ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு “TNA” முக்கிய பங்கு: சந்திரிக்கா
த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கிய பங்கினை வகித்துள்ளது.
புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான மீளமைப்பு செயற்பாடுகளை இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் வரவேற்றுள்ளன.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அணுகும் முறை குறித்து விமர்சனங்களை வெளியிடுகின்றனர்.
இதுவே அவர்களின் அடையாளம்.
எனினும் கூட்டமைப்புடனான புதிய அரசாங்கத்தின் உறவு சிறப்பாக இருக்கிறது என்று சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/103799.html
நாடாளுமன்றத்தில் 225 – 250 ஆக அனுமதி.
புதிய தேர்தல் விதிமுறை வெற்றிகரமாக அமுலாக்கப்படுவதற்கு, தற்போது 225 பேராக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 250ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
இதன்படி 140 பேர் விருப்பு வாக்குகளின் அடிப்படையிலும், 80 பேர் தொகுதிவாரியாகவும், 30 பேர் தேசிய பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்யப்படுவார்கள்.
இந்த திட்டத்துக்கு ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்பன இணக்கம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
எனினும் ஜே வி பி, இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகரிப்பை ஏற்றுக் கொண்டுள்ள போதும், 125 பேரை தொகுதிவாரியாகவும், 125 பேரை விருப்பு வாக்குகளின் அடிப்படையிலும் தெரிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் அடுத்தாக நடைபெறவுள்ள தேர்தல் தற்போதுள்ளமை முறையின் படியே நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்து வருகிறது.
http://www.jvpnews.com/srilanka/103802.html
இலங்கை வாய்ப்பை தவறவிட்டு விட்டது – அமெரிக்க உயர் அதிகாரி
சிறிலங்காவுக்கு தற்போது, நல்லிணக்கம், நீதி, உண்மையான அமைதியை அடையும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும், ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று கொழும்பில், போருக்குப் பிந்திய நல்லிணக்கத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“ஒருதரப்பு மறுதரப்பின் இதயங்களை வதைத்தும், மீறல்களைப் புரிந்தும், இரண்டு தரப்பும் குறைகளைப் புரிந்துள்ளன.
போர்க்களத்தில் ஒருதரப்பு வெற்றி பெற்று போரை முடிவுக்கு கொண்டு வந்திருந்தாலும், பிளவுகள் குணமடையவில்லை.
150 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா கற்ற பாடத்தை, இன்னும் பல நாடுகளும் கற்றுக்கொண்ட பாடத்தை சிறிலங்காவுக்கு பரிந்துரைக்கிறேன் -“உங்களால் உண்மையில் ஒரு உள்நாட்டுப் போரை வெல்ல முடியாது”
போருக்குப் பின்னர் ஐந்து ஆண்டுகளாக, பல்வேறு விவகாரங்கள் குறித்து சிறிலங்காவுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் இடையில், பதற்றம் நிலவி வருகிறது.
இப்போது சிறிலங்காவின் வரலாற்றில், முக்கியமான தருணமொன்று வந்திருக்கிறது. உங்களுடைய அர்ப்பணிப்புக்கு, நன்றி.
நல்லிணக்கம், நீதி, உண்மையான அமைதியை அடைவதற்கு இப்போது வாய்ப்புக் கிடைத்துள்ளது.
பின்நோக்கிப் பார்த்து, அப்பாவிகள் பாதிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு, எல்லாத் தரப்பிலும் தவறு செய்தவர்களை தண்டனைக்குட்படுத்துவது அவசியம். இந்த செயல்முறைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும்.
இலங்கை மக்களும், அவர்களின் புதிய அரசாங்கமும், தமது ஜனநாயக பாரம்பரியம், சகிப்புத்தன்மை, சிவில் சமூகத்தை மீட்டெடுப்பதற்கு ஏற்கனவே பெரும் பாய்ச்சலை நடத்தியுள்ளனர். சிறிலங்காவில் அது நிச்சயம் தொடரும் என்று அமெரிக்கா நம்புகிறது.
இலங்கை மக்களிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்ப சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும், நடவடிக்கைகளை நாம் வரவேற்கிறோம்.
உங்களின் இந்த முயற்சிகள் நிலையான அமைதியைக் கொண்டு வருவதற்கு ஆதரவு வழங்க நாம் தயாராக இருக்கிறோம்.
முன்நோக்கிச் செல்வதற்கு சிறிலங்கா கடினமான தெரிவுகளை செய்ய வேண்டியிருக்கும்.
ஆனால், சிறிலங்காவுக்கு உதவ, அமெரிக்கா தனது சக்தியின் மூலம் எல்லாவற்றையும் செய்யும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/103805.html
Geen opmerkingen:
Een reactie posten