தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 april 2015

19வது திருத்தத்தில் குறைபாடுகள் இருப்பினும் தோற்கடிக்க விடமாட்டோம்! 10ம் திகதி வாக்கெடுப்பு!- அனுரகுமார

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து மகஜர் வழங்கிய டெனீஸ்வரன்- மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாட இடமளிக்க முடியாது: சம்பந்தன்
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 01:35.16 PM GMT ]
வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா. டெனீஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து மகஜர் கையளித்தார்.
இதுகுறித்து தெரியவருவதாவது,
வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனையான இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பாகவும் எமது மீனவர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் இன்று வியாழக்கிழமை  பி.ப. 2 00 மணியளவில் அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட ஒன்றுகூடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இவ்வொன்றுகூடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.இரா.சம்பந்தன், திரு.சுரேஷ் பிரேமச்சந்திரன், திரு.செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாணத்தின் மீனவர் சமாசங்களின் தலைவர்கள் மற்றும் இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்விசேட ஒன்றுகூடலில் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி வருகின்ற இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளால் தினந்தோறும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும், அத்தோடு எமது மீனவர்கள் பயன்படுத்தும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளால் எமது கடல் வளம் நாளுக்கு நாள் அழிவடைந்து வருவதை தடுக்கும் செயல்திட்டங்கள் தொடர்பிலும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரால் விசேட மகஜர் ஒன்றும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் அனைத்து இந்திய மீனவர்களையும் கைது செய்யுங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் தமிழ்உதேசிய கூட்டமைப்பு, வடமாகாண மீனவர்களுக்கிடையில் இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி கடற்படையினருக்கு உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்.
இன்று பி.ப 2.30 மணி தொடக்கம் 4.00 மணி வரையில் ஜனாதிபதி செயலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் கட்சியின் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் மாகாண கடற்றொழில் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை மீனவர்கள் சார்பில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் சமாசங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய சந்திப்பில் 3 முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. முதலாவது தீர்மானம் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்கள் தொடர்பாக தமிழக அரசுக்கு எழுத்து மூலம் மகஜர் ஒன்றினை கையளிப்பது. இரண்டாவது விடயம் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டம் விடயங்களை இந்திய மத்திய அரசுக்கும் சுட்டிக்காட்டுவது, மூன்றாவது விடயம் இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறும் தமிழக மீனவர்களை உ டனடியாக கைதுசெய்வது என்ற 3 தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
இதில் முக்கியமாக எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை உடனடியாக கைதுசெய்யும் தீர்மானத்தை உடன டியாக அமுல்ப்படுத்துமாறு கடற்படையினருக்கு சந்திப்பிலேயே ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்தச் சந்திப்பின் போது தமிழக மீனவர்களின் அத்துமீறல்களினால் உண்டாகும் பாதிப்புக்கள் தொடர்பாக எமது மீனவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
மேலும் மாலை 6மணிக்குப் பின்னர் வடபகுதி கடல் எல்லைக் குள் நுழையும் ஆயிரக்கணக்கான இந்திய இழுவை படகுகள் தொடர்பான ஆவணப்படம் ஒன்றும் ஜனாதிபதிக்கு காண்பிக்கப்பட்டது என் அவர் மேலும் தெரிவித்தார். 
3ம் இணைப்பு
மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாட இடமளிக்க முடியாது: இரா.சம்பந்தன்
நாட்டு மக்களின் வளங்களையும் வாழ்வாதாரத்தையும் சூறையாட யாருக்கும் இடமளிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் வடக்கு மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு இடம்பெற்றது.
இதன் போதே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் , பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட வடக்கு மீனவ சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkqyE.html


வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்கினால் ரணிலுடன் கைகுலுக்கத் தயார்: விக்னேஸ்வரன்
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 01:55.14 PM GMT ]
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட பிராந்திய இரத்த வழங்கல் சேவை நிலையமானது இன்று மதியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரட்ன, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன், பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் தவிசாளர் முருகேசு சந்திரகுமார், வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பிராந்திய இரத்த வழங்கல் சேவை நிலையத்தினை திறந்து வைத்துள்ளனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு முதல்வர், 
இன்று நான் கொழும்பு செல்ல வேண்டியிருந்தது. ஜனாதிபதியுடன் சம்பந்தன் அவர்கள் ஒரு கூட்டத்தைக் கூட்டி என்னையும் டெனீஸ்வரனையும் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை பற்றி கருத்துக்கள் வழங்குமாறு கோரியிருந்தார்.
