[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 11:41.05 PM GMT ]
ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க இந்த பதிலை வழங்கியுள்ளார்.
அதில், பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதி மற்றும் ஏனைய பதவிகளுக்கு மிகவும் பொருத்தமானவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் ஒன்று வரும் போது அவரை களத்தில் நிறுத்துவது தொடர்பில் ஹெல உறுமய தீர்மானிக்கும் என்றும் நிசாந்த தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவின் 19 வது சரத்துக்கு எதிரான கொள்கையை ஏற்கனவே, பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவஸ்ரீ, எழுத்தாளர் காமினி வியாங்கொட மற்றும் ஜேவிபியினர் விமர்ச்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீகிரியா சுவரில் எழுதிய தமிழ் யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானம்
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 11:59.04 PM GMT ]
குறித்த குற்றத்துக்காக அவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி குறித்த யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்க தீர்மானித்துள்ளதாக சமூக சேவைகள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
தமது முகநூலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயலுக்காக அவர் நீதியமைச்சருக்கும் பிரதி வெளியுறவு அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
குறித்த யுவதி சீகிரியா சுவரை சேதப்படுத்தவேண்டும் என்பதற்காக தமது பெயரை அதில் எழுதவில்லை என்று ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
உதயஸ்ரீ, கடந்த பெப்ரவரி 14ம் திகதியன்று கைதுசெய்யப்பட்டார்.
கடந்த மாதம் குறித்த பெண்ணின் தாயார் தமது பெண் அறியாமல் செய்த தவறுக்காக அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்யவேண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புலிச் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மகசீன் சிறைச்சாலையின் பாதுகாப்பு குறைப்பு!
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 12:27.54 AM GMT ]
பாரியளவு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பல தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிக்கப்படுகிறது.
இது வரை காலமும் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
எனினும்ää குறித்த இராணுவப் பாதுகாப்பை நீக்கிக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இஸ்ரேல் ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் இந்தப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பயங்கரவாத சந்தேக நபர்கள் பல சந்தர்ப்பங்களில் உணவுத் தவிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
இவ்வாறான ஓர் நிலையில் இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டமை பாரிய சிக்கலை ஏற்படுத்தக் கூடுமென சிறைச்சாலை அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெலிக்கடைச் சிறைச்சாலை மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த ரி56 ரக ஆயுதங்களும் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
19ம் திருத்தம் பௌத்தத்தை அழிக்கும் முயற்சியாகவே கருதவேண்டும்!- தினேஸ் - 19ன் விசாரணைகள் இன்றும் தொடர்கின்றன
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 12:19.43 AM GMT ]
பௌத்த மதத்தை அழிக்கும் ஓர் சூழ்ச்சித் திட்டமாகவே 19ம் திருத்தச் சட்டத்தை கருத வேண்டியுள்ளது.
19ம் திருத்தச் சட்டத்தின் 33ம் சரத்தில் சமயம் தொடர்பிலான பகுதியில் இந்த சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சரத்தின் அடிப்படையில் ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டால் பௌத்த மதத்தை பாதுகாக்க முடியாது. இந்த நிலைமையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசியலமைப்பு மாற்றம் என்பது என்ன என்பதனை நாடு அறிந்திருக்கவில்லை. மக்களுக்கு தெரியாமல் அரசியலமைப்பை மாற்றும் நாடு உலகில் வேறு எங்கும் கிடையாது.
அரசியல் அமைப்பின் 9ம் சரத்தின் அடிப்படையில் பௌத்த மதத்தை பாதுகாக்க அரசாங்கம் கடப்பாடுடையது.
அந்த விடயங்களில் எவரும் கை வைக்கக் கூடாது, அவ்வாறு மாற்ற வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தினேஸ் குணவர்தன சிங்கள பத்திரிகையொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.
19ன் சட்டவியாக்கியான விசாரணைகள் இன்றும் தொடர்கின்றன
19 வது அரசியலமைப்பின் சட்டவியாக்கியானம்; குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் விசாரணைகள் நேற்று ஆரம்பமாகின.
இதன்போது விசேடமாக தாக்கல் செய்யப்பட்டிருந்த 16 மனுக்களும் 5 இடையீட்டு மனுக்களும் ஆராயப்படுகின்றன.
பிரதம நீதியரசர் கே ஸ்ரீபவன், நீதியரசர்களான சந்திரா ஏக்கநாயக்க, பிரியசாத் ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இன்று மேலதிக விசாரணைகள் இடம்பெற்று நீதிமன்றம் சட்டவியாக்கியானம் நாடாளுமன்ற சபாநாயகருக்கு இரகசிய தீர்ப்பாக அறிவிக்கப்படும்.
இதனையடுத்து சபாநாயக்கர் அதனை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்துவார்.
இந்த மனுக்களில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதன்போது பெரும்பாலான மனுக்களில் ஜனாதிபதியின் அதிகாரங்கள், அரசாங்கத்தின் அடிப்படை உரிமைகள் என்பன தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
அத்துடன் 19வது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவற்கு நாடாளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அரசாங்கம் இந்த யோசனையில் தமது திருத்தங்களை உள்ளடக்கி கடந்த மாதம் 13ம் திகதியன்று வர்த்தமானியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkp2E.html
Geen opmerkingen:
Een reactie posten