[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015, 01:22.29 AM GMT ]
கடந்த பெப்ரவரி மாதம் 14ம் திகதி சிகிரியாவிற்கு சுற்றுலா சென்ற சின்னத்தம்பி உதயஸ்ரீ என்ற யுவதி, சிகிரியா கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரணை செய்த நீதவான், குறித்த யுவதிக்கு இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனை விதித்திருந்தார்.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு அமைய அண்மையில் குறித்த யுவதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.
எனினும், ஜனாதிபதியின் உத்தரவு இன்னமும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைக்கபெறாத காரணத்தினால் நேற்று வரையில் குறித்த யுவதி விடுதலை செய்யப்படவில்லை.
தொடர்ந்தும் குறித்த யுவதி அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மொழி மூலமாகவோ யுவதியை விடுதலை செய்யுமாறு உத்தரவு கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyETaSUks0E.html
பாணந்துறையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகொலை
[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015, 01:39.53 AM GMT ]
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பின் புறநகர் பகுதியான பாணந்துறையில் உள்ள அவரின் வீட்டில் வைத்தே உப பொலிஸ் பரிசோதகர் குரூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
எனினும் இந்தக்கொலைக்கான காரணங்கள் எவையும் இன்னும் வெளியாகவில்லை.
மைத்திரி, மஹிந்த, சந்திரிக்காவை ஒரே மேடையில் இணைக்கும் கூட்டம் ஒத்தி வைப்பு
[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015, 02:02.39 AM GMT ]
எதிர்வரும் 10ம் திகதி ஹொரணயில் இந்தக் கூட்டம் நடத்தப்படவிருந்தது.
முன்னாள் பிரதமரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவருமான ரட்னசிறி விக்ரமநாயக்கவினால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்திற்கான ஒழுங்கமைப்பு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க மேற்கொண்டிருந்தார்.
ரட்னசிறி விக்ரமநாயக்கவின் அரசியல் வாழ்க்கைக்கு 55 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரசியலமைப்பு குறித்த நாடாளுமன்ற விவாதங்கள் நடைபெறவிருப்பதனால், ரட்னசிறி விக்ரமநாயக்கவின் உத்தரவிற்கு அமைய இந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரட்னசிறி விக்ரமநாயக்கவை வாழ்த்தும் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் பங்கேற்கவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyETaSUks0H.html
Geen opmerkingen:
Een reactie posten