[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 11:10.40 AM GMT ] [ பி.பி.சி ]
அவரைத் தாக்கியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும், யாழ் செய்தியாளர்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கும் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரியிருக்கின்றது.
வடமராட்சி பிரதேசத்தின் செய்தியாளராக வீரகேசரி மற்றும் தினக்குரல் ஆகிய பத்திரிகைகளுக்கு அவர் பணியாற்றி வருகின்றார்.
இரவு எட்டரை மணியளவில் தனது தாயாரைப் பார்த்து விட்டு, தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது செல்வதீபன் தாக்கப்பட்டுள்ளார்.
வெளிச்சமில்லாமல் அவரைப் பின் தொடர்ந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் யாழ் புறாப்பொறுக்கி வல்லைவெளியில் வைத்து, ''செய்தியாளரா நீ'' எனக் கேட்டு இரும்புக்கம்பியினால் பிடரியிலும் இடுப்பிலும் தாக்கியுள்ளதாக நெல்லியடி காவல்துறையினரிடம் முறையிடப்பட்டுள்ளது.
திடிரென நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக காயமடைந்து, நிலைகுலைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அவரை மேலும் தாக்குவதற்கு அவர்கள் முயன்றுள்ளார்கள். எனினும் செல்வதீபன் தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்து பற்றைக்குள் ஓடித் தப்பியுள்ளார்.
அதேநேரம் அந்த வீதி வழியாக வந்தவர்களும், யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறைக்குச் சென்று கொண்டிருந்த பேரூந்து ஒன்றும் செல்வதீபனின் சேதமாக்கப்பட்ட மோட்டார் சைக்கிளைக் கண்டு அவ்விடத்தில் கூடியுள்ளனர்.
இதனையடுத்து மறைவிடத்தில் இருந்து வெளியில் வந்த செல்வதீபன் மந்திகை வைத்தியசாலையக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து நெல்லியடி காவல்துறையினர் செய்தியாளர் சிவஞானம் செல்வதீபனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து, விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து முன்னர் காணாமல் போயிருக்கும் தனது சகோதரன் தொடர்பாக தனது தாயாருடன் இணைந்து செல்வதீபன் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகள் நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றிடம் சாட்சியமளித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக அடையாளம் தெரியாதவர்கள் தன்னைப் பின்தொடர்வதாகவும், தனக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்ததாகவும், தனது சகாக்களிடம் அவர் கூறியிருந்தாகத் தெரிவித்தார்.
வடக்கில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதும், அவர்கள் தாக்கப்படுவதும் வழமையான நிகழ்வாகியிருக்கின்றது. இதனால் அங்கு ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது என்பதை, அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் கே.ஜெயேந்திரன், இத்தகைய சம்பவங்கள் இனிமேலும் நடவாதிருப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளரை கூட்டமைப்பினர் நேரில் சென்று பார்வை
கடந்த 14.04.2014 திங்கட்கிழமை புத்தாண்டன்று வல்லை வெளிப்பகுதியில் கடுமையாகத்தாக்கப்பட்டு, மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாணசபை உறுப்பினர்களான வே.சிவயோகன், க.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், ச.சுகிர்தன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ், சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
இச்சம்பவத்தைக்கண்டித்து வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில்,
போர் முடிந்த பின், தமிழருக்கு வட- கிழக்கில் எவ்வித பிரச்சனைகளும் இல்லை. வடக்கில் வசந்தம் வீசுகிறது என அரசாங்கம் உலகை ஏமாற்றி பொய்யுரைத்து வருகிறது. ஆனால் ஒழுங்கற்ற மீள்குடியேற்றமும், உதவிகள் வழங்கப்படாமை, துரித சிங்களமயமாக்கல் நிகழ்ச்சித்திட்டம் என்பனவே இடம்பெறுவதுடன், மக்கள் சொல்லொணாத்துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
இவ்வாறான மக்களின் துன்ப துயரங்களையும், அரசாங்கத்தின் பொய்ப்பித்தலாட்டங்களையும் தெட்டத்தெளிவாக ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் வெளியுலகத்துக்கு வெட்டவெளிச்சமாக்கி வருகிறனர்.
இது தனது நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான செயற்பாடு என்பதால் அரசு ஊடகவியலாளர்கள் மீது வன்மத்துடன் காழ்ப்புணர்வு கொண்டதனால் காலத்துக்குக்காலம் ஊடகவியாலாளர்கள் மீதும், ஊடகங்கள் மீதும் வன்முறைத்தாக்குதல்கள் அரசாங்கத்தினாலும், அரசாங்க ஆதரவு பெற்ற குழுக்களாலும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன என் நாங்கள் சந்தேகிக்கின்றோம்.