நான் ஏற்கனவே ஜனாதிபதி இந்தியா செல்ல முன் கடற்றொழிலாளர் பிரச்சினைகள் பற்றி என் கருத்துக்களைக் கூறியிருந்ததாலும், இன்று இங்கு வைத்திய கலாநிதி இராஜித சேனாரத்ன வருகை தருவதாக இருந்ததாலும் டெனீஸ்வரனை அங்கு போகுமாறு கோரி நான் இங்கு வந்துள்ளேன். எமது பிரச்சினைகளை ஓரளவு தெரிந்து வைத்து எமக்காகக் குரல் கொடுப்பவர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன அவர்கள்.
இந்தத் தருணத்தில் எம்முடன் சேர்ந்து இந்த நிகழ்வில் அவர் கலந்து கொள்வதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். முல்லைதீவு மாவட்ட மக்களின் நலனை எமது முன்னுரிமை கொடுக்க வேண்டிய ஒரு விடயமாக நினைத்து எமது கடமைகளை ஆற்றி வருகின்றோம்.
எம்மால் பணம் செலவழித்துக் கட்டமுடியாவிட்டாலும் Americares நிறுவனம் தமது செலவில் கட்டித்தந்துள்ள இந்த சத்திரசிகிச்சைத் தொகுதி, இரத்த வங்கி ஆகியவற்றைத் திறந்துவைத்தாவது எமது மகிழ்வையும் கரிசனையையும் உங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளோம்.
முன்னைய அரசாங்கத்திற்கு ஒரு சத்திர சிகிச்சை அளிக்க எமது ஜனாதிபதிக்கு உறுதுணையாக நிற்கின்றவர் கௌரவ அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன. அவர் முன்னைய அரசாங்கத்தின் நோயுற்ற பகுதிகளை வெட்டி சத்திர சிகிச்சை செய்து புதியதொரு அரசாங்கத்தை எமக்குத் தரப் படாதபாடு பட்டுள்ளார். அவருக்கு எமது நன்றிகள் உரித்தாகுக.
இருப்பினும் அவரின் புதிய அரசாங்கத்தின் பிரதமருடன் எனக்கேன் வீண் விவாதம் என்று அவரும் நினைக்கக்கூடும்.எனதருமை மக்களான நீங்களும் நினைக்கக்கூடும். வரமுன் காப்பவனே புத்திசாலி.வருவதை அறிந்து நாங்கள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அது எம்மையே வருத்தும்.
என்னைப் பொறுத்தவரையில் இன்றே திரும்பவும் வீடு சென்று எனது ஓய்வினை மீண்டும் ஏற்றுவாழும் மனோநிலையில்தான் நான் இருக்கின்றேன். எதுவும் தேவையில்லை.ஆனால் பொறுப்புக்கள் தரப்பாட்டால் அவற்றைத் தட்டிக்களிக்க நான் தயாரில்லை.
அண்மையில் பிரதமரின் விஜயம் பற்றி ஓர் அழைப்பிதழ் கிடைத்தது. அதை அனுப்பியவர் என்னைத் தெரிந்த திருமதி ரோசி சேனாநாயக. திருமதி விஜயகலா மகேஸ்வரனின் அழைப்பின் பேரில் பிரதமர் வருகின்றார் என்றும் அந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் என்னையும் பங்குபற்றுமாறு அழைக்கப்பட்டது. என்னைப் பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகம் அழைக்கவில்லை.
பிரதமர் தமது விஜயம் பற்றி எம்முடன் கலந்தாலோசிக்கவுமில்லை.அவர் சார்பான அழைப்பை விடுத்தது அவரின் கட்சியின் பிரமுகர் ஒருவர். கட்சியின் இன்னொருவரின் அழைப்பின் பேரிலேயே அவர் வருகை தந்தார்.
