தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 4 april 2014

தமிழீழம் தொடர்பான எங்களுடைய வேலைத்திட்டங்களை மிகத் தீவிரமாக முன்னெடுக்க ஒரு உந்துசக்தியாக இப்பட்டியல் அமைகின்றது. ருத்ரகுமாரன்

 [ பி.பி.சி ]
இலங்கை அரசின் வர்த்தமானி அறிவித்தலானது, எமது செயற்பாடுகளை இன்னமும் தீவிரமாக செயற்பட ஊக்குவிக்கின்றது. இலங்கை அரசு எமது விடுதலைக் கனலை முள்வேலி போட்டு ஒருபோதும் தடுத்து விட முடியாது என நாடுகடந்த தமீழீழ அரசாங்க பிரதமர் வி. ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு தடை விதிப்பது தொடர்பில் இலங்கை அரசு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில், புலம்பெயர் அமைப்புகளைச் சேர்ந்த நானூறுக்கும் மேற்பட்டோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரித்துள்ள பின்னணியில், புலம்பெயர் தமிழர் அமைப்புகள் 16ஐ தடை செய்வதாக அது அறிவித்திருந்தது.
இந்த அமைப்புகளின் பெயர்களைத் தாங்கி வெளியிடப்பட்டுள்ள அரசின் கெஜட் அறிவிப்பில், இந்த அமைப்பின் பெயர்களுடன், சுமார் 400க்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசு வெளியிட்டுள்ள கெஜட் அறிவிப்பில் இருக்கும், இந்தத் தனி நபர்கள் பட்டியலில் உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழ அரசு போன்ற பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்ரகுமாரன் இந்த தடையைப் பற்றி கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையின் இனரீதியான  மக்களை புற்க்கணிக்கும் கொள்கையினையும், எதார்த்த அதிகாரத்தையும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னர் இலங்கை அடைந்துள்ள கலக்கத்தினையும் தான் காட்டுகின்றது.
என்னுடைய பெயர் இடம்பெறாதிருந்தால் நான் அதைப்பற்றி யோசித்திருக்க வேண்டும். இடம்பெற்றபடியினால் அதனைக் கருத்தில் எடுக்கவில்லை. இந்த பட்டியலில் தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகளும் மற்றும் பட்டியலில் பெயர் இடப்பட்டுள்ளவர்களும் தமிழீழம் தொடர்பான எங்களுடைய வேலைத்திட்டங்களை மிகத் தீவிரமாக முன்னெடுக்க ஒரு உந்துசக்தியாக இப்பட்டியல் அமைகின்றது.
அத்துடன் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும், தாயகத் தமிழர்களுக்கும் இடையில் ஒரு விரிசலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தாயக் மக்களின் மனங்களிலும் புலம்பெயர்ந்துள்ள எமது மக்களின் நெஞ்சங்களிலும் விடுதலைக் கனல் எரிந்து கொண்டிருக்கின்றன. எனவே தாயக மக்களுடன் நாங்கள் நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும் கூட கொள்கை ஒரே நிலையிலிருப்பதால் இலங்கை அரசு எத்தனை முள்வேலிகளை போட்டாலும் அந்த விடுதலைக் கனலை  மக்களின் மனங்களிலிருந்து நீக்கிவிட முடியாது என்பதை தெட்டத்தெளிவாக தெரிவிக்கின்றேன்.
அதேவேளை புலம்பெயர் நாடுகளிலுள்ள எமது மக்களின் பெயர்கள் பட்டியலிட்டுள்ள போதும் அவர்கள் தாயகமான இலங்கைக்கு செல்கையில் அவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமிடத்து அவர்கள் புலம்பெயர் நாட்டு பிரஜா உரிமை பெற்றவர்கள் என்ற வகையில் அந்தந்த நாட்டு அரசாங்கம் அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதையும் கூறுகின்றேன்.
இலங்கைத்தீவில் தமிழர்களது இனநெருக்கடி விவகாரத்தினை மதச்சிறுபான்மையினருக்கு இடையிலான விவகாரமாகவும், ஒட்டுமொத்த இலங்கையின் மனித உரிமைமீறல்களாகவும், அனைத்துலகம் சமகாலத்தில் வியாக்கியானம் செய்து வரும் நிலையில், தமிழர்கள் என்ற இனத்தின் அடிப்படையிலேயே அத்தனை மீறல்களும் தமிழர்களுக்கு எதிராக இலங்கைத்தீவில் நடந்தேறுகின்றன என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
 http://www.tamilwin.com/show-RUmsyETYLWfs1.html

Geen opmerkingen:

Een reactie posten