தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 april 2014

புலிகளின் நிதிப் பொறுப்பாளர் கைது என்கிறது கொழும்பின் ஆங்கில ஊடகம் ?

புலிகள் உறுப்பினர் தப்பியோட்டம்: வவுனியா வைத்தியசாலையில் சம்பவம் !
21 April, 2014 by admin
வவுனியாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த வைக்கப்பட்டிருந்த புலிகள் உறுப்பினர் ஒருவர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 
தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் புத்துயிர் பெறுவதாக குறிப்பிடப்பட்டு, வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட கைது நடவடிக்கைகள் இடம்பெற்ற நிலையில் பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. இது எங்கு சென்று முடிவடையும் என்று தெரியவில்லை. இலங்கை இராணுவத்தின் செய்தியினை மேற்கோள் காட்டி , பொலிஸ் ஊடகப் பிரிவினர் இச்செய்தியை வெளியிட்டுள்ளார்கள். 

குறித்த நபர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிடுகின்றது. இதன் பின்னணியில் என்ன கைதுகள் இடம்பெறவுள்ளதோ தெரியவில்லை.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6712
புலிகளின் நிதிப் பொறுப்பாளர் கைது என்கிறது கொழும்பின் ஆங்கில ஊடகம் ?
21 April, 2014 by admin
தமிழீழ விடுதலைப் புலிகளின் பொருளாளரைக் கைது செய்துள்ளதாக கொழும்பின் ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், நீண்ட விசாரணைகளின் பின்னரே குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சந்தேக நபருக்கு சொந்தமான விளையாட்டுக் கழகம் ஒன்றை காவல்துறையினர் முடக்கியுள்ளதாகவும், வெளிநாட்டு புலம்பெயர் தமிழர்களிடமிருந்து குறித்த நபருக்கு பாரியளவில் பணம் கிடைக்கப்பெறுவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது எனவும் பாதுகாப்பு தரப்பை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தகர் கனடா, இந்தியா மற்றும் மேலும் நாடுகளில் உள்ள நபர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பாடியமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் புலிகளை மீள ஒருங்கிணைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் குறித்த வர்த்தகர் செயற்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது எனத் தெரிவித்துள்ள காவல்துறையினர், புலம்பெயர் புலி ஆதரவு தரப்பினருடன் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் கூறியுள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிடுகிறது.

இதே வேளை வெளிநாட்டு புலம்பெயர் அமைப்புகளின் தடையின் பின்னால், புலம்பெயர்ந்நத மக்கள் தமது உறவினர்கள், நண்பர்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு அனுப்புகின்ற பணம் குறித்து கவனத்தை எடுத்துள்ள இலங்கை அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பும், பணம் அனுப்பப்படும் மூலங்களை தெரிந்து கொண்டு, அதிகளவு பணத்தை பெறுபவர்களை புலிகளுடன் தொடர்புடையவர்களாக இனம்காட்டி கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கொழும்பில் இருந்து சில தகவல்கள் மேலும் கசிந்துள்ளது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6713

Geen opmerkingen:

Een reactie posten