தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 april 2015

வடக்கு குடும்ப தலைவிகளின் கண்ணீர் துடைக்க ரணிலின் தேசிய நிலையம்

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி ஜூனில் இலங்கை வருகிறார்!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 03:43.49 PM GMT ]
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வரும் ஜூன் மாதம் இலங்கைக்குப் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை, இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தது.
அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட அவர், விரைவில் தாம்  இலங்கைக்கு வருவதாக உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையிலேயே அவர் வரும் ஜுன் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரியவருகிறது.
43 ஆண்டுகளுக்கு பின்னர், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஒருவர் இலங்கை வரவுள்ளார்.
கடைசியாக, 1972ம் ஆண்டு ஜூலை முதலாம் நாள், அமெரிக்காவின் 55வது இராஜாங்கச் செயலராக இருந்த வில்லியம் பி. ரோஜர்ஸ், (William P. Rogers) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அதற்குப் பின்னர், இலங்கைக்கு வருகை தரவுள்ள அமெரிக்காவின் மிக உயரமட்டப் பிரமுகராக, ஜோன் கெரியே இருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmtyETZSUkszD.html

வடக்கு குடும்ப தலைவிகளின் கண்ணீர் துடைக்க ரணிலின் தேசிய நிலையம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 03:44.33 PM GMT ]
வடக்கில் குடும்ப தலைமைகளை கொண்ட பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக தேசிய நிலையம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அண்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கணவன்மாரை இழந்த, குடும்ப தலைமைகளை கொண்ட பெண்களின் கோரிக்கைகளை ஏற்றே இந்த நிலையம் அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் காரியாலயம் இன்று அறிவித்துள்ளது.
வடக்கில் சுமார் 50ஆயிரம் குடும்பங்கள், பெண்களை தலைமைகளாக கொண்டுள்ளன. இந்தக்குடும்பங்கள் கல்வி மற்றும் ஏனைய வாழ்க்கையை கொண்டு செல்வதில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன.
இந்தக்குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 35ஆயிரம் ரூபா கடன் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு போதுமானதாக அமையவில்லை.
இந்தநிலையில் குறித்த கடன்களை வழங்குவதில் வங்கிகளும் தாமதப்போக்கை காட்டிவருகின்றன.
சமூகத்தில் சட்டவிரோத மதுபான பாவனை, பாலியல் வன்முறைகள், என்பன பெண்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளாக உள்ளன.
இந்தநிலையில் தமக்கு எதிரான பிரச்சினைகளை முறையிட போதுமான பெண் காவல்துறை அதிகாரிகள் இல்லை. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதில் தாமதங்கள் உள்ளன.
எனவே பெண்களுக்கான தேசிய நிலையத்தை அமைப்பதன்மூலம் பெண்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை எட்டலாம் என்று பிரதமர் நம்பிக்கை கொண்டுள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்வைத்த அறிக்கையை தொடர்ந்து பெண்களுக்கான முன்னேற்றங்களுக்கான பரிந்துரைகளுக்காக சட்டத்தரணி சாந்தினி அபிமன்யசிங்கத்தை தலைமையாக கொண்ட குழு ஒன்றை பிரதமர் அமைத்திருந்தார்.
இந்தநிலையில் பெண்களுக்கான புதிய நிலையத்தின் நடவடிக்கைகளை மகளிர் விவகார அமைச்சும் கொள்கை திட்டமிடல் அமைச்சும் இணைந்து செயற்படுத்தவுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmtyETZSUkszE.html

Geen opmerkingen:

Een reactie posten