தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 april 2015

19ம் திருத்தம்: எவ்வாறு பௌத்த மதம் அழிக்கப்படும் என்பதனை தினேஸ் விளக்க வேண்டும்!- புதிய திருத்தம் உள்ளடக்கம்!- ராஜித




திஸ்ஸ கரலியத்தவின் கூற்றை ராஜித மறுத்துள்ளார்!
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 01:03.08 AM GMT ]
முன்னாள் அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவின் கூற்றை அமைச்சர் ராஜித சேனாரட்ன மறுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் ஒருவரே தம்மை பதவி விலகுமாறு கோரியதாக கரலியத்த தெரிவித்திருந்தார்.
எனினும் இது உண்மையல்ல என்று ராஜித குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் முன்னாள் சிரேஸ்ட அமைச்சரான அவர், தமக்கு வழங்கப்பட்டிருந்த பௌத்த சாசன பிரதி அமைச்சு தொடர்பில் திருப்திகொண்டிருக்கவில்லை.
எனவேதான் அவர் தமது பதவியை இராஜினாமா செய்தார் என்று ராஜித குறிப்பிட்டுள்ளார்.



இலங்கையில் தொழிற்சாலைகள் அமைப்போம்!- அழைக்கிறார் தமிழ்நாடு ஈஸ்வரன்
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 01:18.32 AM GMT ]
இலங்கையில் தொழில் தொடங்க தமிழகத் தொழில் அதிபர்கள் தயாராகி வருகிறார்கள். இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் இதில் ஆர்வம் காட்டிவருகிறாராம்.
 அந்தவகையில், பி.ஜே.பியுடன் தமிழகத்தில் கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் 19 பேர் கொண்ட குழுவினர், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பகுதிக்குச் சென்று 'என்னென்ன புதிய வேலை வாய்ப்புகளைத் தொடங்கலாம்?’ என்று ஆய்வு செய்து திரும்பியிருக்கிறார்கள்.
இந்தக் குழுவில் திருப்பூர் கார்மென்ட்ஸ் தொழிலதிபர்கள், கரூரில் உள்ள பிரபல பஸ் பாடி கட்டும் உரிமையாளர், கொசுவலை தயாரிக்கும் கம்பெனியின் உரிமையாளர், ஈரோடு பெரு விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பட்டவர்கள் சென்றிருக்கிறார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை தொழில் செய்கிறவர்கள் யாராக இருந்தாலும், இலங்கைக்குத் தாராளமாகப் போகலாம். வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் இருகரம் நீட்டி அழைக்கிறார்.
மீன்பிடித் தொழில், விவசாயம் மட்டுமே போதாது. புதிய புதிய தொழில்கள் மூலம் பொருளாதார ரீதியாக தற்போது சிரமப்படும் தமிழ் மக்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படும்.
இலங்கையில் நடந்த படுகொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதே நேரம், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், ஆதரவற்ற விதவைகள் மறுவாழ்வு பெறவேண்டும்.
அதற்கு தமிழகப் பகுதியில் தொழில் வேலைவாய்ப்பு பெருகுவதோடு, மக்களுக்கு சம உரிமை பெற வழிவகை செய்யவேண்டும்'' என்று சொல்லும் கொ.ம.தே கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஜூனியர் விகடனுக்கு வழங்கிய செவ்வி வருமாறு!
உங்கள் குழுவினரைச் சந்தித்த தமிழ் மக்கள் என்ன சொல்கிறார்கள்?
நான் போகவில்லை. எனது குழுவினர்தான் இலங்கை சென்றனர். அங்குள்ள தமிழர்கள் எங்கள் குழுவிடம், 'தமிழக அரசியல்வாதிகள் எங்கள் நாட்டைப் பற்றி வீணாக விமர்சனம் செய்வதை நிறுத்தச் சொல்லுங்கள். அவர்கள் அங்கே பேசினால் எங்களுக்கு இங்கே அடி விழுகிறது. மேடையில் பேசுவதை விட்டுவிட்டு, இங்கே... தொழில் வாய்ப்புகளைத் தர முன்வந்தால், நாங்கள் உழைத்துப் பிழைத்துக்கொள்வோம்’ என்றார்கள்.
