[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015, 04:01.58 AM GMT ]
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் வான் சாரதி உட்பட அதில் பயணித்த 7 பேரையும் ஹற்றன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தங்களுக்கு இது எவ்வாறு வந்தது என தெரியவில்லை என பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட குறித்த துப்பாக்கியை சோதனைக்குட்படுத்தும் போது துப்பாக்கி மண்ணில் புதைக்கப்பட்டிருந்ததாகவும் ஏற்கனவே அது பாவிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனை விற்பனை செய்வதற்காகவா அல்லது வேறு தேவைக்காகவா கொண்டு செல்லப்பட்டது என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அவிசாவளை எஹலியகொட பகுதியிலிருந்து இராகலை நோக்கி வாத்தியக் குழுவினர் சென்று கொண்டிருந்த வான் ஒன்றிலிருந்தே நேற்று மாலை வேளையிலே குறித்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த வானில் பயணித்தவர்கள் நிகழ்வு ஒன்றில் வாத்தியம் வாசிக்க சென்று கொண்டிருந்ததாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த வானை சந்தேகப்பட்டு பரிசோதித்த போது வானில் ஒரு ஆசனப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இது பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்களை இன்று ஹற்றன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyETaSUks1B.html
ஸ்ரீ.சு.கவின் பிரதம வேட்பாளராக சந்திரிக்காவை நியமிக்க தீர்மானம்?
[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015, 04:26.01 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை பிரதம வேட்பாளராக நியமிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஆலோசனைகள் முன்வைப்பதற்கு ஆயத்தமாவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதம வேட்பாளராக நியமிக்க வேண்டிய அவசியமிருப்பதாகவும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமீபத்தில் தான் மீண்டும் அரசியலுக்கு வருவது அசிங்கமான விடயமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இந்திய ஊடகமொன்றிற்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyETaSUks1C.html
Geen opmerkingen:
Een reactie posten