அதன் சமீபத்திய தொடர்ச்சியாகத்தான் புத்தாண்டு தினத்தன்று வடமராட்சி, கரவெட்டியைச் சேர்ந்த சிவஞானம் செல்வதீபன் , வயது 29 எனும் ஊடக நண்பன் மீது இனந்தெரியாதோர் என்ற போர்வையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஊடக சுதந்திரம் பேணப்படுகிறது, மனிஉரிமைகள் காக்கக்கப்டுகின்றன, தமிழர்கள் சர்வதேசத்துக்கு பொய் சொல்கிறார்கள் என்று கூறிவருவோர் இச்சம்பவத்தின் மூலம் மீண்டும் ஒருதடவை தங்களை அம்பலப்படுத்தியுள்ளனர்.
இத்தாக்குதல் மூலம் ஊடக சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரமும் மீறப்பட்டுள்ளதுடன், வடக்கில் வாழும் தமிழர்கள் எவ்வாறான அவல வாழ்வை வாழ்கின்றார்கள் என்றும் உலகுக்கு மீண்டும் எடுத்தியம்பும் சம்பவமாகவும் அமைந்துள்ளது.
ஆகவே பாதிக்கப்படும் மக்களின் குரலாக விளங்கும் செல்வதீபன் போன்ற ஊடக நண்பர்களின் மீதான இவ் வன்முறைத்தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதுடன், தாக்குதலாளிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தக்கேள்விக்கான பதில் காவல்துறைனராலேயே வழங்கப்பட வேண்டும். இத்தாக்குதலில் படுகாயமடைந்த நண்பன் சி.செல்வதீபன் வேகமாகக் குணமடைந்து முன்பை விடவும், வேகமாக தனது ஊடகப்பணியை மேற்கொண்டிட வேண்டும் என விரும்புகின்றேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESZLXlx5.html
இந்தோனேசியா சிறையிலிருந்து விடுதலை கோரி 9 ஈழத்தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!
[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 09:43.36 AM GMT ]
◆ இந்தோனேசியாவிற்கு எவ்வாறு ஈழத்தமிழர்கள் சென்றார்கள்?
குறிப்பிட்ட 9 ஈழத்தமிழர்களும் 09-03-2013 அன்று 124 பேருடன் இலங்கை இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்குப் பயந்து உயிர் தப்பி சுதந்திரக் காற்றினை சுவாசிப்பதற்காக அகதிகளாக அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகிய போது நடுக்கடலில் இயந்திரம் பழுதடைந்து பத்து நாட்களுக்கு மேலாக உணவு தண்ணீர் கூட இன்றி மயக்கமடைந்து உயிராபத்தான நிலையில் தத்தளித்து இந்தோனேசியா கரையைப் போய்ச் சேர்ந்தார்கள்.
கரைசேர்ந்த 124 பேர்களில் 58 பேர் தப்பித்து சென்று விட மீதமுள்ள 66 பேரையும் பெங்குளு என்ற இடத்தில் 1 மாத காலமாக காவலில் வைத்திருந்த இந்தோனேசியா காவல்துறை, அவர்களை 21 பேர் 45 பேராக இரண்டு பிரிவாகப் பிரித்தனர்.
21 பேர் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்ததனால், அவர்களை உடனடியாக விடுதலை செய்வதாகக் கூறி தனியாக வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று குடும்பங்களாக இருந்த 21 பேரை விடுதலை செய்து விட்டு மேற்குறிப்பிட்ட 9 பேரையும் எந்தவிதமான அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் ஏதுமில்லாத தனிச்சிறையில் இன்று வரையும் அடைத்தே வைத்துள்ளனர், இந்தோனேசியா குடிவரவு அதிகாரிகள்.
பல மாதங்களின் பின் ஐ.நா (UNHCR) அதிகாரிகள் குறிப்பிட்ட ஒன்பது பேரையும் விசாரணைக்குட்படுத்தி 4 பேரை அகதிகளாக ஏற்றுக் கொண்டு 3 பேரை ஏற்றுக் கொள்ளாமல் மீள் விசாரணைக்காக ஆவணங்கள் கொடுக்கப்பட்டும் நான்கு மாதங்கள் ஆகியும் இன்று வரையும் எந்த முடிவும் கிடைக்கவில்லை.
சாதாரண சிறையில் கூட குற்றம் செய்து அடைக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள், சுகாதார வசதிகள் மற்றும் மாற்று உடை வசதிகள் என நிறைய வசதிகள் இருக்கும்.
ஆனால், மேற்குறிப்பிட்ட ஈழத்தமிழர்களை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறையானது எவ்வித வசதிகளுமின்றி மிருகங்களை விட மிகவும் மோசமாக நடத்தப்பட்டு வருகிறார்கள். இந்தச் செயலானது ஐ.நா.வின் மனித உரிமை விதி முறைகளுக்கு முரணானது. இச் செயலை ஐ.நாவும் கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் கவலையளிக்கிறது!
அடைக்கப்பட்டிருக்கும் 9 பேரும் இலங்கை யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். அதில் 4 பேர் மிகவும் மோசமாக படுகாயம் அடைந்தவர்கள். ஒருவர் தலையில் துப்பாக்கி ரவையை சுமந்தபடி தினமும் தீராத தலை வலியினால் தினமும் தூங்க முடியாமல் துடித்து வருகின்றார்.
