இது பற்றி மேலும் தெரியவருகையில் பலத்த இடைவெளியின் பின்னர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று முற்பகல் 9.30 மணியளவில் யாழ்.அரச செயலகத்தில் தொடங்கிய கூட்டம் பிற்பகல் 2.45 மணியளவில் முடிவுக்கு வந்திருந்தது. வலி.வடக்கில் தனியாருக்கு சொந்தமான காணிகள் அபகரிக்கப்படுவதனை தடுத்துநிறுத்துதல், பலாலி ஆசிரியர் கலாசாலையை அதற்கு சொந்தமான இடத்தில் மீண்டும் தொடங்குதல், மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பினர் கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டிருந்தது.
கோரிக்கைகள் ஒவ்வொன்றும் முன்வைக்கப்பட்ட போதிலும் வலுவான கருத்துக்கள் எவையும் பகிரப்படாமலேயே நழுவலான பதில்கள் வழங்கப்பட்டதுடன், பதில் வழங்க முடியாத நிலையில் குழப்பமான கருத்துக்களையும் முன்வைத்த நிலையில் இரண்டு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல்களால் கூட்டத்தொடர் குழப்பமுற்றிருந்தது. இந்நிலையில் காணி அபகரிப்புக்கு எதிரான முன்மொழிவு ஒன்றை மத்திய அரசின் கவனத்தில் கொண்டுவருவதற்காக பொது இணக்கப்பாட்டுக்கு முன்வருமாறு கூட்டமைப்பு விடுத்தக் கோரிக்கைகளையும் அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான ஈபிடிபியினர் தேசிய கொள்கையுடன் தொடர்புபட்டவிடயமெனக் கூறி தவிர்த்தாகவும் எந்தவிதமான காத்திரமான தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படாத நிலையில் அடுத்த கூட்டம் மே மாதம் இடம்பெறும் என்று கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6711
Geen opmerkingen:
Een reactie posten