தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 april 2015

மைத்திரியை பொம்மையாக்கும் திட்டமில்லை: சஜித்

தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து எதிர்க்கட்சியை உருவாக்க தயார்! ஜே.வி.பி.தலைவர் அனுரகுமார திஸாநாயக்க
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 02:27.39 AM GMT ]
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியை உருவாக்க நாம் தயார், சபாநாயகரிடமும் எமது விருப்பத்தை முன்வைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்
அதேவேளை, நிமல் சிறிபால டி சில்வா தொடர்ந்தும் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர். அதேபோல தினேஷ் குணவர்த்தனவால் எதிர்க்கட்சி தலைவராக முடியாது. ஒரே கட்சி ஆளும் தரப்பாகவும் எதிர்த் தரப்பாகவும் இருந்து செயற்பட அனுமதியில்லை எனவும் அவர் கூறினார்.
பிரதான இரு கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி யார் என்ற முரண்பாடு ஏற்பட்டுள்ள சந்தர்ப்பதில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அனுரகுமார திசாநாயக மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தேசிய அரசாங்கத்தை சொந்தம் கொண்டாடுகின்றன .இரு கட்சிகளின் அங்கத்தவர்களும் அமைச்சு பதவிகளை வகிக்கின்றனர்.
ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஒரு சிலர் தம்மை எதிர்க்கட்சியாக அடையாளப்படுத்திக்கொண்டு விவாதிக்கின்றனர்.
பாராளுமன்றத்தில் நான்கு கட்சிகளே அங்கம் வகிக்கின்றன, ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரு அரசாங்கமாக இருக்கையில் அதே கட்சி எவ்வாறு எதிர்க்கட்சியாக முடியும். பாராளுமன்றத்தினை வேடிக்கையாக்கும் வேலையினை இவர்கள் செய்கின்றனர்.
அதேபோல் நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சி தலைவராக வர முடியாது, அவருடன் இருந்த பலர் இன்று ஆளும் தரப்பாக மாறி அமைச்சு பதவிகளையும் எடுத்துள்ளனர். இந்த நிலைமையில் தொடர்ந்தும் அவரை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க முடியாது.
நிமல் சிறிபால டி சில்வாவுக்கே இந்த நிலைமை எனின் தினேஷ் குணவர்தனவை எவ்வாறு எதிர்க்கட்சி தலைவராக்குவது, இவர்கள் நான்கு பேரை இணைத்துக்கொண்டு தனிக்கட்சியாக காட்டிக்கொண்டாலும் இவர்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அங்கத்தவர்களாகவே உள்ளனர்
எனவே பாராளுமன்ற விதிமுறைகளை அனைவரும் பின்பற்றவேண்டும், பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பு அல்லாத இரண்டாவது பெரும்பான்மை கட்சி யார் என்பதை அவதானித்து அவர்களை எதிர்க்கட்சியாக தெரிவு செய்வதே வழக்கமானது.
ஆனால் இன்று பெரும்பான்மை கட்சிகள் இரண்டுமே ஆளும் கட்சியாக இருப்பதனால் எதிர்க்கட்சிக்கான தகுதி தமிழ் தேசிய கூட்டமைப்பினர்க்கே உள்ளத. எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியாக நியமிக்க வேண்டும்.
அதேபோல் நாம் பிரதிநிதித்துவப் படுத்தும் ஜனநாயக கூட்டணியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தினை பெறவேண்டும் என்பதே எமதும் நிலைப்பாடு.
எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது இரு கட்சிகளின் இணைக்கப்பாட்டின் அடிப்படையில் தெரிவுசெய்ய முடியும். ஆனால் உண்மையான எதிர்க்கட்சியாக நாம் நியமிக்கப்படவேண்டியதே இப்போதைய அவசியமாகும்.
எனவே இவ் விடயத்தினை நாம் சபாநாயகரிடம் முன்வைத்துள்ளோம், பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைய சரியான முறையில் எதிர்க்கட்சியை நியமிக்க வேண்டும். இல்லையேல் அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான போக்கினை கட்டுப்படுத்த முடியாது போய்விடும் எனவும் அவர்
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkq7C.html

ஐ.தே.க அமைச்சர்கள் தொடர்பில் சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதியிடம் முறைப்பாடு
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 02:38.11 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களது நடவடிக்கைகள் குறித்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்ய உள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அமைச்சர்கள், தமக்கு பல்வேறு வழிகளில் அசௌகரியங்களை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்வாறான ஓர் குற்றச்சாட்டை சுமத்தியே பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
சில அமைச்சுக்களின் அதிகாரிகள் கூட தமது அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள்வதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள் சகல விடயங்களிலும் தலையீடு செய்து வருவதனால் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். 
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்து, தேசிய அரசாங்கத்தை கட்டிக்காக்க நடவடிக்கை எடுக்குமாறு கோர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkq7E.html


மைத்திரியை பொம்மையாக்கும் திட்டமில்லை: சஜித்
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 11:31.39 AM GMT ]
ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்திலேயே மக்களின் நன்மதிப்புக்கு ஆளான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எந்தவொரு அதிகாரமுமில்லாத பொம்மையாக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் முயற்சிக்க மாட்டோம் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை தெம்பரவெவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைவாக ஊழல் மோசடிகளில் ஈடுப்பட்ட அனைத்து தரப்பினரையும் பாரபட்சம் பார்க்காது தண்டனை வழங்குவதில் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமுர்த்தி அமைச்சின் ஊடாக சமுர்த்தி வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை திவிநெகும, சமுர்த்தி சலுகைகளை பெறுவோருக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 200 சதவீத சலுகைகளை வழங்குவதாக நாம் அளித்த வாக்குறுதிக்கமைய இம்மாத ஆரம்பத்திலேயே 14 இலட்சத்து 78 ஆயிரத்து 14 பேருக்கு சலுகை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல்மயப்படுத்தலிலிருந்து சமுர்த்தி துறை நீக்கப்பட்டுள்ளதுடன், திறமையின் அடிப்படையில் பதவியுயர்வு, மற்றும் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை நீக்கி பாராளுமன்றத்திற்கு வலுச்சேர்க்கும் கட்டமைப்பை உருவாக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினால் நாட்டிற்கு ஏற்படும் பாதகமான விளைவுகளை நீக்கி இலங்கையில் புதிய அரசியல் கலாச்சாரமொன்றை ஏற்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும், மக்களின் நன்மதிப்பினால் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேனவை அதிகாரங்களற்ற பொம்மையாக்க முற்படவில்லை எனவும், நடைமுறையிலுள்ள ஜனாதிபதி முறைமையில் காணப்படுகின்ற எல்லை மீறிய அதிகாரங்களை நீக்குவதற்கே தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkr1E.html

Geen opmerkingen:

Een reactie posten