காலா காலமாக தமிழர்களின் போராட்டம் கூர்மை அடைந்த காலங்களில் எல்லாம் அதனை திசை திருப்ப இலங்கை அரசு செய்த சூழ்ச்சிகள் ஏராளம் அதை விட இந்தியா செய்த நய வஞ்சகம் எண்ணிலடங்காது.
இவற்றை குறிப்பாக தமிழர்களிடம் கொண்டு செல்வது என்றால் அதற்கு ஒத்து இயங்கும் ஊடகம் ஒன்று பாரிய தேவையாக இருந்தது. இன்று இதனை செய்வதற்கு விஜய் ரி.வியை ஒரு கருவியாக இலங்கை அரசு பயன் படுத்துகிறதா? இது தான் தற்போது பலரிடமும் உள்ள வினா..
காரணம் பிரபல்யம் மிக்க நிகழ்ச்சிகளைச் செய்த தமிழர் மனங்களில் இடம் பிடித்த இத் தொலைக் காட்சி இன்று தமிழர்களின் அடிப்படை போராட்ட உணர்வுகளை உடைத்து சுக்கு நூறாக்க பயன் படுகிறதா?
ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் பாரிய தீர்மானம் ஒன்று உருவாக்கப்பட்டு அது விசாரணை என்கிற உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதுடன் அதில் சர்வதேச விசாரணை வேண்டும் என விடாப் பிடியாக உள்ளார் பிரித்தானியப் பிரதமர். அது அவரின் தனிப்பட்ட கருத்து என கட்சி கூறிய நிலையில் அதனை பலமுடையதாக்குவதில் பல்லாயிரம் தமிழர்கள் எதிர்வரும் வாரங்களில் பாரிய போராட்டங்களை முன் எடுக்க உள்ளனர், அதனால் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என மனித உரிமை விமர்சகர்கள் பலர் கூறியுள்ளனர்.
இதனை அவதானித்த இலங்கை அரசு இந்திய “ரோ”வின் உதவியை நாடியுள்ளதாக டில்லி செய்திகள் தெரிவிக்கின்றன அதனடிப்படையில் இதனை திசை திருப்புவதற்கான பாரிய திட்டமாக விஜய் ரி.வி எதிர்வரும் ஏப்ரல் 20 இல் பிரித்தானியாவில் களம் இறங்குகிறது.
இன் நிகழ்ச்சி ஜெனிவா கூட்டத் தொடர் காலத்தில் திட்டமிடப் பட்டிருந்ததுடன் அது பல எதிர்ப்புக்களால் கைவிடப்பட்டிருந்ததுடன் அதன் தொடர்ச்சியாகவே இம் மாதம் நடாத்த இருக்கின்றனர்
இதை அவர்கள் நிராகரித்தாலும் கடந்த வருடம் மாவீரர் தின எற்பாட்டு வாரத்தில் கனடாவில் களியாட்டம் அன்மையில் ஐ.நாவின் கூட்டத் தொடர் ஆரம்ப நாளில் இலங்கையில் களியாட்டத்திற்கு தயாரானதுடன் அதனால் பலத்த தாக்கத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தது அம்பலமானது அதாவது இலங்கைக்கு எதிரான பிரேரனை தேவையில்லை மக்கள் குதூகலமாக உள்ளனர் என்ற செய்தியை சொல்ல முற்பட்ட வேளை தமிழ் நாட்டு உணர்வாளர்களால் அந்த ஆபத்து தடுக்கப் பட்டது இவ்வாறாக இந்த அலைவரிசை தமிழ் சிகழ்சி மூலம் தமிழர்களின் முக்கிய சிந்தனைகளை அழிக்க முற்படுகிறதா என்கிற அச்சம் பலரிடமும் உள்ளது.
இலங்கை அரசு இன்றைய காலங்களில் சில வேலைகளை புலம் பெயர் நாடுகளில் செயற்படுத்துவது சிங்களவர்களால் அல்ல மாறாக தமிழர் மற்றும் தமிழ் அமைப்புக்கள் பாரிய நிறுவனங்கள் அந்த வகையில் வெளிநாட்டு தமிழர்களை குழப்புவதற்கு பயன் படும் பாரிய கருவி தொலைக் காட்சிகள் மற்றும் ஊடகம்
அன்மையில் பெறப்பட்ட வெளிநாடுகளில் உள்ள புலிச் செயற்பாட்டாளர்கள் 424 எனும் விபரம் கூட இவர்கள் மூலம் கிடைத்திருக்க வாய்பிருந்திருக்கலாம் காரணம் இவர்களை கடந்த காலங்களல் அழைத்த பலரும் இந்தப் பட்டியலில்…
மற்றய விடயம் விடுதலைப் புலிகள் பலமாக இருந்த நாட்களில் அடக்கி வாசித்த சிலரின் உண்மை முகங்கள் இன்று வெளிப்படத் தொடங்கியுள்ளது அந்த வகையில் “நீயா நானா” நிகழ்ச்சித் தயாரிப்பாளர் கோபிநாத் விடுதலைப்புலிகளின் தலைவரை சிறந்த தலைவர் என்ற கருத்தை நிராகரித்ததுடன் அவ் ஒலிப்பதிவை நீக்கிவிட்டு ஒளிபரப்பு செய்தனர் இனதால் பல எதிர்ப்புகள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுத இங்கு குறிப்பிடத் தக்கது.
விஜய் ரி.வியின் டீடீக் குழுவினர் அன்மையில் இலங்கை சென்று அங்கு அமைச்சர்களின் சகாக்களுடன் குத்தாட்டம் போட்டு தென்னிலங்கையை அதிர வைத்து வட-கிழக்கு மண்ணை எட்டிக் கூடப் பார்க்காத கூட்டம்.
எமது இனத்தைச் சாராத சனல் 4 ஊடகம் தமிழருக்கு நடந்த அநீதிக்காய் போராடும் தருணத்தில் இந்தியாவில் எத்தனை ஊடகங்கள் முக்கிய நிகழ்ச்சிகளை எல்லாம் நிறுத்தி தமிழரின் கண்ணீரில் பங்கு பற்றிய வேளை இந்த ஊடகம் எதைச் செய்தது அல்லது என்னத்தைச் செய்ய முயற்சித்தது? ஒன்றும் இல்லை இவ்வாறாக இவர்களின் தமிழினத்திற்கு எதிரான செயலை கூறலாம் அவ்வளவு அகலமானது.
இதனை இயக்குபவர்களைப் பார்த்தால் தமிழர் என்பார்கள் அதன் பின்னனியைப் பார்த்தால் இந்திய கொள்கை பகுப்பாளர்களிகளின் நேரடித் தலையீடு இருப்பது மட்டும் உண்மை காரணம் இன்றைய நடப்பு நாட்களில் வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்கள் இலங்கை அரசுக்கு பாரிய தலைவலி அவர்களை கையாழ்வதில் இலங்கை அரசு பின்னடைவை கண்டுள்ள நிலையில் அதனைச் சரி செய்வதற்கே இது போன்ற தமிழ் தொலைக் காட்சிகளின் உதவியை நாடி லட்சக்கணக்கில் பணம் இறைக்கிறது இலங்கை அரசு.
இவ் நிகழ்ச்சி ஏற்பாடாயுள்ள நாளில் பாரிய எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழ் அமைப்புக்கள் ஈடுபட உள்ளதான தகவலும் கசிந்த விதமாய் உள்ளது.
http://www.jvpnews.com/srilanka/64999.html
Geen opmerkingen:
Een reactie posten