தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 15 april 2014

இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு கொடுமை( வீடியோ வெளியாகியுள்ளது)

5 எம்.பிக்களை கழியாட்டத்துக்கு அழைத்த பின்னணியில் முத்தையா முரளீதரன் !
15 April, 2014 by admin
கடந்த வியாழக்கிழமை(10.04.2014) அன்று லண்டன் கட்விக் விமானநிலையத்தில் இருந்து, பிரித்தானிய எம்.பீக்கள் 5 பேர் கொழும்பு செல்ல ஏற்பாடாகி இருந்தது. இவர்களின் பெரும்பாலானோர் ஆழும் கன்சர்வேட்டிவ் கட்சியை சார்ந்தவர்கள். இவர்கள் கொழும்பு செல்ல பிசினஸ் கிளாஸ் டிக்கெட்(அதி சொகுசு) கொழும்பில் 5 நட்சத்திர விடுதியில் தங்க இடம். மேலும் இவர்களுக்கான சாப்பாட்டுச் செலவு மற்றும் போக்குவரத்து என்று அனைத்து செலவுகளை தாமே பொறுப்பு ஏற்பதாக இலங்கையில் உள்ள தர்ம ஸ்தாபனம் ஒன்று தெரிவித்திருந்தது. இந்த தர்ம ஸ்தாபனத்திற்கு நிதி வழங்குவதும் மற்றும் அதனை கவனித்து வரும் மேற்பார்வையாளர் முத்தையா முரளீதரன் ஆவார் என்ற விடையம் தற்போது வெளியாகியுள்ளது. இவரது மேற்பார்வையில் இயங்கும் குறித்த தர்ம ஸ்தாபனமே பிரித்தானிய எம்.பீகளை தமது செலவில் இலங்கைக்கு அழைத்து அவர்களை வளைத்துப் போட முற்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள கட்விக் விமானநிலையத்தில் இருந்து, இந்த விமானம் கொழும்பு நோக்கிப் புறப்பட சுமார் 11 மணி நேரத்துக்கு முன்னதாக இப் பிரயாணத்தை குறித்த அந்த 5 எம்.பீகளும் கான்சல் செய்துவிட்டார்கள். இது ஏன் நடந்தது ? எவ்வாறு நடந்தது என்பது பலருக்கு தெரியாது. பாராளுமன்றில் லேபர் கட்சி(தொழில் கட்சி) மூத்த எம்.பி ஒருவர் இதனை கடுமையாக எதிர்த்துள்ளார். பிறர் பணத்தில் எவ்வாறு எம்.பீக்கள் இலங்கை செல்லலாம் என்று லேபர் கட்சி எம்.பி கேள்வி எழுப்ப, அதேவேளை சனல் 4 தொலைக்காட்சி இதனை செய்தியாக வெளியிட்டது. இதனையடுத்து நிலை மோசமாகலாம் என்று எண்ணிய அந்த 5 எம்.பீக்களும் ஜகா வாங்கிவிட்டார்கள் என்று மேலும் அறியப்படுகிறது
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6678
இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு கொடுமை( வீடியோ வெளியாகியுள்ளது)
15 April, 2014 by admin
சமீபத்தில் இலங்கை இராணுவம் படையில் இணைந்துகொண்ட பெண்களை துன்புறுத்தும் காசிகள் வெளியாகி இருந்தது. அவ்வாறு துன்புறுத்தும் இராணுவ அதிகாரிகளை தான் கைதுசெய்துவிட்டதாக இராணுவம் பின்னர் அறிவித்தது. ஆனால் அவர்கள் எந்த நீதிமன்றில் இல்லையென்றால் இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்கள் என்று இதுவரை எதனையும் பொலிசார் அறிவிக்கவில்லை. இதேவேளை பெண்களை துன்புறுத்தும் இராணுவத்தினர், படையில் இணைந்த இளைஞர்களையும் விட்டுவைக்கவில்லை. அவர்களையும் அடிக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் உள்ள சில காட்சிகள் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், மீதமுள்ள காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது. சூ கால்களால் இளைஞர்களின் முதுகை அழுத்தி , மேலும் ஜீன்சையும் களற்றி விட்டு இலங்கை இராணுவத்தினர் தடியால் அடிக்கிறார்கள். (வீடியோ இணைப்பு) 


http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6679

Geen opmerkingen:

Een reactie posten