ஆக மொத்தம் இதன் அர்த்தம் என்ன? தமது கட்சியை இங்கு நிலைநாட்ட, அலுவலகங்களைத் திறந்து வைக்க, நேரடியாக மத்தியில் இருந்து மக்களுக்கு நன்மைகளைப் பெற்றுக் கொடுத்து இன்னாரை அண்டினீர்கள் ஆனால் உங்களுக்கு நாங்கள் சகல உதவிகளையும் பெற்றுக் கொடுப்போம் என்று கட்சி முறையாகக் கூறவே பிரதமர் இங்கு வருகை தந்தார்.
இது முற்றிலும் ஒரு அரசியல் ரீதியான பயணம். எனவே நான் மக்களின் பிரதிநிதி என்ற முறையில் பிரதமரின் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லையே என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது.அவர் தமது கட்சியை வளர்க்க வந்தார். வளர்த்துவிட்டுப் போகட்டும். அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமுமில்லை.
225 மக்கள் பிரதிநிதிகள் கொண்ட நாடாளுமன்றத்தில் இன்று 45 பிரதிநிதிகளை மட்டுமே கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிப் பலம் பெற்று ஆண்டு வருகின்றது. அடுத்த பொதுத் தேர்தலில் தமக்கு என்ன கிடைக்குமோ என்ற பயம் உள்ளூரப் பிரதமரை வருத்திக் கொண்டுதான் இருக்கும்.
அதனால்தான் வடமாகாணத்தில் எப்படியாவது காலடி ஊன்ற அவர் பல நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். ஒரு பிரதமரை அண்டினால் பல நன்மைகள் பெறலாம் என்பது எனக்குத் தெரிந்த விடயம்தான்.
ஆனால் அடுத்த பொதுத் தேர்தலில் என்ன நடக்கப் போகின்றது என்பதை அறியாது வடமாகாணத்தில் எம் மக்களின் செல்வாக்கைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த அவர் விழையும் போது அதனை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதும் எனது கடப்பாடுதான். இதிலே தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை.
வடமாகாணத்தில் தமது கட்சியை நிலை நாட்ட பிரதமர் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது கண்கூடு. மக்களால் பெருவாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் புறக்கணித்துத் தனது கட்சியின் சிலரை முன்வைத்தே தமது அரசியலைக் கொண்டு நடத்துவதற்கு எத்தனிக்கின்றார் என்பதும் கண்கூடு.
அடுத்த கட்டமாக இதைத்தரமாட்டேன். அதைத் தருவேன் என்று எங்களுக்கு அரசியல் ரீதியாகப் பிரச்சினைகளை உண்டாக்கப் போவதும் நான் அறிந்ததே. அதாவது எங்களுடன் சேர்ந்தால் உங்களுக்குச் சகல நன்மைகளும் கிடைக்கும். சேராவிட்டால் நீங்கள் எங்களைப் புறக்கணித்தவர்கள் ஆவீர்கள்.
அதன் தாக்கத்தை நீங்கள் ஏற்கச் சித்தமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை எமக்கு உணர்த்த முன் வருவார் என்பதும் நான் தெரிந்த ஒன்றே. இதுதான் கடந்த காலங்களில் நடந்த திருவிளையாடல்கள் ஆகவே உண்மைகளை எடுத்துக் கூறுவது, எங்கள் மக்களுக்கு விசுவாசமாக நாங்கள் நடந்து கொள்வது ஆகியன எந்தக் காலத்திலும் பிழையெனக் கொள்ள முடியாது.
நான் என் சொந்த நன்மை கருதியோ, சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு இடம் கொடுத்தோ முரண் நடவடிக்கைளில் ஈடுபடவில்லை. எமது முரண்பாடானது வடமாகாணத்தில் இருந்து இராணுவ முகாம் ஒன்றைத்தானும் அகற்ற முடியாது என்று கௌரவ அமைச்சர் ஒருவர் கூறியதில் இருந்தே தொடங்கியது.
