தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 april 2015

யாழ் முதலமைச்சர் ஐ.நா. சிறப்பு நிபுணரோடு பேசியது என்ன?

பெரும் எண்ணிக்கையிலான துப்பாக்கி ரவைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 08:38.53 AM GMT ]
பெரும் எண்ணிக்கையிலான துப்பாக்கி ரவைகளுடன் சந்தேக நபர் ஒருவரை பூனகரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பூனகரி முக்கம்பன் ஜஸ்டின் வீதியில் வைத்து 17 வயதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலித்தின் உரையொன்றில் சுமார் 235 துப்பாக்கி ரவைகள் எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரி56 தன்னியக்க துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இந்த தோட்டாக்கள் துருப்பிடித்திருந்ததாகவும் இவற்றை களஞ்சியத்தில் மீளவும் சேர்க்க முடியாத நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த துப்பாக்கி ரவைகளை விட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மக்கள் கூடும் இடமெல்லாம் மகிந்த
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 08:42.42 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று காலை கொள்ளுபிட்டியிலுள்ள திரையரங்கிற்கு சென்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபாதி குறித்த திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள மஹரஜ கெமுனு சிங்களத் திரைப்படத்தை பார்வையிடுவதற்கு சென்றிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் பொது தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் இலங்கையில் ஆட்சி அமைக்கும் நோக்கில் பொது மக்கள் கூடும் இடமெல்லாம் வலம் வருவதை ஊடகங்கள் மூலமாக அவதானிக்க முடிகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன மிகவும் கண்ணியமாக தன்னை அதிமேதகு, அதிஉத்தமர் என அழைக்க வேண்டாம் எனக் கூறி வருவதுடன் எளிமையாக நடந்து கொள்வதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்ற சிங்கத்தை போல் செயற்படுவதை காண முடிகிறது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தோல்வியடைந்தவர் ஓய்வெடுப்பதாக கூறுகிறார்.
அவர் தனது ஓய்வு நாட்களை வினோதமாக கழிக்கும் நோக்கில் தோல்வியடைந்த அவர், இவ்வாறு பல இடங்களுக்கு செல்வது ஒரு அரசியல் சூட்சுமமே என்பது அனைவரும் அறிந்த விடயம்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தான் ஒரு அப்பாவி என்பதை நிரூபித்துக் காட்டும் நோக்கத்திலும் எதிர்வரும் பொது தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதம வேட்பாளராக நிறுத்தி மீண்டும் இந்த நாட்டை என் குடும்பத்திற்கு தாரை வார்த்து விடுங்கள் என கேட்கும் போர்வையிலேயே பொது மக்கள் கூடும் இடமெல்லாம் சென்று அனுதாபம் கோரி வருவதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.
மகிந்தவின் இப்படியான போலி நாடகங்களை கண்டு ஏமாறுவதற்கு மக்கள் என்ன மகிந்த சிந்தனையின் ஏமாளிகளா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தாம் அரசியல் தொலைநோக்கும் செயற்படுபவர்கள் என்பதை மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெளிவாக எடுத்து காட்டியிருந்தனர்.
மகிந்த ராஜபக்ச மக்களின் உணர்வுகளை இன்னுமா புரிந்து கொள்ளாமல் இருக்கின்றார் எனவும் அவர் மக்களை ஏமாற்ற துடியாய் துடித்து வருகிறார் எனவும் அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyETVSUkpyB.html

பசில் பற்றி விமல் வீரவன்ஸ கூறியது உண்மை!– முன்னாள் ஜனாதிபதி
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 09:06.39 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதியின் தோல்விக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவே காரணம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ கூறுவது உண்மை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் நேற்று நடைபெற்ற நூல் வெளியிட்டு வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட மகிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலாளர் இது குறித்து கேட்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
உங்களது தோல்விக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவே காரணம் என விமல் வீரவன்ஸ கூறுவதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என ஊடகவியலாளர்கள் மகிந்தவிடம் கேட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, விமல் வீரவன்ஸ கூறியதை மதிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் தோல்விக்கும், குடும்பத்தினர் மீதான விமர்சனங்களுக்கும் பசில் ராஜபக்சவே காரணம் என ராஜபக்ச தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்த விடயம் ஊடகத்துறையிலும் அரசியல் துறையிலும் வெகுவாக பேசப்பட்டு வரும் விடயமாக மாறியுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், பசில் ராஜபக்ச எதிர்வரும் 20ம் திகதி இலங்கை வரவுள்ளார்.
இலங்கை வரும் பசில் எடுக்கப் போகும் அரசியல் தீர்மானம் குறித்தும் ராஜபக்ச குடும்பத்தினர் மத்தியில் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


