[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 04:32.35 AM GMT ]
மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவினால் இந்த புதிய உத்தேச சட்டம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்ட சிறுமி அல்லது பெண் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே, குற்றச் செயலை புரிந்தவருடன் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள முடியும் என்ற வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட உள்ளது.
குறிப்பாக சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை விதிக்க புதிய சட்டம் வழியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அரசியல்வாதிகளின் கட்சி உறுப்புரிமையை தற்காலிக அடிப்படையில் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESXLXlo5.html
வில்பத்து காட்டில் துப்பாக்கி சூடு: இருவர் காயம் - பொலிஸ் பதவி உயர்வுகளில் முறைகேடுகள்?
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 04:55.17 AM GMT ]
வில்பத்து தேசிய வனப் பகுதியில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியே வெடித்துள்ளது.
முனமல்கஸ்வௌ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விலங்குகளை வேட்டையாடுவதற்காக எல்லைக் கிராமமொன்றில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி இயங்கிதனால் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் அனுராதபுர வைத்தியசாலைக்கும் மற்றையவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் பதவி உயர்வுகளில் முறைகேடுகள்?
பொலிஸ் பதவி உயர்வுகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 123 பேர், துணை பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்ட போது பல்வேறு முறைப்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த முறைகேடுகளினால் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளனர்.
உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாத பலருக்கு இவ்வாறு துணை பொலிஸ் அத்தியசட்கர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் ஒழுக்க விதிகளை மீறி இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோனும் அங்கம் வகித்த குழுவினால் வழங்கப்பட்ட பதவி உயர்வுகளில் முறைகேடுகள் இடம்பெற்றமை வருத்தமளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyESXLXlpy.html
Geen opmerkingen:
Een reactie posten