தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 april 2015

ரவிராஜ் கொலை சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

அளுத்கம படுகொலை! அசமந்த போக்கில் செயற்படும் குற்றவியல் பிரிவு
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 10:43.48 AM GMT ]
அளுத்கமையில் இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது படுகொலை செய்யப்பட்ட இரு முஸ்லிம்கள் தொடர்பில் குற்றவியல் பிரிவு இதுவரை அறிக்கை சமர்பிக்கவில்லை என களுத்தறை நீதவான் நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே நீதிமன்ற நீதவான் இதனை தெரிவித்துள்ளார்.
அளுத்கமையில் கடந்த வருடம் ஜுன் மாதம் இடம்பெற்ற இனக்கலவரத்தில் இரு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
குற்றவியல் பிரிவு இது தொடர்பில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் இதுவரை அக்கறை கொள்ளாமல் அசமந்த போக்கில் செயற்பட்டு வருகின்றது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் ஜுன் மாதம் 25ம் திகதி கொழும்பு குற்றவியல் பிரிவு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வலியுறுத்தி கடிதமொன்றை அனுப்புமாறு நீதிமன்ற பதிவாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பில் சட்டத்தரணி சப்ராஸ் ஹம்சாவும், ஆர்.ஆர்.ரி அமைப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

தேசிய நிறைவேற்று சபையில் நீடிக்க ஜே.வி.பி தீர்மானம்
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 10:57.33 AM GMT ]
தேசிய நிறைவேற்று சபையில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
தேசிய நிறைவேற்று சபையின் கூட்டம் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதனையடுத்தே மக்கள் விடுதலை முன்னணி இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி தொடர்ந்தும் தனது முழு ஆதரவையும் வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மக்கள் விடுதலை முன்னணி தேசிய நிறைவேற்று சபையிலிருந்து விலகி கொள்ளும் என பல்வேறு தரப்பினர் மத்தியில் எழுந்த கருத்தையெல்லாம் புறந்தள்ளிவிட்டு நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ரவிராஜ் கொலை சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவு!
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 11:25.00 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படை வீரர்கள் மூவரையும் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படை வீரர்கள் மூவரையும் இன்று நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் ஆஜர்ப்படுத்தினர்.
இதன்போது குறித்த சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த வேண்டியது அவசியம் என குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
அதிகாரிகளின் இந்தக் கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பெனாண்டோ, அடுத்த மாதம் 7ம் திகதி சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.
அதுவரை சந்தேகநபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
2006 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 10 ஆம் திகதி ரவிராஜ் கொழும்பு நாரஹேன்பிட்டிய மனிங்ரவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkp7C.html

Geen opmerkingen:

Een reactie posten