அவர்கள் சொல்வது சரிதான். இங்கேயிருக்கும் சிலர் அங்குள்ள சூழ்நிலை தெரியாமல் திட்டித் தீர்க்கிறார்கள். அதை இத்துடன் நிறுத்திக்கொண்டு தொழில் ரீதியாக இலங்கைத் தமிழர்களுக்கு உதவவேண்டும்.
உதாரணத்துக்கு, கிளிநொச்சியில் வட இந்திய தொழில் அதிபர் ஒருவர், கார்மென்ட்ஸ் தொழிற்சாலையை ஆறு மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்தார். 2 ஆயிரம் தமிழர்கள் அங்கே வேலை பார்க்கிறார்கள். 'வடநாட்டுக்காரருக்கு தோன்றியது ஏன் நம் ஊர் தொழில் அதிபர்களுக்குத் தோன்றவில்லை’ என்பதுதான் புரியவில்லை.
கொங்கு மண்டல தொழில் அதிபர்கள் அங்கே தொழில் தொடங்கத் தயாராக இருக்கிறார்களா?
இங்கே 5 ஆயிரம் பேர்களுக்கு வேலை தரும் ஒரு தொழில் அதிபர், இலங்கையில் 200 பேருக்கு வேலை தரும் தொழிற்சாலையைத் தொடங்க முடியும்.
இப்படி எங்கள் கட்சியில் உள்ள தொழில் அதிபர்களால் வரும் காலங்களில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு நிச்சயமாக வேலை தரமுடியும். இலங்கையில் விரைவில் பிரதமர் பதவிக்கான பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. அதன் முடிவுக்குப் பிறகு, எங்கள் குழு அங்கே போய் தொழிற்சாலைகளைத் தொடங்கும்.
இலங்கையில் மத்தியில் உள்ள ஆட்சிக்கும் மாகாண ஆட்சிக்கும் சுமுகமான உறவு இருந்தால்தானே... நீங்கள் பாதுகாப்பான சூழலில் தொழில் தொடங்க முடியும். அப்படி ஒரு சூழ்நிலை தற்போது நிலவுகிறதா?
நம் பிரதமர் மோடி சென்றுவிட்டு வந்த பிறகு, அங்கே நிலைமை மாறிவிட்டது. ஒன்றுபட்டுச் செயல்படத் தயாராக இருக்கிறார்கள். முதல்வர் விக்னேஸ்வரன் என்னுடன் போனில் பேசினார். அப்போது நான் பொள்ளாச்சியில் இருந்தேன். தென்னை விவசாயம் பற்றி விரிவாகப் பேசினார். நிச்சயமாக, பேச்சுடன் இது நிற்காது. நடைமுறையில் செய்துகாட்டுவோம்.
இலங்கையில் தமிழர்கள் வாழும் சில பகுதிகளில் ராணுவ முகாம்கள் இன்னமும் விலக்கப்படவில்லையே? விடுதலைப்புலிகள் அமைப்பினர் சர்வதேச அளவில் மீண்டும் உயிர்பெற்று வருவதாக இலங்கை அரசு சந்தேகத்தைக் கிளப்புகிறதே?
இலங்கையில் புதிய தொழில் தொடங்கி வேலை வாய்ப்புகளை நாம் கொடுத்து, இந்திய அரசு மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து சம உரிமை கிடைக்க வைக்கலாம். அப்படி நடந்தால், இலங்கையில் உள்ள இளைஞர்கள் வெளிநாடு செல்லமாட்டார்கள். அதேபோல, வெளிநாட்டில் உள்ள இளைஞர்கள் இலங்கைக்கே திரும்பிவிடுவார்கள்.
இப்படிப்பட்ட நல்ல சூழ்நிலை உருவாகும்போது, விடுதலைப்புலிகள் இயக்கம் உயிர்பெறும் என்கிற சந்தேகம் எங்கே வரப்போகிறது? தற்போது தமிழர்கள் பகுதிகளில் உள்ள இராணுவத்தை இனியும் தொடர்ந்து நிறுத்தவேண்டிய அவசியமும் ஏற்படாது.
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkq6I.html

நல்லெண்ணத்துடன் இலங்கையில் இரண்டு ஜப்பானிய கப்பல்கள்!
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 01:25.22 AM GMT ]
ஜப்பானின் இரண்டு கரையோரப் பாதுகாப்பு கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன.
நல்லெண்ண அடிப்படையிலேயே இந்த கப்பல்கள் நேற்று இலங்கை வந்துள்ளன.
இதன்போது கப்பல் அதிகாரிகளுக்கும் இலங்கையின் கடற்படை அதிகாரிகளுக்கும் இடையில் பல்வேறு சந்திப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படடுள்ளன.
அத்துடன் இந்த கப்பல்கள் இரண்டும் இலங்கை கடற்படையிருடன் இணைந்து பயிற்சிகளிலும் ஈடுபடவுள்ளன.


