தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 april 2014

டக்ளஸ், கருணா, பிள்ளையான் மீதும் விசாரணையா??

சிறையில் மன்னார் மற்றும் அநுராதபுரம் ஆயர்களுக்கு தடை..

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் அனுமதியுடன், அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்குச் சென்ற மன்னார் மற்றும் அநுராதபுரம் மறை மாவட்டங்களுக்கான ஆயர்களுக்கு நேற்றுத் திடீரென அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நேற்றுக் காலை தமிழ்க் கைதிகளைப் பார்வையிடுவதற்கு மன்னார் ஆயர் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை அநுராதபுரம் சென்று, அங்குள்ள ஆயரையும் அழைத்துக் கொண்டு சிறைச்சாலைக்குச் செல்வதற்குத் தயாரானார். அதன் போதே அனுமதி மறுக்கப்பட்ட விடயம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி அழைப்பொன்றின் மூலமே அனுமதி மறுக்கப்பட்டுள்ள விவகாரம் தமக்குத் தெரியப்படுத்தப்பட்டது என்றும் பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரியொருவரின் கட்டளையின் பிரகாரமே தாம் தடுத்து நிறுத்தப்பட்டனர் என்றும் அதிலும், குறிப்பாக மன்னார் ஆயருக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எனத் தாம் அறிந்தார் என்றும் மன்னார் ஆயர் குறிப்பிட்டார்.
“”சமாதானத்தையும், மனிதநேயத்தையும் போதிக்கும் இன்றைய புனித நாளில், இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை எமக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையானதொரு நல்லிணக்கத்தை நோக்கிப் பயணிக்கும் விடயத்தில் இத்தகைய சம்பவங்கள்தான் தாக்கத்தை தடங்கலை ஏற்படுத்துகின்றன.
எமக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட தரப்பினர் தெளிவுபடுத்த வேண்டும்” என்றும் இராயப்பு ஜோசப் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/66348.html

டக்ளஸ், கருணா, பிள்ளையான் மீதும் விசாரணையா??

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற காணாமற்போகச் செய்யபபபட்ட சம்பவங்கள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா), கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று தெரிவித்துள்ளார் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் குணதாஸா.
தற்போது குறித்த சாட்சியங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றை உரிய முறையில் ஒழுங்குபடுத்திய பின்னர், ஆணைக்குழுவின் அதிகார வரம்புக்குட்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதியால் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழு வடக்கு கிழக்கில் தனது அமர்வுகளை நடத்தியுள்ளது. ஜனவரி மாதம் கிளிநொச்சியிலும், பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்திலும், மார்ச் மாதம் மட்டக்களப்பிலும் தனது பகிரங்க மக்கள் அமர்வை நடத்தியிருந்தது.
http://www.jvpnews.com/srilanka/66342.html

Geen opmerkingen:

Een reactie posten