[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 04:10.44 PM GMT ]
16 அமைப்புக்களை இலங்கை பயங்கரவாத பட்டியலில் உள்ளடக்கியதன் பின்னர் இந்த ஆலோசனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது .
இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஆலோசனையின்படி ஊடகவியலாளர்கள் தவிர்ந்த ஏனைய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வடக்கு கிழக்குக்கு செல்ல இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையில்லை.
எனினும் வெளியக பொதுமக்கள் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு கீழ்படிந்து செயற்படவேண்டும்.
அத்துடன் நிலக்கண்ணி வெடிகள் உள்ள இடங்களில் பாதுகாப்பாக செயற்படுமாறும் பிரித்தானியாவின் பொதுநலவாய அலுவலகம் கோரியுள்ளது.
இலங்கையில் அரசியல் கூட்டங்கள் சில வேளைகளில் வன்முறைக்கு இட்டுசெல்கின்றன.
எனவே பொதுக்கூட்டங்கள் இடம்பெறும் இடங்களை தவிர்க்குமாறு பிரித்தானியாவின் சுற்றுலா எச்சரிக்கையில் கோரப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESbLXjpy.html
இறுதிப் போரினால் பாதிக்கப்பட்ட இயக்கச்சி வாசி நஞ்சருந்தி தற்கொலை!
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014, 03:09.22 PM GMT ]
இவ்விடயம் குறித்துத் தெரியவருவதாவது,
நஞ்சு அருந்திய நிலையில் செம்மணி மயானப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இயக்கச்சி, பளையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான நாகரத்தினம் விக்னேஸ்வரன் (வயது 38) என்பவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
இறுதிப் போரின் போது பெருமளவான சொத்துக்களை இழந்ததாகவும் அதனை மீளப் பெற முடியாத நிலையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த அவர் கடும் மன உளைச்சலைச் சமாளிப்பதற்காக மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகியதால் கடும் நோய்த் தாக்கத்துக்கும் உட்பட்டிருக்கின்றார்.
இந்நிலையில் கடந்த வாரம் குறித்த நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை முடிந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய அவர் செம்மணி மயானப் பகுதியில் நஞ்சு அருந்திய நிலையில் தனது தாயாருக்கு அது குறித்து அறிவித்திருக்கின்றார்.
அதன் பின்னர் அவரைத் தேடிய அவருடைய தாயாரும் உறவினர்களும் அவரை மீட்டு யாழ்,போதனா வைத்தியசாலையில் மீண்டும் சேர்த்தனர்.
சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
http://www.tamilwin.com/show-RUmsyESbLXjo5.html
Geen opmerkingen:
Een reactie posten