விநாயகம், நெடியவனை இலங்கை கொண்டுவர சர்வதேச பொலிசார் உதவி !
14 April, 2014 by admin
நெடுங்கேணியில் அரசு நடத்தியுள்ள நாடகத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது. புலிகள் ஆயுதங்களுடன் இன்னும் இருக்கிறார்கள் என்று சர்வதேசத்தை நம்ப வைத்து, அதனூடாக வெளிநாடுகளில் அரசியலில் ஈடுபடும் தமிழர்களை அடிபணியவைக்கும் முயற்சியை கோட்டபாய அரங்கேற்றியுள்ளார். மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டும் நடவடிக்கைகளுக்கு உதவும் நபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை விரிவுபடுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சிலர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை விநாயகம் மற்றும் நெடியவன் போன்றோறைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அன்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட கோபி உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவருக்கும், மீண்டும் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்க உதவிகளை வழங்கியது இவர்கள் என பாதுகாப்பு பிரிவுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6674
புத்தாண்டில் சர்வதேச விசாரணையை நாம் ஆதரிப்போம்: லேபர் கட்சி தெரிவித்துள்ளது !
14 April, 2014 by admin
பிரித்தானியா மற்றும் உலகமெல்லாம் வாழும் தமிழர்களுக்கு சித்திரைப் புத்தாண்டை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று, பிரித்தானிய எதிர்கட்சி தலைவர் எட் மிலபான் இன்று தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர்கள் பிரித்தானியாவுக்கு பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார்கள். சமூக , கலாச்சார, மற்றும் வணிக ரீதியாக பிரித்தானிய தமிழர்கள் பிரித்தானியவுக்கும் அன் நாட்டு மக்களுக்கும் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளார்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களுக்கும் தான் புத்தாண்டு வாழ்த்தை தெரிவிக்கும் அதேநேரம், இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்கள் தொடர்பாக சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதனையும் தான் வலியுறுத்துவதாக எட் மிலபான் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் ஆழும் கான்சர்வேட்டிவ் கட்சி இதுவரை முறையாக எந்த ஒரு தமிழ் புத்தாண்டு அறிவித்தலையும், இதுவரை விடவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் , இலங்கை சென்றவேளை மட்டுமே தாம் சர்வதேச சுயாதீன விசாரணையைக் கோரவுள்ளதாக குறிப்பிட்டார். அவர் மீண்டும் பிரித்தானியா வந்தபின்னர் இதுவரை அதுதொடர்பாக பெரிதாக பேசவில்லை என்பதும் இங்கே குறிப்பிடப்படவேண்டிய விடையம் ஆகும். ஆனால் எதிர்கட்சியான லேபர்(தொழில் கட்சி) ஈழத் தமிழர் விடையத்தில் இதுவரை அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. அத்தோடு புத்தாண்டு வாழ்த்துக்களை , தாமே கடிதமாக எழுதி, எதிர் கட்சி தலைவரின் கையொப்பத்தோடு அனுப்பிவைத்துள்ளார்கள்.
எதிர்கட்சி தலைவரோடு மிக நெருக்கமான உறவுகளைப் பேணிவரும், தமிழர்களுக்கான லேபர் கட்சி அமைப்பின் முக்கியஸ்தர் திரு சென்.கந்தையா அவர்கள் , தமிழர்களின் பிரச்சனை தொடர்பாகவும், மற்றும் ஈழத் தமிழர்களின் நிலை தொடர்பாகவும் அடிக்கடி எட் மிலபானைச் சந்தித்து விளக்கிவருகிறார். இதன் காரணமாக லேபர் கட்சி ஈழத் தமிழர்கள் நிலைதொடர்பாக நன்கு விளங்கிக்கொண்டுள்ளார்கள் என்று மேலும் அறியப்படுகிறது. 2009ம் ஆண்டு ஈழத்தில் போர் உச்சக்கட்டத்தை அடைந்தவேளை, ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக முதல் முதல் பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தது லேபர் கட்சியின் அப்போதைய வெளிநாட்டு அமைச்சர் டேவிட் மிலபான் ஆகும். அத்தீர்மாணத்தை சீனா மற்றும் ரஷயா தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்துச் செய்ததும் தமிழர்களுக்கு நன்கு நினைவில் இருக்கும். லேபர் கட்சியின் தலைவர் அதிர்வு இணையத்திற்கு அனுப்பிவைத்துள்ள புத்தாண்டு வாழ்த்துக் கடிதத்தை இங்கே இணைத்துள்ளோம்.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6676
Geen opmerkingen:
Een reactie posten