 10 வருடங்களாக திட்டினர். மறுபடி திட்டினாலும் பரவாயில்லை.
திட்டுவதால் எந்த பிரச்சினையுமில்லை. சட்டத்திற்கு அமையவே நடவடிக்கை எடுக்கப்படும். எவரும் சுதந்திரமாக செயற்படலாம்.
எவரும் அச்சமின்றி செல்லக் கூடிய சூழல் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. சகல இடங்களிலும் சட்டம் செயற்படுத்தப்படுகிறது.
அத்துடன் அரசியல் முறையிலும் மாற்றம் ஏற்படவேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETZSUksyI.html

Geen opmerkingen:

Een reactie posten