இன்னுமொருவர் காலில் படுகாயமடைந்த நிலையில் ஒழுங்கான மருத்துவ சிகிச்சையுமின்றி தினமும் இரத்தம் வழிந்தோடியபடி நடக்கமுடியாமல் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றார். மேற்குறிப்பிட்ட அனைவருமே மிகவும் மோசமாக உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து உயிர்தப்பி அகதியாக ஆபத்தான கடற்பயணம் மேற்கொண்டு உயிராபத்தான நிலையில் காயங்களுடன் கரை சேர்ந்தவர்களை சிறையில் அடைத்து வைத்து மிருகங்களை விட மிகவும் மோசமான முறையில் நடத்தப்படுவதன் நியாயங்கள் என்ன? அவர்கள் ஈழத்தமிழர்களாகப் பிறந்ததுதான் குற்றமா?
◆ 21-04-2014 முதல் சாகும் வரை உண்ணாவிரதம்
எது நடந்தாலும் பரவாயில்லை என நாதியற்றுக் கிடக்கும் மேற்குறிப்பிட்ட அந்த 9 அப்பாவி ஈழத்தமிழர்களும் தம்மை விடுதலை செய்து பிறிதொரு குடியேற்ற நாட்டிற்கு அனுப்பி சுதந்திரக் காற்றினை சுவாசிக்க விடுமாறு என்ற கோரிக்கையினை முன் வைத்து வருகின்ற 21-04-2014 அன்று திங்கட்கிழமை முதல் காலவரையற்ற சாகும் வரையிலான உண்ணாவிரதத்தினை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாக திட்டவட்டமாக அறவித்துள்ளார்கள்.
◆ இந்தோனேசியாச் சிறையில் அடைக்கப்பட்டு உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ள 9 ஈழத்தமிழர்களின் பெயர் விபரங்களும், ஐ.நாவின் விசாரணைப் பதிவு எண்களும் பின்வருமாறு:
1, பார்த்திபன் நாதன் 21 – 352 – 13C00275
2, ரதீபன் நாதன் 23 ” ”
3, ரஞ்சித் அசோகராஜா 24 – 353 – 13C00211
4, சூரியன் இரட்ணசிங்கம் 29 – 352 – 13C00277
5, துளசிகர் சின்னத்துரை 26 – 352 – 13C00270
6, அந்தோனி பெரியசாமி 37 – 352 – 13C00265
7, பிரசன்னா ரவீந்திரன் 27 – 352 – 13C00267
8, கண்ணதாஸ் செல்லையா 48 – 352 – 13C00269
9, ரொக்சன் டெனியஸ் ஞானசீலன் 25 – 352 – 13C00266
2, ரதீபன் நாதன் 23 ” ”
3, ரஞ்சித் அசோகராஜா 24 – 353 – 13C00211
4, சூரியன் இரட்ணசிங்கம் 29 – 352 – 13C00277
5, துளசிகர் சின்னத்துரை 26 – 352 – 13C00270
6, அந்தோனி பெரியசாமி 37 – 352 – 13C00265
7, பிரசன்னா ரவீந்திரன் 27 – 352 – 13C00267
8, கண்ணதாஸ் செல்லையா 48 – 352 – 13C00269
9, ரொக்சன் டெனியஸ் ஞானசீலன் 25 – 352 – 13C00266
http://www.tamilwin.com/show-RUmsyESZLXlx3.html
பிஸ்வால், எரிக் சொல்ஹெய்ம்மை சந்தித்துள்ளார்
[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 09:24.24 AM GMT ]
எரிக் சொல்ஹெய்ம் நீண்ட நாட்களாக இலங்கை விடயத்தில் அக்கறை செலுத்தி வருகிறார்.
பிஸ்வால் அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான உதவி இராஜாங்க செயலாளராக பதவியேற்ற பின்னர் கடந்த பெப்ரவரியில் இலங்கைக்கு சென்று திரும்பினார்.
இதன்பின்னர் அவர் இலங்கை விடயங்கள் தொடர்பில் கருத்தாடல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் எரிக் சொல்ஹெய்முடன் அவர் டுவிட்டரில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இலங்கை விடயம் தொடர்பில் எரிக் சொல்ஹெய்முடன் கருத்து பகிரக் கிடைத்தமையை பிஸ்வால் மகிழ்ச்சியை வெளியிட்டார்.
இதன்போது கருத்துரைத்துள்ள எரிக் சொல்ஹெய்ம், இலங்கையின் அனைத்து சமூகங்களும் சமாதானமாக வாழ அமரிக்காவும் பிஸ்வாலும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை மீது சர்வதேச விசாரணையை கோரியுள்ளமை தொடர்பிலேயே இந்த டுவிட்டர் கருத்துப் பரிமாறல் இடம்பெற்றுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESZLXlx2.html
Geen opmerkingen:
Een reactie posten