[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 05:26.38 AM GMT ]
இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகளை மேம்படுத்தாமல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் அதற்கு பதிலாக புலம்பெயர்ந்த அமைப்புக்களை இலங்கையின் வெளியுறவு அமைச்சு தடை செய்துள்ளது.
இது புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களுக்கு உந்துதலையே வழங்கும் என்று ரஜீவ விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா, பிரித்தானியா போன்ற நாடுகளில் உள்ள உண்மைகளை ஏற்கக்கூடிய தமிழர்கள் மத்தியில் இலங்கை அரசாங்கம் சிறந்த பிரசாரங்களை முன்கொண்டு செல்லவில்லை. இதற்கு காரணம் அவர்களும் தமிழர்களே என்ற அரசாங்கத்தின் நினைப்பாகும் என்று ரஜீவ குறிப்பிட்டுள்ளார்.
இதுவே இலங்கைக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொடுத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை அலுவலகம் புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேசுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கேட்டிருந்ததது. எனினும் அரசாங்கம் அதற்கு உடன்படவில்லை.
இதற்கு மாறாக இந்த புலம்பெயர் தமிழர்களை, அரசாங்கம் சந்தேகத்துடனேயே பார்த்து வருகிறது. இது இலங்கையின் நல்லிணக்கத்துக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கை அரசாங்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை தடைசெய்தமை தவறானது.
இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கைக்கு எதிராக மேற்கத்தைய நாடுகள் செயற்பட வழிவகுக்கின்றன. எனவே தற்போது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அது அமெரிக்காவின் பொறிக்குள் வீழ்ந்துவிட்டமையை சுட்டிநிற்பதாக ரஜீவ விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் நடப்புக்களை தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் உணர்ந்து வருகின்றனர். எனவே தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை அவர்கள் காட்ட முனைகின்றனர் என்று ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESXLXlpz.html
மூதூர் கங்குவேலியில் அகத்தியர் கோயில் அமைக்க பௌத்த பிக்குகள் தடை
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 06:14.22 AM GMT ]
ஏற்கனவே இந்த கிராமத்தில் அகத்திய முனிவரின் கோயிலை அமைப்பதற்கு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.
இதனையடுத்து அமைப்பு பணிகளை கிராமமக்கள் முன்னெடுத்தனர்.
எனினும் அந்த இடம் இலங்கை தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்கு சொந்தமானது என்று கூறி அங்கு அகத்தியர் கோயில் அமைக்கப்படக்கூடாது என்று சிலர் அச்சுறுத்தல் விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் அது தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான காணி அல்ல என்று அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று அகத்தியருக்கான கோயிலை அமைக்கும் பணிகள் நடந்துக்கொண்டிருந்தபோது அங்கு ஒரு பௌத்த பிக்குவும் சிலரும் கம்பு தடிகளுடன் சென்று கோயில் அமைப்பு பணிகளை நிறுத்தியுள்ளனர்.
எனினும பயம் காரணமாக இந்த தகவலை யாரும் வெளியிட முன்வரவில்லை.
பொதுபலசேனா அமைப்பினரே இந்த அச்சுறுத்தலை விடுத்ததாக திருகோணமலை தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyESXLXlp2.html
Geen opmerkingen:
Een reactie posten