தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 13 april 2014

மனித உரிமைகள் தொடர்பில் பிரித்தானிய அறிக்கையை இலங்கை கண்டித்துள்ளது!

மனித உரிமை மீறல்கள் குறித்து தகவல் வழங்கக் கூடாதா? -அப்படியொரு சட்டமில்லை என்கிறார் கிரியெல்ல
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 03:59.41 AM GMT ]
ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பணியகத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள விசா­ரணை செயற்­பா­டு­க­ளுக்கு தகவல் வழங்கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அரசாங்கம் தெரி­வித்­துள்­ளமையானது. அவர்­களை அச்­சு­றுத்தும் செயற்­பா­டாகும். அப்­ப­டி­யொரு சட்டம் நாட்டில் இல்­லை­யென ஐக்­கிய தேசிய கட்­சியின் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.
ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் இலங்கை அர­சுக்கு எதி­ராக நிறை­வேற்­றப்­பட்­டுள்ள பிரே­ர­ணை­யினை தாம் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை எனவும் அதற்கு ஒத்­து­ழைப்பு வழங்கப் போவ­தில்­லை­யெ­னவும் தெரி­வித்­துள்ள அர­சாங்கம். அவர்­களின் விசா­ரணை செயற்­பா­டு­க­ளுக்கு தகவல் வழங்கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என தெரி­வித்­துள்­ளது.
இது அவர்­களை அச்­சு­றுத்தும் செயற்­பா­டாகும். அப்­ப­டி­யொரு சட்டம் நாட்டில் இல்­லை­யென ஐக்­கிய தேசிய கட்­சியின் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.
இலங்­கையில் ஆட்­க­டத்­தல்கள், கொலைகள் மற்றும் அச்­சு­றுத்­தல்கள் உள்­ளிட்ட மனித உரிமை மீறல் செயற்­பா­டுகள் இடம்பெறு­வ­தாக முதன்முதலில் 1990ம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு தகவல் வழங்கிய­வர்கள் தற்­போ­தைய அமைச்சர் வாசு­தேவ உள்­ளிட்­ட­வர்கள் என்­பதை மறந்­து­விட முடி­யா­தெ­னவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் விசா­ரணை செயற்­பா­டு­க­ளுக்கு தகவல் வழங்கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென அர­சாங்­கத்தின் அமைச்சர் ஒருவர் தெரி­வித்­தி­ருந்தார்.
அதற்குப் பதி­ல­ளிக்கும் போதே நாடா­ளு­மன்ற உறுப்­பினர் லக்ஷ்மன் கிரி­யெல்ல இவ்­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் விசா­ர­ணைக்கு அர­சாங்கம் முகம் கொடுக்க வேண்டும். எம்மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் நியா­ய­மற்­றவை என்­பதை நிரூ­பிக்க வேண்டும். அதனை விடுத்து நாம் ஒருதலைப்பட்­ச­மாக அதனை நிரா­க­ரிக்­கின்ற போது அது எமக்குப் பாத­க­மா­கவே அமையும்.
இலங்கை அர­சாங்கம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் விசா­ர­ணையில் கலந்து கொள்­ளா­விட்டால் தனித்து விசா­ரணை நடத்­தப்­பட்டு தீர்ப்பு வழங்­கப்­படும். இவ்­வா­றா­ன­தொரு சந்­தர்ப்பம் அமைந்தால் இலங்கை மீது பொரு­ளா­தாரத் தடை விதிக்க நேரி­டலாம்.
பொரு­ளா­தார தடை எனும்போது சொத்­துக்­களை முடக்­கு­வது, பயணத் தடை மற்றும் வெளி­நாட்டு முத­லீ­டு­களை நிறுத்­து­வது போன்ற செயற்­பா­டு­களை சர்­வ­தேசம் மேற் கொள்ளும். எனவே, இதனால் ஏற்­படும் பாதிப்பு நாட்­டிற்கும் நாட்டு மக்­க­ளுக்­கு­மே­யாகும். எனவே, அர­சாங்கம் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.
மனித உரி­மைகள் குறித்து ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு தகவல் வழங்கக் கூடா­தென்று சட்டம் எதுவும் கிடை­யாது. இவ்­வா­றான நிலையில் இலங்­கைக்கு எதி­ராக நிறை­வேற்­றப்­பட்­டுள்ள அமெ­ரிக்க பிரே­ர­ணைக்கு தகவல் வழங்கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இவ்வாறான செயற்பாடுகளானது அரசாங்கத்திற்கு எதிராக உள்ள சகல வழக்குகளின் சாட்சிகளுக்கும் அச்சுறுத்தல் விடுத்து சட்டத்தையும் ஒழுங்கையும் இந்த அரசு மீறுகின்றது என்பதை உலக நாடுகளுக்கு ஒப்புவித்துள்ளது எனவும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyESXLXlo2.html
தேசிய நல்லிணக்கம் தொடர்பில் இலங்கைக்கு, ஐரோப்பிய ஒன்றியம் அறிவுரை
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 04:28.55 AM GMT ]
தேசிய நல்லிணக்கம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசாங்கத்துக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
நல்லிணக்கம் உள்ளிட்ட ஏனைய பங்காளிகளுடன் இணைந்து செயற்பட வேண்டியது குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அளித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு அலுவலகம்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவிகள் இலங்கையில் நல்லிணக்கத்துக்கு வழியை ஏற்படுத்தும் என்று இலங்கைக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனையை, இலங்கை நடைமுறைப்படுத்தாது என்று இலங்கை அரசாங்கம் அடிக்கடி கூறிவருவதை அடுத்தே, ஐரோப்பிய ஒன்றியம் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது.
இதேவேளை புலம்பெயர் அமைப்புக்களை தடை செய்தமை நல்லிணக்கத்தை பாதிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய கொழும்பு அலுவலகம், தடை குறித்து இலங்கை அரசாங்கம் இன்னும் சர்வதேச சமூகத்துக்கு விளக்கமளிக்கவில்லை என்று சுட்டிக்காட்டியது.
http://www.tamilwin.com/show-RUmsyESXLXlo3.html
மனித உரிமைகள் தொடர்பில் பிரித்தானிய அறிக்கையை இலங்கை கண்டித்துள்ளது!
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 04:29.36 AM GMT ]
மனித உரிமைகள் தொடர்பில் அவதானமாக நாடு என்ற வகுதிக்குள் இலங்கையை பிரித்தானியா உள்ளடக்கியுள்ளமை குறித்து இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பிரதி வெளியுறவு அமைச்சர் நியோமல் பெரேரா இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளது என்று நியோமல் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுமானால்எவரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடமுடியும் என்று பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESXLXlo4.html

Geen opmerkingen:

Een reactie posten