யாழ்ப்பாணத்தில் சிறுவர் இல்லத்திலிருந்த சிறுமியை காணவில்லை
[ Apr 01, 2015 07:51:38 AM | வாசித்தோர் : 5490 ]
யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமியை காணவில்லையென இல்ல உத்தியோகத்தரால் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (31.03.2015) முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
நிஷாந்தன் திலக்கி (வயது 11) என்ற சிறுமியே இவ்வாறு காணாமற்போயுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (31) மதியம் மலசல கூடத்துக்குச் சென்ற சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளார் என்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினர்.
யாழ்ப்பாணத்தில் முச்சக்கரவண்டி தீயிட்டு எரிப்பு - இருவர் கைது
[ Apr 01, 2015 07:56:21 AM | வாசித்தோர் : 4345 ]
யாழ்ப்பாணம் திருநகர் பரராஜசிங்கம் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை பெற்றோல் ஊற்றி எரித்த குற்றச்சாட்டில் அதேயிடத்தைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை(31) கைது செய்ததாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்
4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான முச்சக்கரவண்டி செவ்வாய்க்கிழமை(31) அதிகாலை பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முச்சக்கரவண்டியின் உரிமையாளர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். தனிப்பட்ட விரோதம் காரணமாக முச்சக்கரவண்டி எரிக்கப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் கூறினர்.
http://www.athirvu.com/newsdetail/2712.htmlபளை மற்றும் கிளாலி பகுதியில் 100 கிலோ கிராமுக்கும் மேற்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
[ Apr 02, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 2710 ]
கிளிநொச்சி பளை பகுதியில் 100 கிலோகிராமுக்கும் மேற்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
பளை கிளாலி பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இரகசிய தகவலொன்றின் பிரகாரம் பளை பொலிஸாருடன் இணைந்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் யாழ். இளவாலை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாவென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேநபரை கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்
http://www.athirvu.com/newsdetail/2714.htmlவடமாகாணத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் விசேட அதிரடி படையினர்
[ Apr 02, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 2600 ]
வடமாகாணத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த பொலிஸார்-விசேட அதிரடி படையினர் ஆகியோர் இணைந்து செயற்படவுள்ளதாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில் யாழ். பிரதேச செயலாளர் சுகுணவதி தெய்வேந்திரம் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்கவிடம் விடுத்த கோரிக்கைக்கு பதில் அளிக்கும் போதே வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழில் போதைபொருள் விற்பனை அதிகரித்து காணப்படுகின்றது. பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தும் போதைப்பொருட்கள் போதையூட்டப்பட்ட பாக்கு என்பன விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் சமூக பிறழ்வுகள் இடம்பெறுகின்றன.
விற்பனை செய்பவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சில நாட்களில் விடுதலையாவதால் அவர்கள் பற்றிய தகவல்களை வழங்க பொதுமக்கள் பயப்படுகின்றனர். பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யும் போதைப்பொருள் வியாபாரிகளை கட்டுப்படுத்த வேண்டும். அதற்காக பொலிஸார் பாடசாலை ஆரம்பிக்கும் போதும் முடிவடையும் போதும் மோட்டார் சைக்கிள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என பிரதேச செயலாளர் சுகுணவதி தெய்வேந்திரம் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளித்த வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் போதைபொருள் விற்பனையை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினைரை பயன்படுத்த பொலிஸ்மா அதிபர் அனுமதியளித்துள்ளார். போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பில் பொதுமக்கள் தகவல்களை வழங்கலாம். தகவல் தருவோர் பற்றிய ரகசியம் நூறு வீதம் பாதுகாக்கப்படும் என்றார்.
http://www.athirvu.com/newsdetail/2715.html
Geen opmerkingen:
Een reactie posten