[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 10:10.57 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த பீ. தயாரத்ன மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இணைந்து கொண்டதுடன் 7 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் மேடையில் ஏறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே மேடைக்கு வருமாறு அழைத்த போது தயாரத்ன மேடையில் ஏறி உரையாற்றினார். அப்போது இரண்டு முறை அவருக்கு எதிராக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஹூவென சத்தமிட்டனர்.
எனினும் தொடர்ந்தும் பேசிய தயாரத்ன, அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்திக்கு அவர் ஆற்றிய சேவையை விளக்கினார். அவர் அக்கூட்டத்தில் தெரிவிக்கையில், கூட்டத்தில் இருக்கும் ஓரிருவருக்கு நான் செய்த சேவைகள் தெரியாமல் இருந்திருக்கலாம்.
இந்த எதிர்ப்புக்கொல்லாம் நான் அஞ்ச போவதில்லை எனக் கூறினார். அப்போதும் கூட்டத்தில் இருந்தவர்கள் ஹூவென சத்தமிட்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டதுடன் எதனையும் கூறாமல், எதுவும் தெரியாதவர்கள் போல் காணப்பட்டர்.
எனினும் தனது உரையின் போது தயாரத்னவின் பெயரை கூறவும் தனக்கு பயம் என குறிப்பிட்டார்.
அரசியலில் நுழையுமாறு பல அழைப்புக்கள் வருகின்றது: ஞானசார தேரர்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 10:31.44 AM GMT ]
தனக்கு அழைப்பு வந்துள்ளபோதிலும் அரசியலுக்கு செல்ல தான் விரும்பவில்லை என அவர் குறிப்பிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் ஆதரவு கிடைத்து பாராளுமன்றத்திற்கு சென்ற தேரர்கள் செய்த நன்மைகள் எதுவும் கிடையாதென அவர் கூறியுள்ளார்.
தற்பொழுது அரசியலில் நுழைவதற்கு எண்ணம் இல்லை எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
19வது திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானது: ஜீ.எல்.பீரிஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 11:44.48 AM GMT ]
கொழும்பில் இன்று அவர் இதனை கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சம்பந்தமாக 9 ஆம் திகதியும் 10 ஆம் திகதி விவாதம் நடத்தப்பட உள்ளது.
இந்த விவாதம் நாட்டின் இன்றைய அரசியலமைப்புச் சட்டத்தின் முரணானது என்பதுடன் மக்களின் உரிமைகளை மீறும் செயல் என ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.
இந்த விவாதம் நடத்தப்படுவதற்கு எதிராக தான் உட்பட எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் ஷமல் ராஜபக்சவை சந்தித்து விளக்க உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரத்திற்கு மேலும் அதிகாரங்களை வழங்கி சர்வாதிகார ஆட்சியாளராக உருவெடுக்கும் வகையில் கொண்டு வந்த 18வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கி அதனை நிறைவேற்ற காரணமாக இருந்தவர்களில் ஒருவரான ஜீ.எல்.பீரிஸ், ஜனநாயகத்திற்கு சற்று வழியை திறக்கும் 19வது திருத்தச்சட்டத்தை எதிர்ப்பது ஆச்சரியமளிப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyETZSUkr7H.html
Geen opmerkingen:
Een reactie posten