தென்னாபிரிக்க மத்தியஸ்தம் தமிழீழத்தை உருவாக்கும்: டாக்டர் வசந்த பண்டார
தென்னாபிரிக்காவின் மத்தியஸ்தத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் இங்கு தனித் தமிழீழம் உருவாகும். எனவே, அரசாங்கம் இதனை நிராகரிக்க வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
துப்பாக்கியில் ரவைகளைப் போட்டு சுடுவதற்கு தயார்படுத்தி அமெரிக்காவின் கையில் கொடுத்துவிட்டு ஜெனீவாவில் இந்தியா கைகளைக் கழுவிக்கொண்டது என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக தேசப்பற்று தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், யுத்த காலத்தில் நோர்வே, ஜப்பான் போன்ற நாடுகள் எமது நாட்டு நிலைமைகளை கண்காணிப்பதற்காக இணைத்தலைமை நாடுகள் என்ற பெயரில் நியமிக்கப்பட்டன.
இதேபோன்று இன்று இந்தியா கபடத்தனமான நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. அதன் வெளிப்பாடே தென் ஆபிரிக்காவின் மத்திஸ்தமாகும். இந்தியா, ஜப்பான், தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பாக உதவவும் எதிர்கால நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடை வருமானால் அதிலிருந்து எம்மை பாதுகாக்கவும், உதவிகளை வழங்கவும் ஜப்பான் முன்வரும். இந்தியாவும், தென்னாபிரிக்காவும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்ற அழுத்தத்தைக் கொடுக்கும்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் அரசாங்கம் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் நிலைமைக்கு தள்ளப்படும்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் அரசாங்கம் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் நிலைமைக்கு தள்ளப்படும்.
இறுதியில் இது இலங்கையில் பிரிவினையை நோக்கிச் செல்லும். தென்னாபிரிக்க பிரிவினைக்கு துணை போகும். இறுதியில் தனித் தமிழீழம் உருவாகும். இதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திட்டமாகும்.
http://www.jvpnews.com/srilanka/64733.html
அபிவிருத்திக்கு இன நல்லினக்கம் வேண்டும் – அமெரிக்கத் தூதுவர் மிச்சல்
நாட்டின் அபிவிருத்தியை ஏற்படுத்த இன நல்லிணக்கம் முக்கியமானது என அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே. சிசன் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற கிரிக்கட் போட்டித் தொடர் ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா முழு அளவில் ஆதரவளிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கல்வி, விளையாட்டு மற்றும் ஏனைய சமூக நலத் திட்டங்களின் மூலம் நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/64730.html
அரசைக் கவிழ்க்க மக்கள் கிளர்ச்சிக்கு வாய்ப்பு: சந்திரிகா
எதிர்க்கட்சிகள் ஜனநாயக ரீதியில் அரசாங்கத்தை கவிழ்க்காவிட்டால், மக்கள் கிளர்ச்சி நடத்தி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நிலைமை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சில நாடுகளில் இடம்பெற்ற கிளர்ச்சிகளைப் போன்று இலங்கையிலும் கிளர்ச்சிகள் வெடிக்க வாய்ப்பு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உடவலவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த கால அரசியல் தலைவர்களின் சேவைகளை தற்காலத் தலைவர்கள் மறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். பெருமளவிலான அரசியல்வாதிகள் பொருளாதார நன்மைகளை அடிப்படையாகக் கொண்டே தேர்தலில் போட்டியிடுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஊழல் மோசடிகளை தடுக்க பல்வேறு வழிகளில் முயற்சிகளை செய்து வந்ததாகவும், தற்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/64736.html
Geen opmerkingen:
Een reactie posten