தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 april 2015

யாழ். நல்லூரில் நாளை மாபெரும் பேரணி: அரசியல்வாதிகளுக்குத் தடை

சிங்களவர் என்பதால் கனேடிய உயர்ஸ்தானிகரால் பணி நீக்கம் செய்யப்பட்ட சாரதிக்கு சார்பாக நீதிமன்றம் தீர்ப்பு
[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015, 03:36.18 AM GMT ]
கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகர், தம்மிடம் பணிபுரிந்த வாகன சாரதியை மீண்டும் பணிக்கு அமர்த்த வேண்டும். அல்லது அவருக்கு 6 மில்லியன் ரூபாய்கள் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று கொழும்பு தொழில்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தாம் சிங்களவர் என்ற அடிப்படையில் கடந்த 8 வருடகாலம் பணிகளில் இருந்து நிறுத்தப்பட்டதாக கூறி மினுவாங்கொடையை சேர்ந்த லால் பெர்ணான்டோ என்பவர் மனு ஒன்றை நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.
இது சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்றறும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார். தம்மால் தமிழில் உரையாட முடியாமையால்,தான் பல வாய்ப்புக்களில் இருந்து தவிர்க்கப்பட்டதாகவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.
வடக்கு உட்பட்ட தமிழ் பகுதிகளுக்கு செல்லும் போது உள்ளூர் அரசியல்வாதிகள் போன்றோரின் சந்திப்புக்களில் இருந்து தாம் தவிர்க்கப்பட்டதாகவும் இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடுவதை காட்டிக்கொள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் விரும்பவில்லை என்றும் மனுதாரர் குற்றம் சுமத்தியிருந்தார்


மகிந்த பேரணியில் கலந்து கொள்ளும் ஸ்ரீ.சு.கவினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை: சந்திரிக்கா
[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015, 04:26.08 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒழுக்க விதிகளை மீறும் உறுப்பினர்கள்  பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்
நேற்று கம்பஹா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒழுக்க விதிகளை மீறும் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி விரைவில் தண்டனை வழங்கவுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்
அவ்வாறு தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னர் விருப்பமென்றால் எங்களுடன் கலந்துரையாடி, பின்னர் தொடர்ந்து எங்களுடன் செயற்படுவதற்கு ஒரு சந்தர்ப்பம் பெற்றுக்கொள்ளலாம்.
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் அனைவரும் தவறு செய்தவர்கள் தான், அதில் குறைந்த தவறு செய்தவர்கள் எங்களுடன் இணைந்து செயற்படுகின்றார்கள்.
அவ்வாறு இணைந்துள்ளவர்கள் அரசியலில் மாற்றம் வேண்டுமென்பதை புரிந்து கொண்டுள்ளார்கள். இதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுபடவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETaSUks1D.html

மகிந்தவை அதிகாரத்திற்கு கொண்டு வர முயற்சிப்பது ஜனாதிபதியாக்குவதற்கல்ல: தயான் ஜயதிலக்க
[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015, 05:19.47 AM GMT ]
மகிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வர முயற்சிப்பது அவரை ஜனாதிபதியாக்குவதற்கல்ல என பேராசிரியர் தயான் ஜயதில்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது முதல் பாதியில் வெளியுறவுக் கொள்கை சிறப்பாக இருந்தது ஆனால் இரண்டாவது பாதியில் அது சிதறிவிட்டதாக அவர் கூறியுள்ளார் என சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே எதிர்வரும் காலத்தில் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் பிரதமராக நியமித்து,மகிந்த ராஜபக்சவின் கடந்த கால வேலை திட்டத்தை நிறைவேற்றுவதனால் நாடு செழிப்படைவதற்கான வாய்ப்புள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


சம்பூர் கடற்படை முகாமில் பயிற்சி பெற்று வந்த வீரர்கள் பூசாவிற்கு மாற்றம்
[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015, 06:07.17 AM GMT ]
சம்பூர் கடற்படை முகாமில் பயிற்சி பெற்று வந்த வீரர்கள் பூசா முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பயிற்சி பெற்று வரும் 300 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளடங்களாக 400 பேர் இவ்வாறு பூசா முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை சம்பூர் விதுர கடற்படை முகாமை அகற்றி கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு அமைய குறித்த முகாமில் நிலைகொண்டிருந்த பயிலுனர் வீரர்கள் உள்ளிட்ட 400 பேர் பூசா முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்த 237 ஏக்கர் காணியை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
திருகோணமலை துறைமுகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் புலிகள் முகாம்களை அமைத்ததனைத் தொடர்ந்து இந்த விசேட கடற்படை முகாம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சம்பூர் கடற்படை முகாம் அகற்றப்படுவது குறித்து அறிவிக்கப்படவில்லை என கடற்படையினர் அண்மையில் குறிப்பிட்டிருந்தனர்.

அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் சிவில் பாதுகாப்பு படையினர் அதில் இருந்து நீக்கம்!
[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015, 06:07.22 AM GMT ]
அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு படையினரை அந்த பணிகளில் இருந்து திரும்ப அழைப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்புகளை குறைப்பது என தீர்மானித்திருந்தது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத எவருக்கும் படையினரின் பாதுகாப்பு வழங்கப்படாது எனவும், பொலிஸாரின் பாதுகாப்பு மாத்திரமே வழங்கப்படும் எனவும் அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது.


யாழ். நல்லூரில் நாளை மாபெரும் பேரணி: அரசியல்வாதிகளுக்குத் தடை
[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015, 06:25.03 AM GMT ]
கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட வலிகாமப் பிரதேச மக்கள் ‘நீருக்காகத் திரண்ட யாழ்ப்பாணம்’ எனும் தொனிப் பொருளில் யாழ். நல்லூர் ஆலய முன்றலில் நாளை செவ்வாய்க்கிழமை மாபெரும் பேரணியொன்றை நடாத்தவுள்ளனர்.
தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டத்தில் அரசியல்வாதிகள் எவரையும் கலந்து கொள்ளவேண்டாம் எனக் கேட்கப்பட்டுள்ளது.
முற்று முழுதான அரசியல் கலப்பற்ற பேரணியாக இது அமையும். எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல் பிரமுகரோ இந்தக் கூட்டத்தில் பங்குபற்ற முடியாது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளை காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போராட்டத்தின் முடிவில் மக்கள் பேரணியாக சென்று வட மாகாண முதலமைச்சர், ஆளுநர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மகஜர்களை கையளிக்கவுள்ளனர்.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பிரிவினைகளின்றி அனைத்து மக்களும், மாணவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என தூய நீருக்கான மக்கள் ஒன்றியம் கேட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyETaSUks2D.html

Geen opmerkingen:

Een reactie posten