தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 9 april 2014

கிரியுள்ளயில் அடுக்கடுக்காக வெடிகுண்டு: பாதுகாக்கப்பட்ட நிலையில் மீட்ப்பு !

புலிகளின் போர் குற்றவாளியாக அடேல் பாலசிங்கம் அம்மையாரை பழிவாங்க முயற்சி !

08 April, 2014 by admin
புலம்பெயர் நாடுகளில் இலங்கை போர்குற்றம் பற்றி பேசும் சில அரசியல்வாதிகள், "இரு தரப்பு போர்குற்றங்களை" விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள். இந்த "இரு தரப்பு போர்குற்றம்" என்ற சொல்பதம் சிலரால் பயன்படுத்தப்பட்டு வருவதற்கு பின்னால், சில சிங்கள சக்திகள் இருப்பது தெரியவருவதாகவும் அவர்கள் லண்டனில் தங்கியுள்ள அடேல் பாலசிங்கம் அவர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ஆங்கில இணையம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. 

குறிப்பாக நீயூசிலாந்து , இத்தாலி, அமெரிக்கா , மற்றும் பிரித்தானியாவில் வசிக்கும் சில சிங்கள அமைப்புகள் தற்போது இதனை முன் நிலப்படுத்தி வருவதோடு பிரித்தானிய அரசிடம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்கள் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இது மிகவும் ஆபத்தான் கோரிக்கை ஒன்றாகும். விடுதலைப் புலிகள் புரிந்த போர்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த, அன்ரன் பாலசிங்கள் அவர்களின் மனைவி அடேல் பாலசிங்கம் அவர்களை பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தவேண்டும் என்பதே சிங்கள அமைப்புகளால் இரகசியமாக விடுக்கப்படும் கோரிக்கை ஆகும்.

இதுபோன்ற கோரிக்கை பலவற்றை பிரித்தானிய வெளியுறவுத் துறையினர் தற்போது பெற்றுவருவதாக அறியப்படுகிறது. இது நன்கு திட்டமிடப்பட்ட ரீதியில் நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. இலங்கை இராணுவம் போர்குற்றங்கள் இழைத்துள்ளதாகவும் அதனை விசாரிக்கவேண்டும் என்று கூறும் பிரித்தானியா, புலிகளை தாம் விசாரிக்க அனுமதிக்கவேண்டும் என்று இலங்கை அப்படியே பிளேட்டை திருப்பி போட்டு வருகிறது. இந்த நகர்வுகளுக்கு பிரித்தானியா எப்படியான முடிவை எடுக்கும் என்பது தெரியவில்லை என, பிரித்தானிய வெளியுறவுத் துறைக்கு நெருக்கமான சிலர் அதிர்வு இணையத்திற்கு மேலும் தெரிவித்துள்ளார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6649

கிரியுள்ளயில் அடுக்கடுக்காக வெடிகுண்டு: பாதுகாக்கப்பட்ட நிலையில் மீட்ப்பு !

09 April, 2014 by admin


கிரியுள்ள பிரதேசத்தில் வீடொன்றுக்கு அண்மையில் நான்கு கைக் குண்டுகள் மீட்கப் பட்டுள்ளன என அதிர்வு இணையம் அறிகிறது. சிங்கள பகுதியான கிரியுள்ள, லக்மல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே மேற்படி வெளிநாட்டு தயாரிப்பான இக் கைக்குண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் கைக்குண்டுகள் இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே அந்த வீட்டை சுற்றிவளைத்து பொலிசார் தேடுதல் நடத்தியுள்ளார்கள். அனைத்து வெடிகுண்டுகளும் துருப்பிடிக்காமல் இருக்க, கிறீஸ் பூசப்பட்டு மற்றும் சலோ டேப்பினால் ஒட்டப்பட்டு காணப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரை கிரியுள்ள பகுதிக்கு அழைத்த பொலிசார், அக் குண்டுகளை தற்போது செயலிழக்கச் செய்துள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது. மேலதிகவிசாரணைகள் நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6657

Geen opmerkingen:

Een reactie posten