ஒருசில கேந்திரஸ்தானங்கள் தவிர மற்றைய இடங்களில் இருக்கும் இராணுவத்தினரைப் படிப்படியாக ஒரு குறிப்பிட் கால எல்லைக்குள் வெளியே அனுப்புவேன் என்று பிரதமர் தரமான ஓர் உத்தரவாதத்தைத் தரட்டும். உடனே அவருடன் கைகுலுக்குவேன்.
இராணுவ முகாம் ஒன்றைத்தானும் வெளியேற்றாமல், வலி வடக்கில் உறுதியளித்த ஆயிரம் ஏக்கர்களில் 400 ஏக்கரை மட்டும் விடுவித்து விட்டு அரசியல் ரீதியாகத் தமக்கு இலாபம் தேடும் பிரதமருடன் நான் எவ்வாறு கைகுலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவிப்பது? எமது மக்கள் எங்களை மாகாண ஆட்சிபீடம் ஏற்றியது சில காரணங்களை முன்வைத்து. அவை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகத் தரப்பட்டுள்ளன.
இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. போர் முடிந்த பின்னர் அவர்களுக்கு வடமாகாணத்தில் எந்த வேலையும் இல்லை. வேண்டுமெனில் பொலிஸாரின் தொகையைக் கூட்டட்டும். ஆனால் இராணுவத்தினர் மக்களின் காணிகளை மீளளித்து மக்கள் மத்தியில் இருந்து வெளியேற வேண்டும்.
இவ்வாறான முக்கிய விடயங்களை நாங்கள் அறுதியிறுதியாகப் பேசித் தீர்த்துக் கொள்ளாவிடில் பாதிக்கப்படப்போவது நாங்களே. பிரதமரின் செயலால் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் எமது வடமாகாண சபைக்கிருக்கும் மிக நலிந்த மெலிந்த அதிகாரங்கள் பற்றிய உண்மைகள் வெளிவரத்தொடங்கியுள்ளன.
மத்தியால் எந்த அளவுக்கு மாகாணத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை எமக்குணர்த்தி வருகின்றார் பிரதமர். இதை அறியாமல் மத்தியின் மாய்மாலங்களுக்கு மண்டியிட முனைந்துள்ளோம் எம்முட்சிலர்.
இதிலே எமது மக்களின் உரித்துக்கள் அடங்கியுள்ளன. இப்பேர்ப்பட்ட செயல்களை வெறும் மனித உறவுகளின் வெளிப்பாடு என்று கூறமுடியாது. ஆழமாக அமைந்திருக்கும் பக்கச்சார்பான எண்ணங்களின் வெளிப்பாடுகள்என்றே கொள்ள வேண்டும்.
இதன் காரணத்தினால்தான் மக்களாகிய உங்களுக்கு முன்னர் நான் பலமுறை கூறியதை இன்றும் இங்கு கூறக் கடமைப்பட்டுள்ளேன். எனதருமை மக்களே! மத்தியின் அரசாங்கம் தரும் அனைத்து நன்மைகளையும் இருகரம் நீட்டி வாங்கிக்கொள்ளுங்கள்! அவர்கள் அழைக்கும் கூட்டங்களுக்குப் போய் என்ன சொல்கின்றார்கள் என்பதைக் கேட்டுக் கொள்ளுங்கள்!
ஆனால் தேர்தல் காலம் வந்ததும் ஒரு வாக்கையாவது தேசியக் கட்சிகள் என்று தம்மை அடையாளப்படுத்தி வரும் கட்சிகளுக்குக் கொடுக்காதீர்கள். மத்தி எமக்கு நஷ்டஈடாகத் தரவேண்டிய கோடிகளில் மிகக்குறைந்த ஓர் அளவே அவர்கள் எமக்குத் தரப்பார்ப்பது. எமது காணிகள் விடுபடவில்லை.
போரினால் பாதிக்கப்பட்ட எம்மக்களின் தேவைகள் பூர்த்திசெய்யப்படவில்லை. பாரம்பரிய தொழில்களைச் செய்ய அனுமதி கிட்டவில்லை. போர்க்காலத்தில் வெளியில் இருந்து வந்தோர் வியாபாரங்களை விட்டுச் செல்லவில்லை.
