தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 april 2014

தாடி- கேடி- பிள்ளையான் மீது விசாரணை: ஆணைக்குழு தடாலடி அறிவிப்பு !


வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கடத்தல் சம்பவங்கள் தொடர்பில், ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா), கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று தடாலடியாக அறிவித்துள்ளார், காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் குணதாஸா. இந்த அறிவித்தல் இன்றைய தினம்(21) வெளியாகியுள்ளது.

காணாமற்போனோர் தொடர்பில் ஆணைக்குழு முன்பாகச் சாட்சியம் வழங்கிய பலர் ஈ.பி.டி.பியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோரே தமது உறவுகள் காணாமற் போனமைக்குக் காரணம் என்று சாட்சியம் அளித்துள்ளார்கள். இதனையடுத்தே அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என்று கூறப்படுகின்றது. 

தற்போது குறித்த சாட்சியங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றை உரிய முறையில் ஒழுங்குபடுத்திய பின்னர், ஆணைக்குழுவின் அதிகார வரம்புக்குட்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6714

Geen opmerkingen:

Een reactie posten