தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 4 april 2014

இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகமா?- ஜி.கே.வாசன் மறுப்பு,இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது ஏன்?- சுதர்சன நாச்சியப்பன்!!!ellaame pathavikkaaka!

உள்ளக விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவி வழங்க வேண்டும்!- வை.கே. சின்ஹா கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 04 ஏப்ரல் 2014, 03:31.16 PM GMT ]
போர் குற்றச்சாட்டுக்கள் செயல்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகளை நடாத்த ஐக்கிய நாடுகள் சபை உதவிகளை வழங்க வேண்டும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச சுயாதீன விசாரணைகளை வலியுறுத்துவதனை விடவும், உள்ளக ரீதியில் முழு அளவிலான விசாரணைகளை நடாத்த இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நாடுகளின் மனித உரிமை தொடர்பிலான பிணக்குகளுக்கு உள்ளக ரீதியான பொறிமுறைமை ஒன்று அமைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதன் மூலம் நிரந்தரமான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கும் இடையில் விரைவில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது.
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்வுத் திட்டத்தின் மூலம் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பான பிணக்குகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்களை முன்வைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய காத்திரமான ஓர் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETYLWfsy.html

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது ஏன்?- சுதர்சன நாச்சியப்பன்
[ வெள்ளிக்கிழமை, 04 ஏப்ரல் 2014, 12:29.19 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததற்கான காரணத்தை மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் விளக்கியுள்ளார்.
இத்தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது, இலங்கையின் மீதான சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இலங்கை வாழ் தமிழர்களின் மறுகுடியமர்த்தல், அகதிகள் மறுவாழ்வு, தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகளில் இந்திய அரசு அதிக முதலீடு செய்து, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியா இத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தால், இலங்கையில் தமிழர் அதிகமாக வாழும் பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீனா மேற்கொள்ள வாய்ப்பாக அமைந்திருக்கும்.
இதன் மூலம் இலங்கையின் மீதான சீனாவின் பிடி மேலும் அதிகரித்திருக்கும்.
இதைக் கட்டுப்படுத்த இந்தியா மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கைதான், தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் புறக்கணிப்பு.
இந்தியாவின் இந்த முடிவு இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வுக்கும், வாழ்வாதாரத்துக்கும் வலு சேர்க்கும்.
இலங்கையின் வடக்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலிருந்து இராணுவ பாதுகாப்பைத் திரும்பப் பெறுவதற்கும், இதன் மூலம் வழி ஏற்பட்டுள்ளது.
தமிழர்களின் நிலங்களைத் திரும்ப ஒப்படைக்கக்கூடிய ஒரு நிலையும் ஏற்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, ஆந்திர மாநில மீனவர்களின் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் வழி ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கும், தற்போது கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கும் மாறுபாடு உள்ளது என்றார் அவர்.
http://www.tamilwin.com/show-RUmsyETYLWfoy.html

இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகமா?- ஜி.கே.வாசன் மறுப்பு
[ வெள்ளிக்கிழமை, 04 ஏப்ரல் 2014, 10:01.28 AM GMT ]
இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்ததாக கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று சேலத்தில் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது, இரவு நேரத்தில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர்களை இருட்டில் சென்று சந்திக்கும் வழக்கம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது.
தேர்தல் ஆணையத்தின் நல்லெண்ண நடவடிக்கைகளை வரவேற்கும் அதே நேரத்தில் தேர்தல் செலவு குறித்த கட்டுப்பாட்டை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும்.
கட்சித் தலைவர்கள் பேசும் கூட்டத்திற்கான செலவை வேட்பாளர்கள் செலவில் சேர்ப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈழ விவகாரத்தில் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்ததாக கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்வதால் அது உண்மையாகிவிடாது.
இலங்கைக்கு எதிரான செயல்பாடுகள் மூலம் திரையை மூடிக் கொண்டால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் ஏற்படும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyETYLWfq3.html
தமிழர்களின் முன்னேற்றம் கருதியே ஜெனிவாத் தீர்மானம் புறக்கணிப்பு: புது கதைவிடும் சுஜாதா சிங்
[ வெள்ளிக்கிழமை, 04 ஏப்ரல் 2014, 01:34.27 PM GMT ]
அரசியல் ரீதியான முடிவு காரணமாகவே இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிக்கவில்லை என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் முன்னேற்றம் குறித்து முக்கியமாக கவனம் செலுத்தியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என அமைச்சின் செயலாளர் சுஜாதா சிங் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிவாவில் இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது என்ற முடிவு இந்திய வெளிவிவகார அமைச்சினால் எடுக்கப்பட்டது என அமைச்சர் சிதம்பரம் கூறியிருந்தமைக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர் சிதம்பரத்தின் கருத்தை நிராகரித்துள்ள சுஜாதா சிங், இந்திய மத்திய அரசாங்கம் எடுத்த அரசியல் ரீதியான முடிவுக்கு அமையவே இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி முடிவின் மூலம் இந்திய அரசாங்கம், இலங்கை தமிழ் மக்களை புறக்கணித்துள்ளதாக வெளியிடப்பட்டு வரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது எனவும் இந்திய அரசாங்கம், இலங்கை தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக சகல சந்தர்ப்பங்களிலும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது எனவும் சுஜாதா சிங் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக இந்திய அரசாங்கம், இலங்கையில் செயற்படுத்தி வரும் வீடமைப்பு திட்டமானது உலகில் மேற்கொள்ளப்பட்ட வரும் மிகப் பெரிய திட்டமாக கருத முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETYLWfr2.html

Geen opmerkingen:

Een reactie posten