தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 15 april 2014

சர்வதேச விசாரணைக்கான சாட்சியப்பதிவு செயற்திட்டம் ஆரம்பம்!- பிரித்தானியா



சர்வதேச மத்தியஸ்தத்துடன் கூட்டமைப்பு பேசும் போதே நாட்டில் உண்மையான சமாதானம் ஏற்படும்: அரியம் எம்.பி.
[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 05:53.33 AM GMT ]
இந்த நாட்டில் நிரந்தரமான ஒரு சமாதானம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசாங்கம் பேச வேண்டும் என  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அம்பிளாந்துறையில் இடம்பெற்ற ஊஞ்சல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. தொடர்ச்சியாக வருடந்தோறும் நாங்கள் மருத்துநீர் தேய்க்கின்றோம். ஆலயங்களுக்கு செல்கின்றோம். புத்தாடை அணிகின்றோம்.
ஆனால் நிரந்தரமான ஒரு சமாதானம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் ஜனாதிபதி இன்றைய 2014 தமிழ் சிங்கள புத்தாண்டிலே கூறிய நிரந்தர சாந்தியும் சமாதானமும் திகழ வேண்டுமாக இருந்தால் ,நான் ஜனாதிபதியிடம் ஒரு செய்தியை இன்றைய நாளில் கூறுகின்றேன். அதை ஒரு வேண்டுகோளாகவும் விடுக்கின்றேன்.
இந்த இலங்கைத் திருநாட்டிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நிச்சயமாக சர்வதேச மத்தியஸ்தத்துடன் அரசாங்கம் பேசுவதற்கான ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்.
நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சர்வதேச மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசாங்கம் பேசினால் மாத்திரமே ஜனாதிபதி கூறுகின்ற சாந்தி சமாதானமாக இருக்கலாம்.
அல்லது வேறு யாரும் கூறுகின்ற சாந்தி சமாதானம் இந்த நாட்டிற்கு வரும் என்கின்ற செய்தியை கூறிவைக்க விரும்புகின்றேன்.
ஏனென்றால் தொடர்ச்சியாக இன்னல்பட்டு அடிமைப்பட்டுக் கொண்டிருக்கின்ற இனம் நாங்கள். எங்களுக்கு விமோசனம் தேவை என்றார்.
தற்போதைய சந்ததியில் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை தமிழர் மரபில் இருந்து அழியாமல் பாதுகாக்க சித்திரைப் புதுவருடமும் வழிவகுக்கின்றது.
இதில் ஒரு அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தின் அம்பிளாந்துறையில் உஞ்சல் விழா இடம்பெற்றது.
செவியேறல் ரீதியான ஊஞ்சல் பாட்டு பாடப்பட்டு ஊஞ்சல் ஆடப்பட்டது.
301 வருடம் பழமை வாய்ந்த நிழல்வாகை மரத்தில் ஊஞ்சல்கட்டி சிறுவர், பெரியோர் என்ற வேற்றுமை இன்றி கிராம மக்கள் ஊஞ்சல் ஆடினர்.
அன்று அம்பிளாந்துறையை ஆட்சி செய்த சிற்றரசன் அருமைக்குட்டிப் போடியார் இன் 1776 ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து ஊஞ்சல் கட்டி ஆடிய நிழல் வாகை மரமான இம்மரம் இருந்ததாக வரலாறு கூறுகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyESZLXlw3.html
சர்வதேச விசாரணைக்கான சாட்சியப்பதிவு செயற்திட்டம் ஆரம்பம்!- பிரித்தானியா
[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 09:15.39 AM GMT ]
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான சர்வதேச விசாரணையை ஆரம்பிக்கும் முகமான சாட்சியப்பதிவு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
இந்த தகவலை பிரித்தானிய வெளியுறவு அமைசசர் வில்லியம் ஹேக் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
நவநீதம்பிள்ளையின் விசாரணையை பொறுத்தவரை, அதில், அனைத்து துறைசார்ந்தவர்களும் தகவல் மற்றும் சாட்சியப்பதிவு தொடர்பில் தெரிவுச்செய்யப்படுவர் என்று வில்லியம் ஹேக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் நவநீதம்பிள்ளை வாய்மூல அறிக்கையை எதிர்வரும் செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைப்பார்.
இதன் பின்னர் 2015ம் ஆண்டு மார்ச்சில் முழு அறிக்கையை அவர் சமர்ப்பிப்பார் என்றும் வில்லியம் ஹேக் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் பிரித்தானிய அரசாங்கம், நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவையும் வழங்குவதாக ஹேக் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 27ம் திகதியன்று இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை கோரும் அமெரிக்க யோசனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyESZLXlx1.html

Geen opmerkingen:

Een reactie posten