அவர் மேலும் தெரிவிக்கையில்,
போர் முடிவடைந்து 5 வருடங்கள் கடந்து விட்டது. எனினும் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இதுவரை சுயாதீன விசாரணைகள் நடத்தப்படவில்லை.
அப்படியான விசாரணை நடத்தப்படுவதையும் காணமுடியவில்லை. இவ்வாறான நிலையில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்படுவதை எப்படி தவறு எனக் கூறமுடியும்.
எவ்விதமான உள்நாட்டு விசாரணைகளும் நடத்தப்படவில்லை என்றால், வெளியில் விசாரணை நடத்தப்படுவது தவறானதா?.
வெளிநாட்டு அழுத்தங்கள் காரணமாகவே அரசாங்கம் போர் காலத்தில் ஆணைக்குழுவை நியமித்தது. இதற்கு உதவிகளை வழங்க ராஜபக்ஷ அரசாங்கமே வெளிநாட்டு நிபுணர்கள் குழுவை நியமித்தது. ஒரு விதத்தில் இது வெளிநாட்டு தலையீடு.
இந்தியாவின் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் பீ.என். பகவதி இந்த குழுவிற்கு தலைமை தாங்கினார். அந்த குழு விசாரணைகளை நடத்தி 14 குற்றச் செயல்கள் பற்றிய அறிக்கையை கொடுத்து யார் குற்றவாளிகள் எனக் கண்டறியும் விசாரணைகளை நடத்துமாறு கோரியது.
இறுதியில் அந்த குழுவை நாட்டில் இருந்து விரட்டாமல் விரட்டி விட்டனர். குழுவின் அறிக்கைக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. ஆணைக்குழு விசாரணைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டன.
அந்த குழுவுடன் நான் நெருங்கி பணியாற்றினேன். சாட்சியமளிக்க வந்த பலர் எதிர்நோக்கி அபாயகரமான நிலைமைகளை நான் அறிவேன்.
சாட்சியம் வழங்கியவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து சாட்சியமளித்தவர்கள் எந்த நாட்டில் இருக்கின்றனர் என்பதை தெரிவிக்காவிட்டால், சாட்சியங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனக் கூறினர்.
சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தை கொண்டு வருவதாக அன்று உறுதியளித்தனர். ஆனால் இதுவரை அந்த சட்டம் கொண்டு வரப்படவில்லை.
தகவல் அறியும் சட்டம் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டம் என்பன ஒரு மாதத்திற்குள் கொண்டு வரப்படும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரதீப மஹாநாமஹேவா கடந்த பெப்ரவரியில் கூறினார்.
இவர்கள் ஜெனிவாவுக்கும் வந்து சென்றனர். எனினும் இதுவரை அந்த சட்டங்கள் கொண்டு வரப்படவில்லை. போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்பதும் இது போன்றுதான்.
அதேபோல் வெலிவேரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கி நடத்தியது இராணுவம். அரசாங்கத்தின் மனித உரிமை ஆணைக்குழு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக கூறியது, ஆனால் நடந்தது எதுவுமில்லை.
குறைந்து கட்டுநாயக்கவில் சுட்டுக்கொல்லப்பட்ட சுதந்திர வர்த்தக வலய ஊழியரான ரொஷான் சானக்க மரணம் சம்பந்தமான அறிக்கை இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.
இப்படியான அரசாங்கம் தமிழர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான அறிக்கை தயாரிக்குமா? எனவும் நிமால்கா பெர்ணான்டோ கேள்வி எழுப்பினார்.
http://www.tamilwin.com/show-RUmsyETYLWfr0.html
Geen opmerkingen:
Een reactie posten