இராணுவத்தினர் தெற்கிலிருந்து மக்களைக் கொண்டுவந்து குடியேற்றும் நிலை நிறுத்தப்படவில்லை.காணிகளை இராணுவமும் அவர்களை அண்டியோரும் கபளீகரம் செய்வது நிறுத்தப்படவில்லை.
எனவே இவற்றை எடுத்துக் கூற உங்களுக்கு எமது நிலையறிந்த மக்கட் பிரதிநிதிகளே மத்தியிலும் மாகாணத்திலும் அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள். நாங்கள் தேர்தலுக்கு முன்னமே சென்ற டிசெம்பர் 30ஆம் திகதியன்று அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்துடன் சேர்ந்து எவ்வாறு எமக்கு உதவி செய்யலாம் என்பது பற்றி உரிய ஆவணங்களை மூன்று தலைவர்களுக்கும் அனுப்பி வைத்திருந்தோம்.
எமது கோரிக்கைகளில் ஆளுநர், பிரதம செயலாளர், ஆகியோரை மாற்றியதைவிட அதுபற்றி வேறு எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால் எமக்கு சகல விதத்திலும் ஆதரவையும் அன்பையும் காட்டும் அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்னபோன்றவர்களுக்கு எமது நன்றியறிதல்களை எடுத்து இயம்புவோமாக என்றார்.
இந்த நிகழ்வில் Americares நிறுவனத்தின் அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணபை உறுப்பினர்கள், அரச அதிபர், வைத்திய அதிகாரிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkqyF.html

19வது திருத்தத்தில் குறைபாடுகள் இருப்பினும் தோற்கடிக்க விடமாட்டோம்! 10ம் திகதி வாக்கெடுப்பு!- அனுரகுமார
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 02:13.30 PM GMT ]
ே19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதை தடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல, பெலவத்தையில் உள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எமது நாட்டில் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியின் எதிர்பார்ப்பிலேயே ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை ஜனவரி 8ம் திகதி மக்கள் வீழ்த்தினர்.
பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளை கொண்டுள்ள கட்சிகளும் தனி நபர்களும் ஒரு மேடைக்கு வந்து ஒரே நிலைப்பாட்டை வெளியிட்டனர்.
இவர்களிடம் தேசிய பிரச்சினை, பொருளாதார கொள்கைகள் தனித்தனியாக கொள்கைகள் உள்ளன. அத்துடன் வெளிநாட்டு கொள்கைகள் குறித்தும் தனித்தனியாக நிலைப்பாடுகள் உள்ளன.
எனினும் நாட்டில் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் ஏற்படுத்துவதற்காகவே அனைத்து வேறுபாடுகளுடன் ஒன்றாக இணைக்கப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான இந்த கூட்டணியின் பிரதான பொறுப்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாகும்.
அத்துடன் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது போல, சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதும் முக்கிய பொறுப்பாகும்.
இந்த நிலையில், தேசிய நிறைவேற்றுச் சபையில் விரிவாக கலந்துரையாடப்பட்டு 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பி எதிர்பார்க்கும் திருத்தங்கள் இதில் காணப்படவில்லை. அதில் குறைபாடுகள் இல்லை. பல குறைபாடுகள் இருக்கின்றன.
நாம் எதிர்பார்க்கும் அனைத்தையும் இந்த ஆட்சியின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என நாம் ஒரு போதும் நம்பவில்லை.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் இருக்கும் அனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் முக்கியமான பல திருத்தங்கள் இந்த திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்றன எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
2ம் இணைப்பு
19க்கான வாக்கெடுப்பு ஏப்ரல் 10ம் திகதி
19வது திருத்த சட்ட யோசனை தொடர்பில் எதிர்வரும் 10ம் திகதியன்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர், இந்த தகவலை வெளியிட்டார்.

19வது திருத்தத்தில் குறைபாடுகள் இருப்பினும் தோற்கடிக்க விடமாட்டோம்! 10ம் திகதி வாக்கெடுப்பு!- அனுரகுமார
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkqyG.html

Geen opmerkingen:

Een reactie posten