[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 03:22.27 PM GMT ]
இந்த தகவலை கொழும்பின் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
கிளிநொச்சியின் இரணைமடு, செஞ்சோலை சிறுவர் காப்பகத்தை கே பி பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.
இந்த காப்பகம், கிளிநொச்சியின் திருவையாறு 57வது இராணுவ தலைமையகத்தின் கட்டிடம் ஒன்றில் அமைந்துள்ளது.
இந்த இராணுவ முகாமின் வாயிலை கடந்து செல்லும் போது 2 கிலோமீற்றர் தூரத்தில் செஞ்சோலை அமைந்திருக்கிறது.
இந்த இல்லத்தின் வெளிப்புறத்தில் எந்தநேரமும் நான்கு பாதுகாப்பு வீரர்கள் நடமாடிக்கொண்டிருந்தனர்.
இதனைத்தவிர சுமார் 30 படையினர் 24 மணித்தியாலங்களும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் சிங்கப்பூரில் சந்திப்பு!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 03:17.07 PM GMT ]
ஏப்ரல் 3முதல் 5ம் திகதி வரை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதில் அரசியல் குழு ஒன்று, சமூகக்குழு ஒன்று, கல்வியாளர் ஒருவர், புலம்பெயர்ந்த ஒருவர் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கண்காணிப்பாளர் ஒருவர் உட்பட்ட சர்வதேச பங்காளர்கள் பங்கேற்றனர்.
சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் மற்றும் தென்னாபிரிக்காவின் மாற்றத்துக்கான அமைப்பு என்பன இந்த சந்திப்புக்கான பங்காற்றாளர்களை அழைத்திருந்தன.
இதன்போது இலங்கையில் ஜனநாயகத்தை முன்னேற்றி நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஏற்கனவே சுவிட்ஸர்லாந்து அரசாங்கமும் தென்னாபிரிக்க மாற்றத்துக்கான அமைப்பும் இலங்கைக்கு விஜயம் செய்து அரசாங்கம் உட்பட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தன.
இந்த சந்திப்புக்களின் ஒரு கட்டமாகவே சிங்கப்பூர் சந்திப்பும் அமைந்திருந்தது.
இந்தநிலையில் இலங்கையின் நல்லிணக்கத்துக்காக தொடர்ந்தும் காத்திரமான சந்திப்புக்களை நடத்துவதென்று சிங்கப்பூர் சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்;டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyETZSUksyJ.html
Geen opmerkingen:
Een reactie posten