[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 09:07.00 AM GMT ]
முஸ்லிம்களுடைய இஸ்லாமிய உடையாகிய நிக்காபினையும், பர்தாவினையும் முற்றாக மூடிய தலை கவசத்தினையும் தடை செய்ய வேண்டும் என்று முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த சிங்கள ராவய அமைப்பினரை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் வன்மையாக கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
சிங்கள ராவய எனும் பௌத்த கடும்போக்கு அமைப்பு மதகுருவான “மாகல்கந்தே சுதந்த”அவர்கள் முஸ்லிம் பெண்கள் அணிகின்ற நிக்காபினை ஒரு ஆணிற்கு அணிவித்து அந்த உடையினை முற்றாக தலையை மறைக்கும் தலைக்கவசம் அணிந்த ஒருவருடன் ஒப்பிட்டுக்காட்டி முஸ்லிம்களுடைய இஸ்லாமிய உடையாகிய நிக்காபினையும், புர்தாவினையும் முற்றாக மூடிய தலை கவசத்தினையும் தடை செய்ய வேண்டும் என்று மிகக்கேவலமாக முஸ்லிம்களுடைய அடிப்படை நம்பிக்கையினை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார்.
இவ்வாறான செயல்களை மிக வன்மையாக கண்டிக்கின்றேன். கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் ஹலால் பிரச்சினைகளில் தொடங்கியது போன்று இவ்வரசாங்கத்தில் நிக்காபில் தொடங்கி விடுமோ என அச்சப்பட வேண்டி இருக்கின்றது.
ஆட்சி மாற்றத்தில் மிகப்பெரிய பங்களிப்பினை முஸ்லிம்கள் செய்திருக்கின்ற இத்தருணத்தில் தொடர்ச்சியாக முஸ்லிம்களின் அடிப்படைகளுக்கு எதிராக இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படும் போது அதனை கண்டும் காணாமல் இருப்பது போன்ற நிகழ்வானது மேலும் முஸ்லிம்களை இவ்வரசின் மீது நம்பிக்கை இழக்கின்ற செயலாக மாறிவிடும்.
ஆகவே இவ்வாறான விடயங்களில் அரசாங்கம் அலட்சியமாக இருந்து விடாமல் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாது போனால் கடந்த அரசாங்கம் ஆதரித்து வளர்த்தெடுத்த கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபலசேனாவைப் போன்று இவ்வியக்கங்கள் சிங்கள, முஸ்லிம் மக்களிடையே இன முறுகலை தோற்றுவித்து பாரியா அழிவிற்கு இட்டுச்செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்த விடயத்தினை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டு அமைச்சர்கள் இராஜினாமா செய்யத் தீர்மானம்
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 09:41.38 AM GMT ]
அண்மையில் தேசிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்ட இருவர் தமது பதவிகளை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவபடுத்தி அமைச்சு பதவிகள் பெற்றுக்கொண்டவர்களே இவ்வாறு இராஜினாமா செய்யவுள்ளனர்.
ராஜினாமா தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர்களிடம் முறைப்படி அறிவிக்கப்படவுள்ளது.
குறித்த அமைச்சர்களுக்கு வாக்களித்தவர்களிடமிருந்து ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பு காரணமாக இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அவர்களுக்கு தங்கள் மாவட்டங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரணிலுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் இடையில் சந்திப்பு
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 09:48.31 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள இலங்கையின் புதிய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாகவும் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டது.
அத்துடன் மிக முக்கிய விடயமாக கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை மீளக் கையளிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்துவதாகவும், அதற்கான உரிய நடவடிக்கைகளைத் தான் மேற்கொள்வதாகவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
இக்கலந்துரையாடலின் போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஆர்.நஜா முஹம்மத், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் ஐயூப் ஆகியோர் உள்ளிட்ட தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq4A.html
மன்னாரில் நிலங்களை மீண்டும் மக்களுக்கு வழங்க ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 10:03.50 AM GMT ]
இந்த பேச்சுவார்த்தை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மக்களது காணிகளை மீண்டும் அவர்களுக்கே வழங்குவது தொடர்பிலும், குறித்த மக்களை மீள்குடியமர்த்துதல் தொடர்பிலும், நிலங்களை அடையாளம் காண்பது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.
இதன்படி மாவட்ட செயலகங்களுக்கு கீழுள்ள காணிகளை இந்த நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நிலங்களை மக்களிடம் கையளிக்கும் போது இயற்கை வளங்களை பாதுகாத்தல், மற்றும் பராமரித்தல் செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேட்டு கொண்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் ஆயிரத்து 734 பயனாளிகள் தங்களது நிலம் குறித்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் 902 பயனாளிகள் தமது சொந்த காணிகளை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என இனங்காணப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq4C.html
Geen opmerkingen:
Een reactie posten