ஜேர்மன் தூதுவர் - யாழ். ஆயரைச் சந்தித்து பேச்சு
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 09:18.39 AM GMT ]
ஜேர்மன் நாட்டின் தூதுவர் ஜர்ஜன் மொர்ஹாட் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு யாழ்.மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்தை சந்தித்து சமகால நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டுள்ளனர்.
இன்றைய தினம் காலை 10.00 மணியளவில் விஜயம் மேற்கொண்டு சமகால நிலமைகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளார்.
குறித்த சந்திப்பின் பின்னர் சந்திப்பு தொடர்பாக யாழ். ஆயர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது,
அவர்கள் முக்கியமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருகை தந்தமை தொடர்பாக கேட்டிருந்தார். நாங்கள் கூறியிருக்கின்றோம். சிங்கள அரசின் கொள்கையும் தமிழ் அரசின் கொள்கையும் மாறுபட்டதாக காணப்படுகின்றது.
இதன் காரணமாகவே யாழ்.வந்த பிரதமர் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்த போதும் வடமாகாண முதலமைச்சருடன் பேசி அவர்களுடன் இணைந்து, செயற்படாமையினால் அது தமிழ் மக்களை பெரும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியிருக்கின்றது.
மேலும் வடக்கிற்கு பிரதமர் மேற்கொண்ட விஜயம் தொடர்பாக ஆராய்வதற்கு வருகை தந்திருந்தனர். மீள் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மீள்குடியேறிய மக்களுடைய தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை,
பிரதமர் வந்தமை நல்ல தருணம் மாகாண சபைக்கு அதனுடைய முதலமைச்சருக்குமிடையில் இணக்கத்தை கொண்டுவரும் சந்தர்ப்பமாக இருந்திருக்கும் பிரதமர் நெருக்கத்தை காட்டவில்லை. என என்னிடம் கேட்டிருந்தார்கள் அதற்கு நான் கூறியிருந்தேன்.
அவர்களுக்குள் கொள்கை தகராறுகள் இருந்திருக்கலாம், மக்களை பொறுத்தமட்டில் அவ்வாறான நிலை இல்லை. என்றேன் மேலும் இன்றைக்கு முக்கியமாக மக்கள் விருப்புவது என்ன என கேட்டார்கள். இந்த ஆட்சிமாற்றத்திற்கு தமிழர்களும், முஸ்லிம்களும் காரணம்.
எனவே அவர்களும் ஆட்சியில் பங்காளிகளாக இருக்கவேண்டும். எனவும் கூறியிருந்தார்கள். குறிப்பாக பிரதமர் வந்து சில காரியங்களை செய்துள்ளார். காணிகளை கொடுப்பதாக கூறியிருக்கின்றார். தொடர்ந்து காணிகளை விடுவிப்பதாக கூறியுள்ளார். ஆகவே சந்தோசம்.
ஆனால் மீள்குடியேறிய மக்கள் எல்லைகளை கண்டறிந்து குடியேறுவதற்கான ஆயத்தங்களை செய்துள்ளார்கள், கத்தோலிக்கர்கள் ஆலயம் கேட்டதை கூறியிருக்கின்றேன். அவர்கள் இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் சுவாமிநாதனுடன் சொன்னதாக கூறினார்கள் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyETVSUkpyE.html


யாழ் முதலமைச்சர் ஐ.நா. சிறப்பு நிபுணரோடு பேசியது என்ன?
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 09:34.06 AM GMT ]
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிபுணர் பப்லோ டீ கிறெப் தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிபுணர் பப்லோ டீ கிறெப் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் மன்னார் ஆயர் உள்ளிட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன்,
நண்பகல் 12.30 மணியளவில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர்.
குறித்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் இடம்பெற்றிருந்தது.
எனினும் குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக, இரகசியம் காக்குமாறு முதலமைச்சரிடம் மேற்படி குழுவினர் கூறியதற்கமைய பேச்சுவார்த்தையில்
என்ன விடயம் பேசப்பட்டது என்ற விடயம் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

http://www.tamilwin.com/show-RUmtyETVSUkpyF.html

Geen opmerkingen:

Een reactie posten