[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 02:18.36 PM GMT ]
போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது.
எனினும் உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்படவில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஊடாக இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் முக்கிய பங்காற்றினார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பு கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும். பொதுபலநாய நாடுகள் பிரகடனங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கிலாஸ்கோவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளமையை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESYLXlu6.html
ஆஸியில் தீக்குளித்த தமிழ் இளைஞன்! நாடுகடத்துவது நிறுத்தி வைப்பு
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 02:00.32 PM GMT ]
அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் பெற்றொல் ஊற்றிக் தீக்குளித்து, தற்கொலைக்கு முயற்சித்த தமிழ் இளைஞனை நாடுகடத்தும் திட்டம் தற்போது இல்லையென அந்நாட்டுக் குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த இளைஞனுக்கு தற்போது மருத்துவ உதவியே தேவை. அவர் உயிர் பிழைப்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சரின் பேச்சாளர் ஸ்காட் மோரிசன் ஏ.எப்.பி செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞன், கடந்த 9ம் திகதி இரவு மேற்கு சிட்னியில் கப்பல் துறைமுகத்திற்கு அருகில் பெற்றோல் ஊற்றித் தன்னைத் தானே தீ மூட்டிக் கொண்டார். இதில் 70 வீதமான தீக்காயங்களுக்கு அவர் உள்ளாகியுள்ளார்.
இந்த நிலையில், ஜனார்த்தனன் என்ற குறித்த இளைஞன், ஆபத்தான நிலையில் கொன்கார்ட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அவரது நண்பர்கள் வைத்தியசாலைக்கு சென்று பார்த்தபோது, அவர் கண் திறந்ததாகக் தமிழ் அகதிகள் சபை முதல்வரான ட்ரெவர் கிராண்ட் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இளைஞன் பிழைப்பதற்கு நல்ல அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனார்த்தனன் குறைந்தது மூன்று மாதங்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டுமெ் என்று எதிர்பார்ப்பதாகவும், அவர் இங்கே அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாகத் தங்க அனுமதி கிடைக்குமென்று நம்புவதாகவும் ட்ரெவர் கிராண்ட் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய குடியேற்ற துறையிடமிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்று கடிதம் அவருக்கு கிடைத்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் இறப்பதை விட, அவுஸ்திரேலியா இறக்கலாம் என்று முடிவு செய்து தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் உள்ள ஜனார்த்தனனை பார்வையிட அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு அவுஸ்திரேலியா விசா வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் உறவுகளின் உதவியில் அவர்களுக்கான பயணச் செலவு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்படைய செய்தி- ஆஸியில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட தமிழ் இளைஞன் தீக்குளிப்பு
http://www.tamilwin.com/show-RUmsyESYLXlu5.html
Geen opmerkingen:
Een reactie posten