தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 14 april 2014

ஈழத்தில் பிறக்கும்போது ஒடுக்குதல், கைது, கொலை என்ற நிபந்தனைகளுடன் பிறக்கிறோம்: கவிஞர் ஜெயபாலன்

பாதுகாப்புத் தரப்பினர் நட்புறவுடன் செயற்பட வேண்டும் - சி.வி.கே. சிவஞானம்
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 03:46.03 PM GMT ]
பாதுகாப்பு தரப்பினர் நட்புறவுடன் செயற்பட வேண்டுமென வட மாகாணசபையின் தவிசாளர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளாக மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்த மக்கள் சுதந்திரத்தை எதிர்பார்க்கின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளாக படையினரையும், பொலிஸாரையும் மக்கள் சந்தேகத்துடன் பார்த்து வந்தனர்.
தற்போது அந்த நிலைமையில் மாற்றம் செய்ய முயற்சிக்கின்றனர்.
இந்த முயற்சி வரவேற்கப்பட வேண்டியது.
பாதுகாப்பு தரப்பினர் மக்களுடன் இணைந்து செயற்பட மேற்கொள்ளும் முயற்சிகள் உண்மையானதாக இருக்க வேண்டும்.
யாழ்ப்பாணம், தொண்டமானாறு பிரதேசத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறை பொலிஸாரும், இளைஞர் கழகமும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
http://www.tamilwin.com/show-RUmsyESYLXlvz.html


ஈழத்தில் பிறக்கும்போது ஒடுக்குதல், கைது, கொலை என்ற நிபந்தனைகளுடன் பிறக்கிறோம்: கவிஞர் ஜெயபாலன்
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 03:02.42 PM GMT ]
சிங்கள அரசே எங்கள் முதல் எதிரி. அதனால் சிங்கள அரசு எடுக்கும் முடிவையே தமிழர்களும் எடுக்க கூடாது. அவ்வாறு எடுத்தால் இலங்கை அரசு ஊடுருவிவிடும் என்கிறார் கவிஞரும் நடிகருமான வஐச ஜெயபாலன்.
ஈழத்தில் பிறக்கும்போது, விடுதலை அல்லது ஒடுக்குதல், கைது, கொலை, என்ற நிபந்தனைகளுடன் தான் பிறக்கின்றோம். விடுதலைக்காக போராடி வெற்றிபெறும் வரைக்கும் எல்லோருக்கும் பொதுவான நிலை இதுதான் என லங்காசிறிக்கு வழங்கிய செவ்வியில் கவிஞர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.
எல்லா இனங்களும் சுதந்திரமாக இருக்க வேண்டும். சுயநிர்ணயம் உரிமை சார்த்த சுதந்திரம் ஈழத்தமிழர்களுக்கு ஈழத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு அவசியம்.
முற்போக்கான சிங்களவர்களுடன் நல்ல நட்பு உண்டு எனக் குறிப்பிட்ட ஜெயபாலன், இனக் கொலைக்கான ஆதாரங்களை திரட்டி வெளிக் கொணரும் பணிகளை முற்போக்கான சிங்களவர்கள் ஆற்றியுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyESYLXlvy.html

Geen opmerkingen:

Een reactie posten