19ம் திருத்தம்: எவ்வாறு பௌத்த மதம் அழிக்கப்படும் என்பதனை தினேஸ் விளக்க வேண்டும்!- புதிய திருத்தம் உள்ளடக்கம்!- ராஜித
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 01:41.37 AM GMT ]
19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக எவ்வாறு பௌத்த மதம் அழிக்கப்படும் என்பதனை பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன விளக்க வேண்டுமென சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள 19ம் திருத்தச் சட்டத்தில் பௌத்த மதத்தை அழிக்கும் சூழ்ச்சித் திட்டம் காணப்பட்டால் அது எங்கே எவ்வாறு என்பதனை காண்பிக்க வேண்டும்.
ஏதாவது ஓர் இடத்தில் அவ்வாறான விடயங்கள் இருந்தால் அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக பௌத்த மாதம் அழிக்கப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக எந்தவொரு பௌத்த பிக்குவோ இதுவரையில் சுட்டிக்காட்டவில்லை.
அவ்வாறான ஆபத்துக்கள் எதுவும் இருக்க இடமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
19ஆவது திருத்தச்சட்டத்தில் புதிய திருத்தம் உள்ளடக்கம்
தேர்தல் மறுசீரமைப்பு பூர்த்தி அடைந்த பின்னரே 19வது திருத்தம் அமுலாகும் என 19 ஆவது திருத்தச் சட்டத்தில் புதிய திருத்த மொன்றை உள்ளடக்கி பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த திருத்தத்தின் அடிப்படையில் 19வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராக இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இதன்படி, அடுக்க வாரம் 2/3 பெரும்பான்மையுடன் 19 வது திருத்தச் சட்டத்தை பிரச்சினையின்றி நிறைவேற்ற முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
தேர்தல் மறுசீரமைப்பு சட்டமூலத்தையும் விரைவாக சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக கூறிய அமைச்சர், எமக்கு பொதுத் தேர்தலை அவசரமாக நடத்துவதை, விட 100 நாள் திட்டத்திலுள்ள வாக்குறுதிகளை அமுல்படுத்துவதே அவசரமானது எனவும் குறிப்பிட்டார்.
19 வது திருத்தத்துடன் தேர்தல் மறுசீரமைப்பும் முன்னெடுக்கப்படவேண்டும் என சுதந்திரக் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதன் பிரகாரமே, ‘19 ஆவது திருத்ததை நிறைவேற்றினாலும் தேர்தல் மறுசீரமைப்பு மேற்கொண்ட பின்னரே 19 வது திருத்தம் அமுலாகும் வகையில் திருத்தம் கொண்டுவர இணக்கம் காணப்பட்டுள்ளது.’
இதற்கு சு. க வும் ஆதரவளிக்கும். இதனூடாக 2/3 பெரும்பான்மை பலத்துடன் 19 வது திருத்தத்தை நிறைவேற்ற முடியும்.
19ஆவது திருத்தம் அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட இருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு தாமதமானால் 10 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்த இயலாது போகலாம். அவ்வாறானால் தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னரே அதனை நிறைவேற்ற வேண்டியிருக்கும். தேர்தல் முறையை மாற்றுவதை நான் பின்போடப்போவதில்லை. அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனையும் துரிதமாக நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கிறோம்.
அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்களை துரிதமாக அமைக்க முடியும். சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் கீழே அடுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நாம் இருக்கிறோம்.
100 நாள் திட்டத்திலுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவே மக்கள் எமக்கு வாக்களித்தார்கள். 100 நாள் என்பது மாறலாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkq7A.html

Geen opmerkingen:

Een reactie posten