கோபி, அப்பன், தேவியன் ஆகிய மூவருடைய இரத்த மாதிரிகள் - உடற்பாகங்கள் !
14 April, 2014 by admin
இந்த மூன்று சடலங்களும் "இந்து" முறைப்படி அனுராதபுரம் விஜயபுர பொது மயானத்தில் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். சடலங்கள் மீதான மரண விசாரணையை கெப்பிட்டிகொல்லாவ நீதவான் ராஜா மஹேந்திர ராஜ நடத்தினார். அவருடைய உத்தரவுக்கமைய அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார். நீதவானுடைய உத்தரவுக்கமைய இந்தச் சடலங்கள் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது. உடற்பாகங்கள் மற்றும் இரத்தமாதிரிகள் பதவிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் கதிரேஷன் கோவிலின் குருக்கள் ஞானசந்திரன் இறுதி கிரிகைகளை நடத்தினார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட போது ஊடகவியலாளர்கள் எவரும் மயானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. எனினும் இறுதி கிரியைகளில் கோபியின் மனைவி பங்கேற்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இம் மூவரது இரத்த மாதிரிகளை பொலிசார் பெற்றுக்கொண்டுள்ளார்கள் என்றும் இலங்கை அரசானது, புலிகளின் உறுப்பினர்கள் பலரது இரத்த மாதிரிகளை வைத்துள்ளதாகவும் மேலும் டி.என்.ஏ பதிவுகளை செய்துவருவதாகவும் கூறப்படுகிறது. யார் யார் உறவினர்கள், என்று கண்டறியும் நடவடிக்கைக்கு அது பிற்காலத்தில் உதவும் என்றே இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு செய்துவருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6675
இலங்கைக்கு பெரும் ஆப்புவைத்துள்ள கனேடிய அரசு: பணத்தை முடக்கியது !
15 April, 2014 by admin
இன் நிலையில் கனேடிய அரசு அதிரடியாக ஒரு அறிவிப்பை நேற்று(14) வெளியிட்டுள்ளது. கனேடிய அரசானது ஆண்டுதோறும் சுமார் 10 மில்லியன் டாலர்களை, காமன் வெலத் நாடுகளின் நிர்வாக சபைக்கு உதவித்தொகையாக வழங்கி வருகிறது. இதனைப் பயன்படுத்தியே காமன் வெலத் நாடுகளின் நிர்வாக சபை, கூட்டங்களையும் மாநாடுகளையும் ஒழுங்கு செய்கிறது. ஆனால் நேற்றைய அறிவிப்பின் படி, இனி கனடா அந்த 10 மில்லியன் உதவித்தொகையை வழங்காது என்று அறிவித்துள்ளது. அதனை 2 வருடங்கள் நீடிப்பதாவும் அது அறிவித்துள்ளது. அதாவது மகிந்தர் பொறுப்பேற்க்கும் பொழுது, கனேடிய அரசின் உதவித்தொகை நிறுத்தப்பட்டு இருக்கும்.
இலங்கையில் மனித உரிமை இன்னும் மேம்படவில்லை என்றும், அங்கே இதுவரை தமிழர்களுக்கு சகஜ நிலை தோன்றவில்லை என்றும் கனேடிய அரசு கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இதன் காரணமாகவே தாம் இந்த உதவித்தொகையை நிறுத்தவுள்ளோம் என்றும் அது அறிவித்துள்ளது. இது பெரும் வரவேற்ப்புக்கு உரிய விடையம் ஆகும். அதுமட்டும் அல்ல கனடாவில் வசிக்கும் தமிழர்களின் அரசியல் வெற்றியாகவும் இது கருதப்படுகிறது. இதனைப் போன்ற நடவடிக்கையில் ஏனைய நாடுகள் ஈடுபட்டால், காமன் வெலத் நாடுகளின் நிர்வாக சபையை நடத்தமுடியாத நிலை தொன்றும். தற்செயலாக மகிந்தர் பெறுப்பு ஏற்றால் கூட, அவரால் அதனை வழிநடத்தமுடியாத நிலை தோன்றி, திண்டாடி தெருப்பொறுக்க வேண்டிய சூழ் நிலை தோன்றும். கனேடிய அரசு எடுத்துள்ள இம் முடிவை அனைத்து உலகத் தமிழர்களும் நிச்சயம் பாராட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6677
Geen opmerkingen:
Een reactie posten