[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 12:31.48 AM GMT ]
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரனின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களின் வங்கி கணக்குகளை முடக்குமாறு சில நாடுகளிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை சர்வதேச நாடுகள் அறிந்துக் கொள்வதற்காக, சமாதானமானதும், ஜனநாயகமானதுமான வழிகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போராடும் என்றும் அவர் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், இலங்கைப் பொருட்களை புறக்கணிக்க கோரும் முன்னெடுப்பு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை செய்யும் வகையிலேயே எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி பிரித்தானியாவில் ஒன்று கூடவிருப்பதாக அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள தடைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
புலி ஆதரவு அமைப்புக்களின் வங்கி கணக்குகளை முடக்குமாறு அரசாங்கம் சில நாடுகளிடம் கோரிக்கை
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 12:23.25 AM GMT ]
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான 15 அமைப்புக்களினால் 15 நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் அந்தந்த நாடுகளிடம் கோரியுள்ளது.
1373ம் இலக்க ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் அடிப்படையில் புலி ஆதரவு அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
உலகத் தமிழர் பேரவை மற்றும் பிரிட்டன் தமிழர் பேரவை ஆகியன மட்டும் பிரிட்டனில் எட்டு பிரதான வங்கிகளில் கணக்குகளை பேணி வருகின்றன.
புலிகளின் சுவிஸ் வலையமைப்பு இரண்டு சுவிஸ் வங்கிகளில் கணக்குகளை பேணி வருகின்றன.
தடைகளை நீக்குவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் முயற்சித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தடையை இலங்கை அரசாங்கமே நீக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
தடை காரணமாக எதிர்வரும் காலங்களில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் குறித்த அமைப்பின் பிரதிநிதிகளினால் பங்கேற்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten