தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 april 2015

சுதந்திரம் பெற்ற போது இலங்கை பொருளாதாரத்தில் ஆசியாவில் இரண்டாம் இடத்தில் இருந்தது!– அமைச்சர் ராஜித



அரசியலில் இருந்து ஒதுங்கும் நடிகை நதீஷா ஹேமமாலி
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 10:42.38 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கடந்த தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட பிரபல சிங்களத் திரைப்பட நடிகை நதீஷா ஹேமமாலி அரசியலில் இருந்து ஒதுங்க தீர்மானித்துள்ளார்.
தென் மாகாண சபைத் தேர்தலில் தோல்வியடைந்த போதும் ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிக்க அவர், தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து செயற்பட்டார்.
எனினும் தற்போதைய அரசியல் தொடர்பில் வெறுப்படைந்துள்ள நதீஷா ஹேமமாலி, அரசியலில் இருந்து ஒதுங்கி தொழில் ரீதியான நடிகையாக கலைத்துறையில் செயற்பட தீர்மானித்துள்ளார்.
தொடர்ந்தும் இரண்டு வருடங்கள் முழுமையாக கலைத்துறையில் ஈடுபடபோவதாக நதீஷா ஹேமமாலி கூறியுள்ளார்.

சுதந்திரம் பெற்ற போது இலங்கை பொருளாதாரத்தில் ஆசியாவில் இரண்டாம் இடத்தில் இருந்தது!– அமைச்சர் ராஜித
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 10:25.11 AM GMT ]
இலங்கையின் வரலாற்றில் தோல்வியடைந்து வீட்டுக்கு சென்ற முதல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஆட்சியில் இருந்த ஏனைய ஜனாதிபதிகள் ஓய்வுபெற்றனர் அல்லது உயிரிழந்தனர். மகிந்த ராஜபக்ச மாத்திரமே தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு தான் அறிவுரைகளை கூறிய போதிலும் அவர் அதனை கேட்கவில்லை எனவும் ராஜித கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நான் கூறியவற்றை கேட்டு செயற்பட்டிருந்தால், இன்னும் அவரே ஜனாதிபதியாக இருந்திருப்பார்.
பாப்பரசர் இலங்கை வருகை தந்த நேரத்தில் சபாநாயகரும் இதனை என்னிடம் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி நாங்கள் கூறியதை கேடகவில்லை. அவரிடம் எங்களை விட அரசியல் விஞ்ஞானம் தெரிந்த பெரியவர்கள் இருந்தனர்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகள் கிடைக்காததன் காரணமாகவே தான் தோல்வியடைந்தாக கூறியுள்ளார். இவ்வாறு தான் கூறுவதை இனவாதமாக கருத கூடாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட ராஜித சேனாரத்ன,
அவரது இந்த கருத்து இனவாதம் கொண்டது. நாங்க அமைச்சரவையில், சட்டமூலம் ஒன்றை கொண்டு வந்தோம். இனவாதம், மதவாதம் மற்றும் ஜாதி வாதம் பேசுபவர்களுக்கு எதிராக குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கும் வகையில் அந்த சட்டமூலம் கொண்டு வரப்படவுள்ளது.
இந்த குற்றத்தை செய்பவர்களை இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்க முடியும். ஆனாலும் இரண்டு ஆண்டுகள் போதாது என்று நான் கூறினேன்.
இனவாதம், மதவாதம் காரணமாவே இந்த நாட்டை அழித்தனர். நாடு சுதந்திரம் பெற்ற போது இருந்த அதியுயர் இடத்தை, 1956ம் ஆண்டில் இருந்து இனவாதிகளே இல்லாமல் செய்தனர்.
இலங்கை சுதந்திரம் அடைந்த போது இலங்கை ஆசியாவில் பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்தது. ஜப்பான் முதல் இடத்தில் இருந்தது இலங்கை இரண்டாவது இடத்தில் இருந்தது.
ஒரு டொலரிலேயே இலங்கை இரண்டாம் இடத்திற்கு சென்றது. ஜப்பானின் தனி நபர் வருமானம் 89 டொலர்கள், இலங்கையின் தனி நபர் வருமானம் 88 டொலர்களாக அப்போது காணப்பட்டது.
இன்று என்ன நிலைமை, ஜப்பானின் தனிநபர் வருமானம் சுமார் 40 ஆயிரம் டொலர்கள். எமது தனிநபர் வருமானம் வெறும் இரண்டாயிரம் டொலர்கள்.
சிங்கப்பூர், மலேசியா, கொரியா ஆகிய நாடுகள் தமது தேசிய பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டதுடன் ஒரு தேசிய நாட்டின் இனமாக ஒன்றாக இணைந்து சென்றதால், அந்த நாடுகள் கட்டியெழுப்பப்பட்டன. இந்தியாவும் அப்படியே வளர்ச்சியடைந்தது.
நாங்கள் இனத்தை பாதுகாக்க சென்றோம். இன்னும் அதனை பாதுகாக்கின்றோம். மதத்தை பாதுகாக்க சென்றோம். இன்றும் அதனை செய்கின்றோம். இது போதாதென்று ஜாதிகள் பற்றியும் தற்போது பேசுகின்றனர்.
இதனால், ஒரு நாட்டின் மக்கள் பல பிரிவுகளாக பிரிந்து போவார்கள் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkp6H.html

Geen opmerkingen:

Een reactie posten