தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 15 april 2014

உள்நாட்டு விசாரணை என்ற சவாலை இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளுமா?



லண்டன் மரதன் ஓட்டப் போட்டியில் ஈழத் தமிழ் இளைஞரின் வித்தியாசமான போராட்டம்!
[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 12:45.14 AM GMT ]
லண்டனில் மரதன் ஓட்டப் போட்டி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வேளையில், பிரித்தானியாவைச் சேர்ந்த ஈழத் தமிழ் இளைஞரான ரமணகரன் வேணுகோபால் ஒருவர் வித்தியாசமான போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தமை பார்வையாளர்கள் மனதைக் கவர்ந்திருந்தது.
இந்த ஓட்டப் போட்டியில் ஆர்வலராக கலந்துக் கொண்ட அவர், ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வலியுறுத்திய பதாதைகளை தம்முடன் கட்டியவாறு இந்த போட்டியில் கலந்துக் கொண்டிருந்தார்.
ரமணகரன் மரதன் ஓட்ட தூரத்தை 06:53:58 நொடிகளில் ஓடி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyESZLXlwz.html
உள்நாட்டு விசாரணை என்ற சவாலை இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளுமா?
[ செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014, 03:35.38 AM GMT ]
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச விசாரணை யோசனையை இலங்கை நிராகரித்துள்ளது.
எனினும் அந்த நிராகரிப்பை நியாயப்படுத்தக்கூடிய வகையில் இலங்கை சவால்களுக்கு முகங்கொடுக்க முடியுமா? என்ற இலங்கையின் செய்தித்தாள் ஒன்று சந்தேகம் எழுப்பியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைக்கான யோசனை நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கு இந்தியா தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இலங்கையின் இறைமைக்கு எதிரான நடவடிக்கை என்பதால் அதனை தாம் ஏற்கமுடியாது என்று இந்தியா தெரிவித்திருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கையும் சர்வதேச விசாரணையை நிராகரித்தது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இந்த நிராகரிப்பை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு உள்ளக விசாரணையை சிறப்பாக செய்து முடிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கையால் இந்த செயற்பாட்டை சிறப்பாக செயற்படுத்த முடியுமா? என்று ஆங்கில செய்தித்தாள் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே வடகொரியா, ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணையை நிராகரித்த நிலையில் உள்ளக விசாரணையை நடத்தியது.
எனினும் அதில் ஒரு பக்கச்சார்ப்பு விசாரணை என்று குற்றம் சுமத்தப்பட்டது.
என்றாலும், வடகொரியாவை பொறுத்தவரையில், ஏற்கனவே வெளிப்படுத்தப்படாத விடயங்களையும் வெளிப்படவைக்க வேண்டியிருந்தது.
இதைபோன்றே இலங்கையும் உள்ளக விசாரணையை கோரி நிற்கிறது.
இந்தநிலையில் அவ்வாறான உள்ளக விசாரணையை இலங்கை நடத்தும் போது அது நம்பக்கத்தன்மையாக அமைய வேண்டும்.
அது தென்னாபிரிக்காவின் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு விசாரணையை போன்று நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்பது எதிர்ப்பார்க்கப்படும் ஒன்றாகும்.
எனவே அவ்வாறான ஒரு விசாரணையை இலங்கை மேற்கொள்ளுமா? என்பது இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை சவாலாகவே அமையும் என்று செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESZLXlw2.html

Geen opmerkingen:

Een reactie posten